அலுவலக உதவியாளர்? ஆம். வியப்படைய வேண்டாம், இப்போதும் சில பல பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள நடைமுறைதான், ஆனால் வேறு பெயரில் - எக்ஸ்சிகியுடிவ் அசிஸ்டன்ட் என்பதாக - முதன்மை செயல் அதிகாரிகளின் அலுவலகத்தில் பணியாற்றி நிறுவன நடைமுறைகளை அறிவதற்கு ஏற்ற வகையில் உள்ள பதவியாகும்.
அவரது தந்தையின் எண்ணமும் என்னவென்றால், இளம் ரஸ்சியை ஜே. ஆர். டி என்ற மாமனிதரின் மோதிரகைக்கு அருகினில் கொண்டு செல்வது.
அவரது காலத்திய இந்திய அளவில் வீச்சுடனும் சக்தியுடனும் முடிவுகளை எடுக்க வல்ல மனிதர்களில் ஜே. ஆர். டியும் ஒருவர்.
தொழிற்சாலைகளும், கார்ப்போரேட் நிறுவங்களும் சார்ந்து ரஸ்சி யின் ஆதர்சங்கள் என்றால் முதலாவதாக ஜே. ஆர். டியும் அடுத்து ஹென்றி போர்டும் ஆவர். இவர்களின் நிறுவங்கள் இலாபம் ஈட்டுவனவாக இருந்த காரணத்தினால் அல்லாமல் அவர்களிருவரின் தொலை நோக்கு மற்றும் உயர் எண்ணங்கள் காரணமாக ஏற்பட்ட ஒரு உணர்வு என்று பின்னாளில் ரஸ்சி குறிப்பிட்டார்.
ஜே. ஆர். டி அவர்கள் மேல் வைத்திருந்த மதிப்பினை ரஸ்சி அவரது வார்த்தைகளில் சொல்வதென்றால் "அவர் நடந்து சென்ற நிலத்தையும் வணங்கினேன்".
என்ன ஒன்று உள்ளே நுழைவதுதான் சற்று எளிதானதாக இருப்பதாக நம்மை எண்ண வைக்கிறதே தவிர, பாதை ஒன்றும் பட்டு ரோஜா நிரப்பப்பட்டு காத்திருக்கவில்லை.
இன்றைய டாட்டா ஸ்டீலானது, அப்போதுதான் டிஸ்கோ என்பதாக ஒரு இளம் நிறுவனம். 1939 ல் ரஸ்சி சேர்ந்த போது ஆரம்பித்து 25-30 ஆண்டுகளாகியிருந்த போதும் ஒரு உருக்கு ஆலை என்பதற்கு அது ஆரம்ப காலகட்டமே.
ஜம்ஷேட்பூர் டிஸ்கோ ஆலைக்கு, அப்ரண்டீஸ் ஆக பணியாற்ற ரஸ்சி அனுப்பிவைக்கப்பட்டார்! அடுத்த 53 ஆண்டுகளுக்கான டிஸ்கோ மற்றும் ஜம்ஷெட்பூர் இரண்டுக்குமான வரலாறுகளும் இவற்றில் ரஸ்சி யின் பங்கும் ஆரம்பம்.
(தொடரும்...)