Pages

Thursday, 4 August 2016

ஜான்சன் வந்தார் (அ) எல்லி பரு பேக்கு (அ) விழித்தேன்!!??😂 #1/2


ஜான்சன் வந்தார் (அ) எல்லி பரு பேக்கு (அ)  விழித்தேன்!!??😂     #1/2

பெங்களூர் போன கொஞ்ச நாள் நம்ம வழக்கப்படி, அரை/முழு தூக்கத்துலயே காலங்காலைல கிளம்பி வேலைக்கு ஆஃபிஸ் போய் வந்துட்டு இருந்த போது, இருந்த பகுதியில், இருக்கும் கோதண்ட ராமா தேவஸ்த்தானா ராஸ்தால இருக்கும் ஷிவா டெம்ப்பிள் (:-) பக்கத்துல இருக்கும் அப்பார்ட்மென்ட்டூல இருந்து அங்கிருந்து 12கி.மீ தூரத்தில் இருக்கும் ஆஃபிஸுக்கு, ஒரு பத்து பதினஞ்சு நாள் போல இருக்கும் நம்ம சென்னப்பா, முருகேஷ், ஜகந்நாதன், சுரேஷா, பவுல், ரகு, பெய்க்,  வினு இவங்களோட எல்லாம்தான் சேர்ந்து ஆட்டோல போகுறது. இத்தன பேர் ஒரே ஆட்டோலயா?.....no no.

இவங்கள்லாம் யாரா? ஓலா ஆப்ல புக் பண்ணி ஆட்டோ புடிச்சி குடுத்த எம்குல இளங்கொழுந்து தர்மசம்வர்தினி என்கிற தர்மாம்பாள் புண்ணியத்தில் எனக்கு வாய்த்த மூருருளிச் சாரதியர். அது காலை / மதியம் / மாலை மற்றும் இரவு வேளைகளில் பஸ்ஸில் போக(மட்டும்) முடியாத ஒரு வகை காம்ப்ளிகேட்டட் ரூட். [அதுனால இங்க அந்த இடத்துல இருந்து (பஸ்ஸுல) போகாமயே வரலாம்😂].

கட்டாததை எப்படி அவிழ்ப்பது? (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த?

பெங்களூர் புகழ் ஒன்-வேக்களால் அந்த இடத்திற்கு பஸ்ஸில் வரும் / போகும் வழிகள் வேறு வேறு. மேலும் குறைந்தது 3 [2 BMTC + 1 shuttle bus ஃகேட்டிலிருந்து பில்டிங்குக்கு] பேருந்து மாறிச் செல்ல வேண்டியிருக்கும்+1.5கி.மீ நடை.


காலை புக்கிங் உரையாடல் இப்படிப் போகும்.

"புக்கிங் ரிக்வஸ்ட் பந்திதே. ஆ ராஸ்ததல்லி யாவுக்கடே பரு பேக்கு?"

"ராமா டெம்பிள் ஸ்டீரீட் அல்லி கொனேயல்லி ஷிவா தேவஸ்த்தானா இதேயல்வா....அதரு பக்கதல்லி இருவ அப்பார்ட்மென்ட்டூ. அல்லெ பந்பிடி. நானு கிளகே பர்த்தினி"

"ஓ.கே"

அடுத்த 3-5 நிமிடங்கள் பிறகு நமது அன்றைய வாகனம் / சாரதி வருவர்.

எல்லாம் நல்லா போச்சி +  தினம் ஓர் 200-210 ரூபாவும் சேர்த்து........


அப்படியான ஒரு நாள் காலையில்..........

No comments:

Post a Comment