Wednesday, 14 December 2016

#யாருகிட்ட??!!

துணிந்தவர்க்கில்லை துக்கமும் தூக்கமும்.
துக்கித்துத் தூங்கியவர்க்கில்லை துணிவும் அணியும்.

ஆயின்,
தூங்காரெல்லாம் துணிந்தாரில்லை.
துணிந்தாரெல்லாம் தூங்காரில்லை.
தூங்கியோர் துணியாதாரில்லை.

தூக்க நிலை விழிப்புமில்லை.
தூங்காமல் விழிப்புமில்லை.
தூங்குதல் தவறுமில்லை.
தூங்காது விழித்திருத்தல் பேறுமில்லை.


'#யாருகிட்ட??!!'
'#விட்றதில்ல'

Sunday, 27 November 2016

குட். நவ் ட்டெல் மீ, வாட் இஸ் யுவர் மதர்'ஸ் நேம்?

அ: ஹேய், வாட் இஸ் யுவர் நேம்?

அ: அ

அ: நோ நோ. வாட் டிட் ஐ ட்டெல் யூஉஉ? ஸே இன் ஃபுல் சென்ட்டன்ஸ். வாட் இஸ் யுவர் நேம்?

அ: மை நேம் இஸ் அ

அ: குட். வாட் இஸ் யுவர் மதர்'ஸ் நேம்?

அ: அம்மா!

அ: ஒஹ்ஃப்ஓ.....ஓகே. வாட் இஸ் மை நேம்.?

அ: மை நேம் இஸ் அ.

அ: ஹ்ம்ம்.....மை மைஐ நேம்..டெல் மீ, வாட் இஸ் மைஐ நேம்?

அ: மை நேம் இஸ் அ.

அ: குட். நவ் ட்டெல் மீ, வாட் இஸ் யுவர் மதர்'ஸ் நேம்?

அ: அம்மா!

அ: ம்ஹ்கூம். வாட் இஸ் யுவர் ஃபாதர்'ஸ் நேம்?

அ: அப்பாஆ.

அ: வாட் ஈஸ் ஹிஸ் நேஏம்.? நேம் நேம்.

அ: 'அ' அப்பா!

அ: 😤😭😫😩😴

#ஒமஎகாஎஉதெ
#அ^3பாறைகள்

Tuesday, 1 November 2016

ஓஹ். ப்ரூ எலுமிச்சங்கா ஊறுகா
அப்பா அது என்னப்பா Bru ஊறுகா?

டே டே டேய், வேணாண்டா. அது உள்ள இருக்குறது எலுமிச்சங்காய் ஊறுகாடா. Bru பாட்டில்ல போட்ருக்காங்க.

ஓஹ். ப்ரூ எலுமிச்சங்கா ஊறுகாயா??...அப்ப சரி.😈🙅👘

😄😱😨😝🙆🙋🙌

#ஒமஎகாஎஉதெ #அஜய்பாறைகள்

Saturday, 29 October 2016

A^3Rocks அ^3பாறைகள், A^3S'rocks அ^3ஶ்ரீபாறைகள்,
கடந்த ஒரு மணி நேரமாக அநன்யாவின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.  விடாத அழுகை, கீழே விழுந்து இடது கையில் சிராய்த்ததற்காக வலது கையைப் பார்த்து / காண்பித்து முதல் அரை மணி நேரம்.

மீதம் அரை மணி?
அதைப் பகடி செய்த அஜயார் காரணம் கொண்டு அடுத்த அரை மணி நேரமாக, சிராய்ப்புப் காயத்தை வலது கையில் காணவில்லை என.

#AnanRocks #அநன்யாபாறைகள் #அநன்யபாறைகள் #அநன்பாறைகள் #ஒமஎகாஎஉதெ


--------------///--------------///--------------

"டே அநன்யா அந்த வாட்டர் பாட்டிலை கொண்டு வா."

"நான் மாட்டேன் அப்பாகிட்ட கேள்."

"ஏன்?"

"எனக்கு கையில் அடி பட்டிருக்கு. "
 ( "குட் அநன்யா" இது யாராயிருக்கும் என்கிறீர்கள்? என்கரேஜ் பண்றாராம்.)

"ஹ்ம். அந்தக் கையால எடுத்துட்டு வாயேஎன். "

மறுபடியும் ஆர்ப்பாட்டம் தொடக்கம்...... அந்தக் கையில் காயத்தைக் காணவில்லையாம்.

மறந்து இருந்ததை நினைவு படுத்தியாயிற்று. இம்முறை இது அகிலாவின் கோட்டா.

#அ^3பாறைகள் #A^3rocks #A^3S'Rocks7

Friday, 5 August 2016

ஜான்சன் வந்தார் (அ) எல்லி பரு பேக்கு (அ) விழித்தேன்!!??😂 #2/2


ஜான்சன் வந்தார் (அ) எல்லி பரு பேக்கு (அ)  விழித்தேன்!!??😂       #2/2


அடுத்த 3-5 நிமிடங்கள் பிறகு நமது அன்றைய வாகனத்தோடு அதன் சாரதிகள் வருவர்.

எல்லாம் நல்லா போச்சி +  தினம் ஓர் 200-210 ரூபாவும் சேர்த்து........


அப்படியான ஒரு நாள் காலையில்..........

[நம்ம சாரதிகளில் சொல்ல விட்டுப்போனவங்க ரெண்டு பேர் சர்வணா வும் ஜான்சனும்]

ஜான்சன் புக்கிங் எடுத்தார்.
மொதோ கேள்வி :"பேமண்ட் கேஷா ஓலா மணியா" {ஒருவேளை மாதத் தொடக்கத்து 3ம் தேதி என்பதால் இருக்கலாம்}.

"கேஷ் கொடுத்தினி"

"ஓ.கே."

கீழே வந்து காத்திருக்க, 5 நிமிடம் ஆனது.

இன்னும் ஜான்சனைக் காணோம். அவர் அழைப்பும் இல்லை.
சரி. மேலே போய் எம்குல இளம்கொழுந்திடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்தேன்.

நல்லா ஒரு முறை ஏற இறங்க என்னை பார்த்த பின், அவரும் ஒருமுறை வந்து வெரிஃபை செய்து கொண்டார்.

ஃபோனில் ஜான்சனை அழைத்து கேட்டார்.

"நான் பந்பிட்டு காய்த்தாயிதினி"

"எல்லி"

"அதே அப்பார்ட்மெண்ட்டூ கிளகே" 👍👌

"நமகே காணுஸ்த்தாயில்வல்லா"

"ஹ்ம். கிளகடே பந்து நோடிரி. மேலே இத் கொண்ட் நோடுதரே ஆகுத்தா"

😚😣

"குரு, நாவு கிளகடேனே நிந்த்திதிவி. நீவெல்லிதீரா"

"அல்லே தேவஸ்த்தானா பஃக்க அபார்ட்மெண்ட் ஹத்திரா"

"ஹவ்தா....சரி. சொல்ப மெயின் ரோடுகே பண்ணி."😇

"ஹான் பந்தே"

😢

"ஹலோ ஜான்சன் சார் எல்லி"

"மெயின் ரோடல்லே இதினி. நீவு கிளகடே பண்ணி"???!!!

"எல்லிதிரப்பா....ஷிவ டெம்பிள் ஹத்ரானா"

"ஹ்ம்ரீ"

"ஓ.கே" {புரிந்து விட்டது 50மீட்டர் தூரத்திலிருக்கும் ராமர் கோவிலருகில் இருக்கிறார் - அஙகும் அப்பார்ட்மெண்ட் உண்டு}

நடந்து அங்கேயே போய் ஃபோனில் அறிமுகம் ஆகலாம்.😇 நட.

அங்கு கோயில் அருகில் இருந்து, நான் "சார் எல்லிதீரா"

"ஏனு சார், பெளகே இஷ்டு லேட் மாடுத்தீரா......இல்லேனே நனகு ஹத்து நிமிஷா ஆகோகித்து. பர்த்தீரா இல்வா? கிளகடே பண்ணி மொத்லூ, பந்து நோடி"😑😮😱😵

"சார், நான் கெளகேனே இதினி. சொல்ப, நீவெல்லிதீரா அதன்னு ஹேளி"

"......~|\_=+×÷?°''";;:"

☺ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தவரை கண்டு பிடித்தாயிற்று. 😇

ஆள் பார்க்க, ஏதோ எப்போதும் டென்ஷனில் இருப்பவர் போல இருந்தார்

"சார், பண்ணி சார் பேக!!??"

ஏறி அமர்ந்து கேட்டேன்/சொன்னேன்.

"ஏன் சார், இல் பந் பிட்டிதிரா அல்லி பருபேக்கல்வா"

"அஃதே சார் ஷிவா டெம்ப்பிலு"


"சார், இது ராமா தேவஸ்த்தானா. நீவு பருபேக்காகித்து ஷிவா டெம்ப்பிள்ஹத்தரா. அது ஆக்கடே இஃதே"

"சார், எல்லா ஒந்தேனே. ராமா ஷிவா எல்லா நமகே கொத்து சார் "
😳😳😳🤔🤔🤔😂😂😂😂😆😆


???!!!!@##$%^&*(°😢😂😵😱😰🙅🏃

What. ஜான்சன்!!!??? 🙅😵😱 அத்வைதி???!!!😵😵

நல்ல வேளை அங்கேயே என்னை இறக்கி விட்டு "இஃதே சார் நிம்ம ஆஃபிஸு" என ஹேளவில்லை.

******////*****////*******

உங்களுக்கு எந்த ஊரு ன்னு கேட்டா, நமக்கு கோயம்புத்தூருங்கனு கூசாம சொல்லிட்டு,

அப்புறம் கொஞ்சம் அங்க எங்கனு கேட்டா, கோயம்புத்தூர்லயிருந்து பொள்ளாச்சிபோய்ட்டு, பொள்ளாச்சியிலிருந்து பக்கந்தாங்கம்பான்.
சரி பொள்ளாச்சியில எங்க..........

- / -
- / -
- / -
- / -
- / -

ஜான்சன் வந்தார் (அ) எல்லி பரு பேக்கு (அ) விழித்தேன்!!??😂 #3/2

- / -
- / -
- / -
- / -
- / -

--------------///*********///------------------

இதுக்கு கிடச்ச வேறு பல தலைப்புகள் :

ஜான்சன் வந்தார்!!😬

விழித்தேன் = விழிப்பு நிலை அடைந்தேன்!!!😊

ஓடி ஓடி ஓலா புடி..........😬😬😬😬😬

வந்த ஓலாவும், வராத ஓலாவும்.

எல்லி (பரு) பேக்கு?

காடி தேடி ஓடி--சொல்ப அட்ஜஸ் மாடி.


த்தூ....நானும் எவ்வளவோ அட்ஜஸ்ட் பண்ணேன்.....    ***[!!!???:-)]

சரி இது எப்படி இருக்குனு சொல்லு, "காடிக்குள் ஜோடி", "அவசரத்துல அஞ்சு பேர்" 😳😄 

Thursday, 4 August 2016

ஜான்சன் வந்தார் (அ) எல்லி பரு பேக்கு (அ) விழித்தேன்!!??😂 #1/2


ஜான்சன் வந்தார் (அ) எல்லி பரு பேக்கு (அ)  விழித்தேன்!!??😂     #1/2

பெங்களூர் போன கொஞ்ச நாள் நம்ம வழக்கப்படி, அரை/முழு தூக்கத்துலயே காலங்காலைல கிளம்பி வேலைக்கு ஆஃபிஸ் போய் வந்துட்டு இருந்த போது, இருந்த பகுதியில், இருக்கும் கோதண்ட ராமா தேவஸ்த்தானா ராஸ்தால இருக்கும் ஷிவா டெம்ப்பிள் (:-) பக்கத்துல இருக்கும் அப்பார்ட்மென்ட்டூல இருந்து அங்கிருந்து 12கி.மீ தூரத்தில் இருக்கும் ஆஃபிஸுக்கு, ஒரு பத்து பதினஞ்சு நாள் போல இருக்கும் நம்ம சென்னப்பா, முருகேஷ், ஜகந்நாதன், சுரேஷா, பவுல், ரகு, பெய்க்,  வினு இவங்களோட எல்லாம்தான் சேர்ந்து ஆட்டோல போகுறது. இத்தன பேர் ஒரே ஆட்டோலயா?.....no no.

இவங்கள்லாம் யாரா? ஓலா ஆப்ல புக் பண்ணி ஆட்டோ புடிச்சி குடுத்த எம்குல இளங்கொழுந்து தர்மசம்வர்தினி என்கிற தர்மாம்பாள் புண்ணியத்தில் எனக்கு வாய்த்த மூருருளிச் சாரதியர். அது காலை / மதியம் / மாலை மற்றும் இரவு வேளைகளில் பஸ்ஸில் போக(மட்டும்) முடியாத ஒரு வகை காம்ப்ளிகேட்டட் ரூட். [அதுனால இங்க அந்த இடத்துல இருந்து (பஸ்ஸுல) போகாமயே வரலாம்😂].

கட்டாததை எப்படி அவிழ்ப்பது? (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த?

பெங்களூர் புகழ் ஒன்-வேக்களால் அந்த இடத்திற்கு பஸ்ஸில் வரும் / போகும் வழிகள் வேறு வேறு. மேலும் குறைந்தது 3 [2 BMTC + 1 shuttle bus ஃகேட்டிலிருந்து பில்டிங்குக்கு] பேருந்து மாறிச் செல்ல வேண்டியிருக்கும்+1.5கி.மீ நடை.


காலை புக்கிங் உரையாடல் இப்படிப் போகும்.

"புக்கிங் ரிக்வஸ்ட் பந்திதே. ஆ ராஸ்ததல்லி யாவுக்கடே பரு பேக்கு?"

"ராமா டெம்பிள் ஸ்டீரீட் அல்லி கொனேயல்லி ஷிவா தேவஸ்த்தானா இதேயல்வா....அதரு பக்கதல்லி இருவ அப்பார்ட்மென்ட்டூ. அல்லெ பந்பிடி. நானு கிளகே பர்த்தினி"

"ஓ.கே"

அடுத்த 3-5 நிமிடங்கள் பிறகு நமது அன்றைய வாகனம் / சாரதி வருவர்.

எல்லாம் நல்லா போச்சி +  தினம் ஓர் 200-210 ரூபாவும் சேர்த்து........


அப்படியான ஒரு நாள் காலையில்..........

Sunday, 26 June 2016

தேங்கா மரம்.
"அப்பா இது என்ன மரம்"

"தென்ன மரம்டா"

"ஒஹ் தேங்கா மரமா"

"ஹெ ஹெ தேங்கா மரம்  இல்லடா, தென்ன மர்ரம்😇"

"(தென்ன மரமா) அப்டீனா?"

"அப்டி கேளு.........எர்ர்....😳🤔 ம்ம்ம்......கோகனட் ட்ரீ😇🙌🏽"

"அதான் நானும் சொன்னேன் - தேங்காஆ...மரம்ம்👍🏼👊🏼"

"🤔😤💤😁"

|||..........///..........///..........///..........///..............///...........///..........|||                                        
"ஹ்ம் நா தமிழ்ல சொன்னேஏன் நீ இங்லீஷ்ல சொன்னஅ. கரெக்டா?...😇😝இல்லல....ப்பா?"


"????!!!@#$%^&*()~|\:=+×÷?°"':;-/ௐ:D:);):-):-O:-|:|:-P₹௧௨௩௪௫௬௭௮௯]०`√£¢€¥{}[]௺௶௷௸௳௴௵௰௱௲℃℃®©★■◆●><|" 😳😟🤔🙄😡😤"


"😻"      

#ஒமஎகாஎஉதெ
#அஜய்பாறைகள்