Pages

Wednesday, 10 February 2016

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.....

முனகி கொண்டிருந்த ஃபோன எடுத்து என் மாமணிக்கு ஃபோனினேன்.

ஒரு கால், ரெண்டு கால், மூணு கால்,...............எட்டாவது காலில் லும் எடுக்கவில்லை....

இப்போது நிலைமை "ஓடும் ரயில் வண்டியிலிருந்து", "இடை நில்லாப் பேருந்து ஆகிவிடும் போன்றிருந்தது".

ஃபோனும் ஒரு கோடு பேட்டரியோடு உயிர் பிழைத்திருந்தது.....

ஒரே கால் ஒருக்கால் போகா விட்டால் என்ன செய்ய....
மட்ட உரிச்ச தேங்காய உருட்டி விட்டா அது நிலை வந்து சேர்றதுங்கறது இருக்குற குடுமி எடையைப் பொருத்தது. இங்க அதையும் இல்ல பிச்சிப் போட்டு உருட்டி விட்டு இருக்கு. வாழ்க ஐசக் நியூட்டன்!!

இப்போ பாத்து தெரியாத ஒரு நம்பரிலிருந்து 2-3 மிஸ்ட் கால்.
எடுக்கல.
இருக்குற சொச்ச பேட்டரியும் செத்து போயிடுச்சுன்னா........

சரி எதுக்கும் விசாரனைய தொடங்கலாம். இதுவரைக்கும் மொத்தம் மூணு 3 அபார்ட்மெண்ட் காம்பௌண்ட் இருக்கு அந்த ரோட்டுல. ஆனா எதுலயும் வெளில  நாலு கார் நிக்கல. 

இறங்கி கேக்கலாம்.
கேட்ட ரெண்டுலயும் இருந்தவங்க உள்ள விடாம அட்ரஸ் கேக்கவும் உரைத்தது இப்படி ஒரு விஷயம் இருக்கு இல்ல.... இப்ப யோசிச்சு என்ன பிரயோஜனம்.

ரணகளத்துலயும் ஒரு குதூகலம் இல்லன்னா எப்படி? விசாரித்தவரையில் ஒரு வீட்டில் பிட்டு வைத்த குட்டித் துண்டு ஒன்று லட்டு போலவே இருந்தது. பூந்திகள் சேர்ந்து லட்டென்றவன் எவன்?. சிந்தித்திருந்த வேளையில் தட்டியது  பல்லிடுக்கில் கிராம்பு துண்டு. வேறொன்றுமில்லை அவங்க அப்பா வந்து கதவு சார்த்தி போனார். லட்டில் கிராம்பும் ஏலமும் போட்டவன் எவன்??!!

மணி 9.30.

8 மணிக்கு பயணம் ஆரம்பித்து பத்து நிமிட தூரம் கடந்தால் அப்போது மணி 9.30 உம் ஆகக்கூடுமென்ற பேருண்மையை உரைத்தது. வாழ்க ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!!! ( கிலுகிலுப்பை கவிதை ).

இப்போது மறுபடியும் அதே தெரியாத??!! ஒரு நம்பரிலிருந்து 2-3 மிஸ்ட் கால். எடுக்கல. {இப்போ அது தெரிஞ்ச நம்பரா இல்ல தெரியாத நம்பரானு டவுட்}

மறுபடியும். ஏற்கனவே மிஸ்ட் கால் வந்து அது தெரிஞ்ச நம்பரா போய்ட்டதால??!! இப்போ எடுத்து பேசினேன்.

சார் நான் (மாமணி யோட ரூம் மேட்) பேசறேன். (:-).....இப்போதான் அவரு மெசேஜ் பன்னாப்டி. அவரு மீட்டிங்ல இருக்கறதால எடுக்க முடியலாம். எங்க இருக்கீங்க.....

ஆஹா...., சொல்லுங்க பாஸ். வீட்ட தேடிட்ருக்கேன்.

ஓஹ் அப்படியா....அது ரொம்ப சிம்பிள் சார், 
3 மாடி அபார்ட்மெண்ட், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.......

(என்னாது)....!@#$%^&*()​+​)((*&^%$#@! மறுபடியும் முதல்லேர்ந்தா??!!

இல்லங்க நான் இப்போ அந்த ரோட்டுலதான் இருக்கேன், கொஞ்சம் நம்பர் அட்ரஸ் சொல்லுங்க.

அப்படியா,,,சரி சரி, இந்த லெஃ ப்ட் ல பாத்திங்கன்னா ஒரு ரிலையன்ஸ் ஃபிரஷ் இருக்கும் {இது எவ்ளோ நல்லா இருக்கு அட்ரஸ்} அதுலேர்ந்து மூணாவது பில்டிங் வந்திங்கன்னா வீடு. நீங்க வாங்க நான் வெளில வந்து நிக்கிறேன்.  {அப்புறம் ஏன்டா ஆவாஸ் அன்ஞிங் ஆவாஸ் அன்ஞிங்னு கிலிய கூட்டுறீங்க}

நன்றிங்க.......

போனோம். நீங்கதானா அது ரெண்டு மூணு தட அந்த வண்டில கிராஸ் பண்ணிற்றுந்தீங்க....நான் கூட ஏதோ அட்ரஸ் தேடிட்ருப்பாங்க போலன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
{இதற்கு என்ன பதில் சொல்வது.....ஏன்னா நம்ம கிட்டதான் அட்ரஸ் இல்லையே - அப்புறம் எப்படி அட்ரஸ் தேடுறது??}

நீங்க ஆட்டோ ல இல்ல வருவீங்கன்னு சொன்னாப்டி. {ஒஹ் இப்படி ஒன்னு இருக்கா? ஆட்டோ காரரோட நமக்கு வாய்க்கா வரப்பு பிரச்சினைனு  இவருக்கு சொல்லலாமா???} {பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாம்}.

இங்கதான் சார் நல்ல தண்ணி போர் வாட்டர் கிடைக்குது அதான். நல்ல இடம் சார். ரூம் மேல 3வது ஃப்ளோர். வாங்க போலாம். நான் என் சீனியர பார்த்தேன். கார பார்க் பண்ணிட்டு வந்தார்.......அப்ப்பாடா ஒரு வழியா வந்தாச்சு. பக்கத்துல இன்னொரு கார் சத்தம். ஒருத்தர் பார்க் பண்ணிட்டு ரிலையன்ஸ் ஃபிரஷ் பாக்கம் நடந்து போனார். இப்போ வெளில பார்த்தேன். நாங்க வந்த காரோட சேர்த்து  நாலு கார் இருந்தது.......(;-)


அவரோடு சேர்ந்து மேல போகும்போது சொன்னார், மூனே  ஃப்ளோர்ங்கறதால லிஃப்ட் லாம் இல்ல படிதான். 
ஓக்கே. இப்போ 21 லக்கேஜ நினைத்து பார்த்தேன். டிக்கி முதல் அக்கி வரை அள்ளி எடுத்து வந்தவைகளை இறக்கி வைக்க முடியாது போல. எவ்வளவோ.......ம்ஹ்ம்ம் ஹூம் வேண்டாம்.

நெக்ஸ்ட் டு நெக்ஸ்ட் மன்ந்த் எனக்கு கல்யாணம். அதுக்கப்புரம் ஃபாமிலி இங்க வருவாங்க. பசங்க வேற இடம் போறாங்க. நீங்க அவசியம் மாரேஜுக்கு வரணும். [நல்ல விதமாகவே சொன்னார்]. {ஒரு புதிய நன்பேண்டா.}

ஓ சந்தோஷம். வாழ்த்துக்கள். 

போனால் அங்கு நல்ல பெரிய 2BHK வாதான் இருந்தது. என்ன கொஞ்சம் அவரோட கல்யாண ஏற்பாட்டுல வீட்டு சாமான் சேர்த்திருந்தார்.

நன்று. ஸிறப்பு ஸிறப்பு. மகிழ்ச்சி.

இப்போ சீனியர பாத்தேன். அவர் புரிந்தவராக, நீ எப்படியும் தாற்காலிகமாக தான இங்க இருப்ப...ஆஃபிஸ் போக வசதி எப்படியும் வேற ஏரியா தான். நானும் வேற வேலையா கிளம்ப வேண்டிருக்கு. நான் ஒன்னு பண்றேன் லக்கேஜ்லாம் வண்டில அப்படியே இருக்கட்டும். இப்போ என்ன வேணுமோ அத எடுத்துக்கோ மீதி நான் வீட்டுல கொண்டு போடறேன். நீ ரூம் முடிவு பண்ணிட்டு சொல்லு அங்க எடுத்து வரேன். 

ஆஹா வேறென்ன வேறென்ன வேண்டும்....அப்படியே ஆகட்டும்.

வழியனுப்பல்.

செட்டில். அவரோடு (அவரது) கல்யாண அளவளாவல் முடித்து குளித்து கிளம்பி சாப்பிட்டு வந்தோம். ரெண்டு மணிக்கு.......................... வந்தார்,,,,,,,,,,,,,,,, பாண்டி சென்ற என் மாமணி.
ஹ ஹாய்  ஹாய் சார்.

உற்சாகமாக கேட்டேன், ஏண்டா வீட்ட தேடி கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டம்பா.

அதுக்கு.,.,.,.,.,சொன்னானே ஒரு பதிலத்தான்.,.,.,,.,.திகில் அடைஞ்சேனே அத நினைச்சுத்தான்.........அது...... 

No comments:

Post a Comment