அப்ரண்டிஸாக சேர்ந்த ரஸ்சி விரைவிலேயே சக ஊழியர்களின் நன்மதிப்பை பெற்றார்.
இதில் அனைவரையும் கவர்ந்த விஷயம் அவரது அணுகுமுறை. ரஸ்சி அவர்களது
மனிதர்களுடன் நேரிடையாக அணுகும் முறையானது அனைத்து நிலையிலும் உள்ள
ஊழியர்களாலும் வரவேற்கப்பட்டது. அதே நேரத்தில் எந்த ஒரு கலவரமான சூழலிலும்
துணிச்சலுடனும், நம்பிக்கையுடனும் அந்த மக்களிடையே சென்று பேசுவதில்,
சமாதானத்திற்கு பேச்சுவார்த்தை நடத்துவதில் அவருக்கு எந்த தயக்கமும்
இருந்ததில்லை.
நாம் சிறிது யோசித்து பார்த்தால், அன்றைய நிலையில் ஜம்ஷெட்பூர் என்பது ஒரு நேரிடையான, பூச்சுகளில்லாத மக்களை, பாமரர்களை கொண்டது. எவ்வளவு நல்லவர்களோ அதே அளவு கோபமும் கொள்ளக் கூடியவர்கள். படிப்பறிவற்றவர்கள் அல்லது கொஞ்சம் படித்தவர்கள். அவர்களிடம் சென்று பேசுவதை ரஸ்சி தன் நிலைக்கு கௌரவக்குறைவானதாக என்றும் கருதியதில்லை.
இதே நேரத்தில், ரஸ்சி மிகவும் மேம்பட்ட ரசனைகளும், நல்ல உணவின் ரசிப்பும், வாழ்வின் மென்னுனர்வுகளின் பால் லயிப்பும் கொண்டவராக அறியப்பட்டிருந்தார். சமூகத்தில் மேல்மட்ட நிலை மனிதர்கள், அரச (ஆளும்) குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்களுடன் பழகும் அதே ரஸ்சியால் அதே வேளையில் சாதாரனர்களிடமும் எளிதாக சென்றடையக்கூடிய ஒருவராக இருக்க முடிந்தது. தொழிற்சாலைக்குள் பதினைந்து முட்டைகளினால் ஆனா ஆம்லேட் சாப்பிடக்கூடியவராகவும் அறியப்பட்டிருந்தார்!!!.
ஏனைய டாட்டா குழும நிறுவங்களுக்கு முன்னோடியான பல திட்டங்களை வடிவமைப்பதிலும், செயல்முறை படுத்துவதிலும் டிஸ்கோ சிறந்த பங்கு பணி ஆற்றியது. மேலும் டிஸ்கோ வின் நிறுவனத்தை சார்ந்துள்ள மற்றும் சுற்றியுள்ள சமுகத்தின் நலன் பேணும், முன்னேற்றும் பல செயல்கள், முன்னெடுப்புகள் நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பீடுகளை அறிவதற்கும், நல்லபிப்ராயங்களை வளர்ப்பதிலும் உதவியது. இந்த முயற்சிகள் பலவற்றின் திட்டமிடல், செயல்பாடுகளின் பின்னிருந்த ரஸ்சிக்கும் நல்ல பெயர்.
இவை அனைத்தும் சேர்ந்து, ரஸ்சியினை டிஸ்கோ நிறுவன பணி நிலை முன்னேற்றபாதையில் விரைந்து பயணிக்க வைத்து சேர்மன் மற்றும் செயல் தலைவர் பொறுப்பிற்கு உயர்த்தியது. அடுத்த பத்தாண்டுகளுக்கான டிஸ்கோ வின் முன்னேற்றத்தில் மற்றுமொரு படி.
அதனோடு கூட காலம் தன்பாட்டுக்கு அது ஒரு கணக்கினை போட்டு சுற்றி சுழண்டடிக்கப்போகும் ஒரு சூறாவளியுடன் கூடிய நிகழ்வுக்கு அட்டவணை எழுதிவிட்டு வேடிக்கை பார்க்க காத்துக்கொண்டிருந்தது!
(தொடரும்....)
தொடர்புடைய இடுகைகள் :

வணக்கம் ,
ReplyDeleteஉங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com