Pages

Monday, 18 February 2019

காதல் கீச்சுகள் - 9



iK way (@iKwayMusings) Tweeted:


உன்
நிராகரிப்புகளை
அடுக்கி
வைத்துச்
சீர்
பிரித்துப்
பார்க்கிறேன்.

ஆகர்ஷிக்கின்றன
இப்போது
பொருள்
புரிந்த
உன்
பார்வைகள்
கவிதையாய்.



#காதலியல்
#தீராக்காதல்


https://t.co/42Cj57Pcni https://twitter.com/iKwayMusings/status/1087674679836368897

Saturday, 16 February 2019

காதல் கீச்சுகள் - 1




iK way (@iKwayMusings) Tweeted:


ஊடாடும்
காதலதைக்காண
கண்
கோடி
வேண்டும் தோறும்
இருக்கும்
இரு கண்களையும்
மறைக்கிறது
உன் காதல்
கல்ப காலம்
கண்டும்
மீறும்
இச்சங்கல்பம்
காண
இன்னும்
இன்னும்
வேண்டும்
ஊடலும்
அதன்
ஊடாடும்
காதலும்


#காதலியல்
#தீராக்காதல்

https://t.co/VXaYl79GXo https://twitter.com/iKwayMusings/status/1080478622337720321?s=17

காதல் கீச்சுகள் - 8




iK way (@iKwayMusings) Tweeted:


எதிர்ச் 
சொல் 
இல்லாத 
ஒரே சொல்லல்லவா 
முத்தம்!!!
முத்தம் கொடுத்தல்= 
முத்தம் பெறுதல்.

எப்படி 
கொடுத்து 
விட்டு மட்டும் 
போவது?

பேசத்தான் சொல்லும் அதன் விதிகளும் வேண்டும் என்கிறாயா?

கட்டளைகளைத்தான்
சற்றே இலக்கணத்தோடு இயைந்து போடேன்.

மீறவும் 
அங்கு
வேண்டுமல்லவா ஒரு விதி!


...
மீறவும் 
அங்கு
வேண்டுமல்லவா ஒரு விதி!

சரி,
முத்தங்களாலே 
பேசிக்கொள்கிறேன்....



#காதலியல்
#தீராக்காதல்

காதல் கீச்சுகள் - 7




iK way (@iKwayMusings) Tweeted:


தளும்பி
நிற்கும்
நீரளவு,
முகடு
ததும்பி
விட்டால்
தங்காது.

உந்தன்
தவிப்பில்
இன்பமோ
ததும்பினாலும்
காட்டாறு....

இரண்டையும்
இரசிக்க
நினைப்பதும்
அதை
மறைப்பதற்கே
என் தவிப்பும்.



#தீராக்காதலியல்


https://t.co/yhdOSoEDHE https://twitter.com/iKwayMusings/status/1086972219685654528

காதல் கீச்சுகள் - 6




iK way (@iKwayMusings) Tweeted:
@Muthu__kkdi @DarvinDsc

வானத்தாள்
உதறிப்பிரித்து
சிதறிய
நட்சத்திரங்கள்
தெளித்து
ஓரக்கோடிட்டது
மாலை நேரம்.

ஆர்வமாய்
காத்துப்
பார்த்திருந்தேன்...‌.
இன்று
நிலவு
எழுதும்
கவிதை
படிக்க,

பிறகே தெரிந்தது
இந்த இரவின்
நிலவு ஓவியையானது.

என்னவள்
விரல்களைத் தூரிகையாக்கி
என் மேலெழுதிய
கோலங்கள்.



#காதல்கோலங்கள்
#தீராக்காதலியல்

 https://twitter.com/iKwayMusings/status/1086837351911849985

காதல் கீச்சுகள் - 5



iK way (@iKwayMusings) Tweeted:


ஒரே பிரபஞ்சமென்றா சொல்லிக்கொண்டு இருக்கிறது இன்னும்
அறியாமையில்
ஆழ்ந்த இவ்வுலகு?

இதுவரை நீ உறைத்த சொற்கள்
ஒவ்வொன்றும் ஒரு பிரபஞ்சமல்லவா எனக்கு?

பன்மை இல்லாதிருந்தது இதுவரை.
அறிந்த பின்
தமிழும்,

பிரபஞ்சங்கள் என்றான பின்
இயற்பியலும்
காதலியல் ஆனது.

கருந்துளை அகராதி நீக்கம்.



#காதலியல்
#தீராக்காதல்

https://t.co/LYDQXpW4uo https://twitter.com/iKwayMusings/status/1085963134483992583

காதல் கீச்சுகள் - 2




iK way (@iKwayMusings) Tweeted:


நான்
காதலித்துக்
காதலித்து
களைப்படைகிறேன்

உன் ஸ்பரிசம் எனும்
பேறு பெற்ற காற்றின்
பெருமூச்சு உட்கொண்டே
மீண்டு பெரும் காதல் கொள்ள

ஆக்சிஜனேற்றம்
வேதியியல் மட்டுமல்ல
காதலியலும் கூட.

#காதலியல்
#தீராக்காதல்

https://t.co/lsLR8v3iSY https://twitter.com/iKwayMusings/status/1082693641079001088

காதல் கீச்சுகள் - 4




iK way (@iKwayMusings) Tweeted:

@grapes_farmer

எல்லாமும்
நீயாக
ஆனபின்பும்
ஆச்சரியப்பட
இருக்கும்
கொஞ்சம்
நான்!!

என்னிலுள்ள
நீயும்
உன்னிலுள்ள
நானும்!!

#காதலிசம்
#தீராக்காதல்

 https://twitter.com/iKwayMusings/status/1080017928995651585

காதல் கீச்சுகள் - 3



iK way (@iKwayMusings) Tweeted:

கதிரவனைக்
கொண்டு
காலையில்
வைத்துவிட்டுப்
போன இரவு வந்து எங்கே என்று கேட்டால் என்ன சொல்ல?

பனித்துளிகள் ஒளித்து வைத்து விளையாடுகின்றன என்று சொல்லித் தப்பிக்கவாவது செய்யலாம். தியாலத்தில் தீரும் கேள்வியது.

இச்சோக பிம்பம் வைத்து விட்ட காதல் கேட்டால் என்ன சொல்ல?
தீராக்காதலது!!


#காதலியல்
#தீராக்காதல்



https://t.co/HMoQK9yggQ https://twitter.com/iKwayMusings/status/1083671254949867520