Pages

Friday, 25 December 2015

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1


சில பல காலம் முன்பு நான் சில காலம் ஓர் கணிப்பொறி தயாரிப்பு நிறுவத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். சேர்ந்தது முதல் பல இனிய வித்தியாசமான அனுபவங்கள்.

அதில் ஒன்று : அந்த வேலையில் சேர்ந்து தொடங்கும் நேரத்தயது , கம்பெனி மாறி வேறோர் ஊரிலிருந்து வந்து சென்னை அண்ணா நகரில் நண்பர்களின் அறையில் தாற்காலிக வாசம் செய்வதாக  திட்டம். புது ஏரியா. 6 ந் தேதி கம்பெனில ஜாயினிங் போர் மாலிட்டி முடிக்க 4ந் தேதி காலைல கோயம்பேடு பேபேபே....ருந்து நிலையத்துக்கு வந்து இறங்க வேண்டும். பேருந்து வந்து சேரும் நேரம் காலை 6.30 - 7.00 மணி.

நமக்குதான் நட்பு வட்டம் இறுக்கமா..அதாவது ஸ்ட்ராங். அறையில் இருந்த நண்பரில் ஒருவன் மிக ஆர்வமாக தானே காரில் வந்து என்னை கோயம்பேட்டிலிருந்து அறைக்கு அழைத்து செல்வதாக வாலண்டரி சத்தியம் செய்தான் - சார் மார்கெடிங் சர்வீஸ் டெக் ட்ரைனிங் சைடில் இருந்ததால் அலுவலக கார் இருந்தது - காலை என்பதால் என்னை அறையில் கொண்டு விட்டபின் அவர் அலுவலகம் செல்லலாம்.

பேச்சிலரா இருந்தாலும் 9 வருஷம் ஆணி அடிச்சு ஒரே எடத்துல இருந்ததுல நிறைய மூட்டை முடிச்சு. அத்தனைக்கும் ஆசைப்பட்டு தூக்கி வந்தாச்சு.  அத்தனையையும் எடுத்தாலும் பேக்கேர்ஸ் கு காசு குடுக்க முடியாதுங்கறதால கிடைச்ச கே எஸ் ஆர் டி சி ஐராவதா லக்கேஜ் பூட் உள்ளே கண்டக்டர் சுதாரிக்கும் முன் 21 உருப்படி மூட்டை முடிச்சு பெட்டி பைகளை ஏற்றி விட்டு அமர்ந்தேன்.....டீசென்டான கண்டக்டர் லைட்டா புலம்பிட்டு (=என்னை திட்டிவிட்டு) மற்றவர்களை கவனிக்க சென்றார். பயணம் சாதரணமாகவே சென்றது.

இறங்கி எப்படியும் நண்பர் காரில் வருவதால் ஒன்றும் பிரச்சினை இல்லை. வேறு எந்த வழியிலும் அவ்வளவு மூட்டைகளை கோயம்பேட்டிலிருந்து ஒத்தை ஆள் எடுத்துசெல்ல முடியாது.

வருது அவாஸ் அன்ஜிங் என்பது அப்போழுது தெரியாது.......



தொடர்புடைய இடுகைகள் :

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4

1 comment:

  1. எப்ப நடந்தத இப்ப எழுதற?? தினமும் எழுதேன்.. அதான் நல்லா எழுத வருதில்ல? எழுத எவ்வளவு விசயம், அனுபவம் எல்லாம் இருக்கு?!

    ReplyDelete