Tuesday, 21 April 2020

அதனால் என்ன?



நஞ்சன்கூடு_தாசில்தார் (™) (℠) © (@iKwayMusings) Tweeted:

----//----


இன்று உலக ஹைக்கூ தினமாம்

கவிதை எதுவும் இல்லை என்னிடம்

-அதனால் என்ன ?



 https://twitter.com/iKwayMusings/status/1251687048940929026

Thursday, 9 April 2020

ஒரு ஓவர் ஆறு, பால்





ஒரு ஓவர் ஆறு, பால்
ஒரு ஓவர் ஆறு, பால்



ஹல்லோ, ஆறு, பால் வீசுனா ஒரு ஓவர்ங்குறது இப்படியில்ல!

Sunday, 21 July 2019

காதல் கீச்சுகள் - 10

காதல் கீச்சுகள் - 10



iK way (@iKwayMusings) Tweeted:


**
என் பாதையில் உன் பாதம்.
நான் துடிக்கையில் வெடிக்கையில்
முத்தங்கள் தருவாயா?
**
இது கவிதை கவனமாக கடக்கவும்
Picture Courtesy "lost nAy"  
-----//-----

இமயத்தின் உச்சம்
இரு முகடுகள் கொண்டதென்றே
இன்றறிந்தேன்.

எவரெஸ்ட்டின் 
இணை முகடொன்று
அதனெதிர் நிற்கக் கண்டேன்.

பாற்கடல் பசிபிக்கில்
தொடர்ந்த இடைநில்லா 'பணிச்சறுக்கின்' ஈறாக
மரியானா மடுவும்
அதன் மச்சங்களாம் முத்துக்குளித்தே
மறுபுறம் கொண்டு
முப்புரமும் கவனமாகக் கிடந்தே கடந்தேன் :)


#காதலியல்
#தீராக்காதல்



https://twitter.com/iKwayMusings/status/1148106599979814918

Friday, 28 June 2019

எங்கள் தெரு செவிட்டுக்கருநாய்






iK way (@iKwayMusings) Tweeted:

எங்கள் தெரு செவிட்டுக்கருநாய்

https://t.co/syE5nnpft7 https://twitter.com/iKwayMusings/status/1094585620373094400

----//----//----

*எங்கள் தெரு செவிட்டுக்கருநாய்*


குடியிருப்பு
சாலைகளில்
வேகம் கொண்டு
வரும் வண்டிகள் எதற்கும் பதறாமல்
சாலை கடக்கவும்,
நடக்கவும்,

மாலை வேளையில்
கடைகள்
ஓரமாய்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
ஆக்டிவா
ஸ்கூட்டி
ஆரெக்ஸ்
எக்ஸ்யூவிகள்
சீயார்வீகள்
மூன்று வென்டோக்கள்
இட்டியோஸ்கள்
ஒரு பஸ்ஸாட் ஆட்டோமேட்டிக்
நாலைந்து எக்ஸெல் சூப்பர்கள்
வீட்டுப்
படியோர கிரில்கள்
நிற்கும் இரண்டு மரங்களில் ஒன்று
என
எல்லாவற்றிற்கும்

கால் தூக்கி அடிக்க
ஒரு துளி ஒன்னுக்கும்

வாய்த்திருக்கிறது
எங்கள் தெரு
செவிட்டுக் கருநாய்க்கு.















Monday, 18 February 2019

காதல் கீச்சுகள் - 9



iK way (@iKwayMusings) Tweeted:


உன்
நிராகரிப்புகளை
அடுக்கி
வைத்துச்
சீர்
பிரித்துப்
பார்க்கிறேன்.

ஆகர்ஷிக்கின்றன
இப்போது
பொருள்
புரிந்த
உன்
பார்வைகள்
கவிதையாய்.



#காதலியல்
#தீராக்காதல்


https://t.co/42Cj57Pcni https://twitter.com/iKwayMusings/status/1087674679836368897

Saturday, 16 February 2019

காதல் கீச்சுகள் - 1




iK way (@iKwayMusings) Tweeted:


ஊடாடும்
காதலதைக்காண
கண்
கோடி
வேண்டும் தோறும்
இருக்கும்
இரு கண்களையும்
மறைக்கிறது
உன் காதல்
கல்ப காலம்
கண்டும்
மீறும்
இச்சங்கல்பம்
காண
இன்னும்
இன்னும்
வேண்டும்
ஊடலும்
அதன்
ஊடாடும்
காதலும்


#காதலியல்
#தீராக்காதல்

https://t.co/VXaYl79GXo https://twitter.com/iKwayMusings/status/1080478622337720321?s=17

காதல் கீச்சுகள் - 8




iK way (@iKwayMusings) Tweeted:


எதிர்ச் 
சொல் 
இல்லாத 
ஒரே சொல்லல்லவா 
முத்தம்!!!
முத்தம் கொடுத்தல்= 
முத்தம் பெறுதல்.

எப்படி 
கொடுத்து 
விட்டு மட்டும் 
போவது?

பேசத்தான் சொல்லும் அதன் விதிகளும் வேண்டும் என்கிறாயா?

கட்டளைகளைத்தான்
சற்றே இலக்கணத்தோடு இயைந்து போடேன்.

மீறவும் 
அங்கு
வேண்டுமல்லவா ஒரு விதி!


...
மீறவும் 
அங்கு
வேண்டுமல்லவா ஒரு விதி!

சரி,
முத்தங்களாலே 
பேசிக்கொள்கிறேன்....



#காதலியல்
#தீராக்காதல்

காதல் கீச்சுகள் - 7




iK way (@iKwayMusings) Tweeted:


தளும்பி
நிற்கும்
நீரளவு,
முகடு
ததும்பி
விட்டால்
தங்காது.

உந்தன்
தவிப்பில்
இன்பமோ
ததும்பினாலும்
காட்டாறு....

இரண்டையும்
இரசிக்க
நினைப்பதும்
அதை
மறைப்பதற்கே
என் தவிப்பும்.



#தீராக்காதலியல்


https://t.co/yhdOSoEDHE https://twitter.com/iKwayMusings/status/1086972219685654528

காதல் கீச்சுகள் - 6




iK way (@iKwayMusings) Tweeted:
@Muthu__kkdi @DarvinDsc

வானத்தாள்
உதறிப்பிரித்து
சிதறிய
நட்சத்திரங்கள்
தெளித்து
ஓரக்கோடிட்டது
மாலை நேரம்.

ஆர்வமாய்
காத்துப்
பார்த்திருந்தேன்...‌.
இன்று
நிலவு
எழுதும்
கவிதை
படிக்க,

பிறகே தெரிந்தது
இந்த இரவின்
நிலவு ஓவியையானது.

என்னவள்
விரல்களைத் தூரிகையாக்கி
என் மேலெழுதிய
கோலங்கள்.



#காதல்கோலங்கள்
#தீராக்காதலியல்

 https://twitter.com/iKwayMusings/status/1086837351911849985

காதல் கீச்சுகள் - 5



iK way (@iKwayMusings) Tweeted:


ஒரே பிரபஞ்சமென்றா சொல்லிக்கொண்டு இருக்கிறது இன்னும்
அறியாமையில்
ஆழ்ந்த இவ்வுலகு?

இதுவரை நீ உறைத்த சொற்கள்
ஒவ்வொன்றும் ஒரு பிரபஞ்சமல்லவா எனக்கு?

பன்மை இல்லாதிருந்தது இதுவரை.
அறிந்த பின்
தமிழும்,

பிரபஞ்சங்கள் என்றான பின்
இயற்பியலும்
காதலியல் ஆனது.

கருந்துளை அகராதி நீக்கம்.



#காதலியல்
#தீராக்காதல்

https://t.co/LYDQXpW4uo https://twitter.com/iKwayMusings/status/1085963134483992583

காதல் கீச்சுகள் - 2




iK way (@iKwayMusings) Tweeted:


நான்
காதலித்துக்
காதலித்து
களைப்படைகிறேன்

உன் ஸ்பரிசம் எனும்
பேறு பெற்ற காற்றின்
பெருமூச்சு உட்கொண்டே
மீண்டு பெரும் காதல் கொள்ள

ஆக்சிஜனேற்றம்
வேதியியல் மட்டுமல்ல
காதலியலும் கூட.

#காதலியல்
#தீராக்காதல்

https://t.co/lsLR8v3iSY https://twitter.com/iKwayMusings/status/1082693641079001088

காதல் கீச்சுகள் - 4




iK way (@iKwayMusings) Tweeted:

@grapes_farmer

எல்லாமும்
நீயாக
ஆனபின்பும்
ஆச்சரியப்பட
இருக்கும்
கொஞ்சம்
நான்!!

என்னிலுள்ள
நீயும்
உன்னிலுள்ள
நானும்!!

#காதலிசம்
#தீராக்காதல்

 https://twitter.com/iKwayMusings/status/1080017928995651585

காதல் கீச்சுகள் - 3



iK way (@iKwayMusings) Tweeted:

கதிரவனைக்
கொண்டு
காலையில்
வைத்துவிட்டுப்
போன இரவு வந்து எங்கே என்று கேட்டால் என்ன சொல்ல?

பனித்துளிகள் ஒளித்து வைத்து விளையாடுகின்றன என்று சொல்லித் தப்பிக்கவாவது செய்யலாம். தியாலத்தில் தீரும் கேள்வியது.

இச்சோக பிம்பம் வைத்து விட்ட காதல் கேட்டால் என்ன சொல்ல?
தீராக்காதலது!!


#காதலியல்
#தீராக்காதல்



https://t.co/HMoQK9yggQ https://twitter.com/iKwayMusings/status/1083671254949867520

Sunday, 23 December 2018

தடையற்ற திறந்த இணைய வகுப்புகள் MOOCS - Massive open online course


தடையற்ற திறந்த இணைய வகுப்புகள் :

மிக நீண்ட நாட்களாக இந்த தலைப்பினில் தமிழில் எழுத வேண்டும் என நினைவு. இப்போது நேரம் கிடைத்துள்ளது.
தாமதத்திற்கான காரணங்கள் :

1> நான் குறைத்தபட்சம் 1 பட்டய வகுப்பாவது இம்முறையில் பெற்ற பின்னர் எழுத வேண்டும் என எண்ணினேன். பெற முடிந்தது.

2> தற்போதைய காலத்தில் எவை மிக அதிகமாக பயனளிக்கும் வகுப்புகள் என ஒரு குறிப்பு கொடுக்க வேண்டும் என ஒரு நோக்கம் - இதை அவ்வளவு சரியாக எடுத்தளிக்க முடியவில்ல்லை. இது ஒரு மாறும் goal post என தோன்றுகிறது!!



இந்திய அரசு சார் நிருவங்கள் வழங்கும் வகுப்புகள், பட்டங்கள், பட்டயங்கள் பற்றிய இணைப்புகளை கடைசி பத்தியில் கொடுத்துள்ளேன்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கணொளி அலைவரிசை மற்றும் IIT MADRAS வழங்கும் பல்வேறு வகையான தடையற்ற திறந்த இணைய வகுப்புகளின் சுட்டிகளும் கொடுத்துள்ளேன்.


மிகவும் செம்மைப் படுத்தப்பட்ட ஒரு கட்டுரை/பதிவு அல்ல இது. ஒரு இணைப்பு அல்லது அறிமுகம் வழங்கும் நோக்கம் மட்டுமே. நேரமைவு பொறுத்து பிறகு செம்மைப்படுத்தல் / பட்டி டிங்கேரிங் செய்யலாம் !

தடையற்ற திறந்த இணைய வகுப்புகள் / பாரிய திறந்த இணைய வழி கல்வி என்பது ஆங்கிலத்தில் : MOOC  என்றழைக்கப்படுகிறது. இதன் கூகிளாண்டவர் தேடல் மேற்கொண்டு தகவல்களை அளிக்கும். அடிப்படை கட்டமைப்பு MIT யால் வழங்கப்படுகிறது.

https://ocw.mit.edu/help/rss/

https://www.mooc-list.com/university-entity/mit

http://news.mit.edu/topic/massive-open-online-courses-moocs

இந்த அடிப்படை கட்டமைப்பின் மேல் அமைக்கப்பட்ட பல தளங்களில் கீழ்கண்டவை சிறப்பாக இயங்குபவை.

1> edX.org   - உட்ச்சென்ற பின் அங்குள்ள தேடுபொறியில் எழுதி  தேடலாம்.
                எ. கா : https://www.edx.org/course/subject/data-science
2> Coursera.org

3> udacity.com

இவற்றினுள்  தனிப்பட்ட பட்டய வகுப்புகளாகவும் மற்றும் தொடர் கல்வி வகை 'சிறு பட்ட' - MICROMASTERS  வகையிலும் வகுப்புகள் உள்ளன.

இவற்றினுள் உள்ள எல்லா வகுப்புகளையும் யாரும் பார்வை இடலாம் அதற்கு கட்டணம் இல்லை.
தேர்வெழுதி உறுதி செய்ய்யப்பட்ட சான்றிதழ் பெற வேண்டுமாயின் அதற்கு கட்டணம் உண்டு. மேலும் அரசு வழங்கும் DL / VOTER ID / PAN போன்றவை தேவைப்படும். வெப் காமிரா கொண்ட கணிப்பொறி இணைப்பு தேவைப்படும். இல்லை என்றால் மொபைல் app  மூலமாகவும் இணையலாம். தேர்வுகளை எழுத கணிப்பொறி இணைப்பு சிறந்தது.

சில (இந்தியர்களுக்கு) வித்தியாசமான, வழக்கத்திற்கு மாறுபட்ட வகை வகுப்புகள் :

A ) எலக்ட்ரிக் வெஹிகிள்ஸ் : https://www.edx.org/course?search_query=electric+vehicles
B ) இசை : https://www.edx.org/course?search_query=Music



இவற்றைத்தவிர, இன்றைய தேவை மற்றும் பிரபலமான Analytics , Big  Data, Business இன்டெலிஜென்ஸ் போன்ற வகைகள், IOT, போன்றவைகளை இங்கும் தேர்ந்துதெடுத்து பயன் பெறலாம் :

1> https://www.research.ibm.com/university/
CAAMSS என்றழைக்கப்படும் முன்னோக்கிய எதிர்கால தொழில் நுட்பங்கள் மற்றும் அவைகளைப் பற்றிய அடிப்படைகள் இங்கு பயிற்றுவிக்ககப்படுகிறது.

2> https://cognitiveclass.ai/

3> https://www-03.ibm.com/services/weblectures/partnerworld/

4> https://www-03.ibm.com/services/learning/ites.wss/zz-en?pageType=page&c=LNW1G2K9220IL0YX

5> https://www.forbes.com/sites/bernardmarr/2016/05/26/ibms-big-data-university-free-online-learning-with-over-400000-students/#18fd0e24604e

மேற்கண்டவை IBM நிருவத்தால் வழங்கப்படும் வகுப்புகளாகும்.


விக்கி இணைப்பு : https://en.wikipedia.org/wiki/Massive_open_online_course

 MiT MooC Page
MiT MooC Page


 
edX.Org Landing Page
edX.org  Landing Page

 https://www.coursera.org/
Coursera Landing  Page

IBM Research University Page


IBM Watson Academy
IBM Watson Academy



இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை :


1> http://mhrd.gov.in/online-courses 

2> http://mhrd.gov.in/e-contents   - முக்கியமான சுட்டி

3> https://swayam.gov.in/About

4> https://swayam.gov.in


ஐஐடிகள் மற்றும் ஐஐஎம்கள் :

5> https://onlinecourses.nptel.ac.in/m#/allcourses

NPTEL is an acronym for National Programme on Technology Enhanced Learning which is an initiative by seven Indian Institutes of Technology (IIT Bombay, Delhi, Guwahati, Kanpur, Kharagpur, Madras and Roorkee) and Indian Institute of Science (IISc) for creating course contents in engineering and science

6> https://www.iimb.ac.in/node/667   - Certificate in Technology and Management



7>  https://youtu.be/UiUbPHzv2JE  - தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை காணொளி வகுப்புகள். 

இவை TN SCERT என்ற தலைப்பில்/அலைவரிசையில் யூ டியுபில் உள்ளன

Wednesday, 14 December 2016

#யாருகிட்ட??!!





துணிந்தவர்க்கில்லை துக்கமும் தூக்கமும்.
துக்கித்துத் தூங்கியவர்க்கில்லை துணிவும் அணியும்.

ஆயின்,
தூங்காரெல்லாம் துணிந்தாரில்லை.
துணிந்தாரெல்லாம் தூங்காரில்லை.
தூங்கியோர் துணியாதாரில்லை.

தூக்க நிலை விழிப்புமில்லை.
தூங்காமல் விழிப்புமில்லை.
தூங்குதல் தவறுமில்லை.
தூங்காது விழித்திருத்தல் பேறுமில்லை.


'#யாருகிட்ட??!!'
'#விட்றதில்ல'

Sunday, 27 November 2016

குட். நவ் ட்டெல் மீ, வாட் இஸ் யுவர் மதர்'ஸ் நேம்?





அ: ஹேய், வாட் இஸ் யுவர் நேம்?

அ: அ

அ: நோ நோ. வாட் டிட் ஐ ட்டெல் யூஉஉ? ஸே இன் ஃபுல் சென்ட்டன்ஸ். வாட் இஸ் யுவர் நேம்?

அ: மை நேம் இஸ் அ

அ: குட். வாட் இஸ் யுவர் மதர்'ஸ் நேம்?

அ: அம்மா!

அ: ஒஹ்ஃப்ஓ.....ஓகே. வாட் இஸ் மை நேம்.?

அ: மை நேம் இஸ் அ.

அ: ஹ்ம்ம்.....மை மைஐ நேம்..டெல் மீ, வாட் இஸ் மைஐ நேம்?

அ: மை நேம் இஸ் அ.

அ: குட். நவ் ட்டெல் மீ, வாட் இஸ் யுவர் மதர்'ஸ் நேம்?

அ: அம்மா!

அ: ம்ஹ்கூம். வாட் இஸ் யுவர் ஃபாதர்'ஸ் நேம்?

அ: அப்பாஆ.

அ: வாட் ஈஸ் ஹிஸ் நேஏம்.? நேம் நேம்.

அ: 'அ' அப்பா!

அ: 😤😭😫😩😴

#ஒமஎகாஎஉதெ
#அ^3பாறைகள்

Tuesday, 1 November 2016

ஓஹ். ப்ரூ எலுமிச்சங்கா ஊறுகா




அப்பா அது என்னப்பா Bru ஊறுகா?

டே டே டேய், வேணாண்டா. அது உள்ள இருக்குறது எலுமிச்சங்காய் ஊறுகாடா. Bru பாட்டில்ல போட்ருக்காங்க.

ஓஹ். ப்ரூ எலுமிச்சங்கா ஊறுகாயா??...அப்ப சரி.😈🙅👘

😄😱😨😝🙆🙋🙌

#ஒமஎகாஎஉதெ #அஜய்பாறைகள்

Saturday, 29 October 2016

A^3Rocks அ^3பாறைகள், A^3S'rocks அ^3ஶ்ரீபாறைகள்,




கடந்த ஒரு மணி நேரமாக அநன்யாவின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.  விடாத அழுகை, கீழே விழுந்து இடது கையில் சிராய்த்ததற்காக வலது கையைப் பார்த்து / காண்பித்து முதல் அரை மணி நேரம்.

மீதம் அரை மணி?
அதைப் பகடி செய்த அஜயார் காரணம் கொண்டு அடுத்த அரை மணி நேரமாக, சிராய்ப்புப் காயத்தை வலது கையில் காணவில்லை என.

#AnanRocks #அநன்யாபாறைகள் #அநன்யபாறைகள் #அநன்பாறைகள் #ஒமஎகாஎஉதெ


--------------///--------------///--------------

"டே அநன்யா அந்த வாட்டர் பாட்டிலை கொண்டு வா."

"நான் மாட்டேன் அப்பாகிட்ட கேள்."

"ஏன்?"

"எனக்கு கையில் அடி பட்டிருக்கு. "
 ( "குட் அநன்யா" இது யாராயிருக்கும் என்கிறீர்கள்? என்கரேஜ் பண்றாராம்.)

"ஹ்ம். அந்தக் கையால எடுத்துட்டு வாயேஎன். "

மறுபடியும் ஆர்ப்பாட்டம் தொடக்கம்...... அந்தக் கையில் காயத்தைக் காணவில்லையாம்.

மறந்து இருந்ததை நினைவு படுத்தியாயிற்று. இம்முறை இது அகிலாவின் கோட்டா.

#அ^3பாறைகள் #A^3rocks #A^3S'Rocks7

Friday, 5 August 2016

ஜான்சன் வந்தார் (அ) எல்லி பரு பேக்கு (அ) விழித்தேன்!!??😂 #2/2


ஜான்சன் வந்தார் (அ) எல்லி பரு பேக்கு (அ)  விழித்தேன்!!??😂       #2/2


அடுத்த 3-5 நிமிடங்கள் பிறகு நமது அன்றைய வாகனத்தோடு அதன் சாரதிகள் வருவர்.

எல்லாம் நல்லா போச்சி +  தினம் ஓர் 200-210 ரூபாவும் சேர்த்து........


அப்படியான ஒரு நாள் காலையில்..........

[நம்ம சாரதிகளில் சொல்ல விட்டுப்போனவங்க ரெண்டு பேர் சர்வணா வும் ஜான்சனும்]

ஜான்சன் புக்கிங் எடுத்தார்.
மொதோ கேள்வி :"பேமண்ட் கேஷா ஓலா மணியா" {ஒருவேளை மாதத் தொடக்கத்து 3ம் தேதி என்பதால் இருக்கலாம்}.

"கேஷ் கொடுத்தினி"

"ஓ.கே."

கீழே வந்து காத்திருக்க, 5 நிமிடம் ஆனது.

இன்னும் ஜான்சனைக் காணோம். அவர் அழைப்பும் இல்லை.
சரி. மேலே போய் எம்குல இளம்கொழுந்திடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்தேன்.

நல்லா ஒரு முறை ஏற இறங்க என்னை பார்த்த பின், அவரும் ஒருமுறை வந்து வெரிஃபை செய்து கொண்டார்.

ஃபோனில் ஜான்சனை அழைத்து கேட்டார்.

"நான் பந்பிட்டு காய்த்தாயிதினி"

"எல்லி"

"அதே அப்பார்ட்மெண்ட்டூ கிளகே" 👍👌

"நமகே காணுஸ்த்தாயில்வல்லா"

"ஹ்ம். கிளகடே பந்து நோடிரி. மேலே இத் கொண்ட் நோடுதரே ஆகுத்தா"

😚😣

"குரு, நாவு கிளகடேனே நிந்த்திதிவி. நீவெல்லிதீரா"

"அல்லே தேவஸ்த்தானா பஃக்க அபார்ட்மெண்ட் ஹத்திரா"

"ஹவ்தா....சரி. சொல்ப மெயின் ரோடுகே பண்ணி."😇

"ஹான் பந்தே"

😢

"ஹலோ ஜான்சன் சார் எல்லி"

"மெயின் ரோடல்லே இதினி. நீவு கிளகடே பண்ணி"???!!!

"எல்லிதிரப்பா....ஷிவ டெம்பிள் ஹத்ரானா"

"ஹ்ம்ரீ"

"ஓ.கே" {புரிந்து விட்டது 50மீட்டர் தூரத்திலிருக்கும் ராமர் கோவிலருகில் இருக்கிறார் - அஙகும் அப்பார்ட்மெண்ட் உண்டு}

நடந்து அங்கேயே போய் ஃபோனில் அறிமுகம் ஆகலாம்.😇 நட.

அங்கு கோயில் அருகில் இருந்து, நான் "சார் எல்லிதீரா"

"ஏனு சார், பெளகே இஷ்டு லேட் மாடுத்தீரா......இல்லேனே நனகு ஹத்து நிமிஷா ஆகோகித்து. பர்த்தீரா இல்வா? கிளகடே பண்ணி மொத்லூ, பந்து நோடி"😑😮😱😵

"சார், நான் கெளகேனே இதினி. சொல்ப, நீவெல்லிதீரா அதன்னு ஹேளி"

"......~|\_=+×÷?°''";;:"

☺ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தவரை கண்டு பிடித்தாயிற்று. 😇

ஆள் பார்க்க, ஏதோ எப்போதும் டென்ஷனில் இருப்பவர் போல இருந்தார்

"சார், பண்ணி சார் பேக!!??"

ஏறி அமர்ந்து கேட்டேன்/சொன்னேன்.

"ஏன் சார், இல் பந் பிட்டிதிரா அல்லி பருபேக்கல்வா"

"அஃதே சார் ஷிவா டெம்ப்பிலு"


"சார், இது ராமா தேவஸ்த்தானா. நீவு பருபேக்காகித்து ஷிவா டெம்ப்பிள்ஹத்தரா. அது ஆக்கடே இஃதே"

"சார், எல்லா ஒந்தேனே. ராமா ஷிவா எல்லா நமகே கொத்து சார் "
😳😳😳🤔🤔🤔😂😂😂😂😆😆


???!!!!@##$%^&*(°😢😂😵😱😰🙅🏃

What. ஜான்சன்!!!??? 🙅😵😱 அத்வைதி???!!!😵😵

நல்ல வேளை அங்கேயே என்னை இறக்கி விட்டு "இஃதே சார் நிம்ம ஆஃபிஸு" என ஹேளவில்லை.

******////*****////*******

உங்களுக்கு எந்த ஊரு ன்னு கேட்டா, நமக்கு கோயம்புத்தூருங்கனு கூசாம சொல்லிட்டு,

அப்புறம் கொஞ்சம் அங்க எங்கனு கேட்டா, கோயம்புத்தூர்லயிருந்து பொள்ளாச்சிபோய்ட்டு, பொள்ளாச்சியிலிருந்து பக்கந்தாங்கம்பான்.
சரி பொள்ளாச்சியில எங்க..........

- / -
- / -
- / -
- / -
- / -

ஜான்சன் வந்தார் (அ) எல்லி பரு பேக்கு (அ) விழித்தேன்!!??😂 #3/2

- / -
- / -
- / -
- / -
- / -

--------------///*********///------------------

இதுக்கு கிடச்ச வேறு பல தலைப்புகள் :

ஜான்சன் வந்தார்!!😬

விழித்தேன் = விழிப்பு நிலை அடைந்தேன்!!!😊

ஓடி ஓடி ஓலா புடி..........😬😬😬😬😬

வந்த ஓலாவும், வராத ஓலாவும்.

எல்லி (பரு) பேக்கு?

காடி தேடி ஓடி--சொல்ப அட்ஜஸ் மாடி.


த்தூ....நானும் எவ்வளவோ அட்ஜஸ்ட் பண்ணேன்.....    ***[!!!???:-)]

சரி இது எப்படி இருக்குனு சொல்லு, "காடிக்குள் ஜோடி", "அவசரத்துல அஞ்சு பேர்" 😳😄