Monday, 29 February 2016

ஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'

கடைசியில் அது நடந்தே விட்டது. 

போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அது ஓரளவு க்கு புரிந்து கொள்ளக் கூடியதே. 

ஆனால் அதற்காக அதே போல ஓட்டலிலும் நடப்பது என்பது கொஞ்சம் ஜீரணிக்க முடியாததாக உள்ளது. 

நானும் அதை தவிர்க்க எவ்வளவோ முயன்ற பின்பும் அது அந்த சப்ளயரின் பிடிவாதத்தால் நிகழ்ந்து விட்டது. 

நானும் எத்தனை முறை சென்று கேட்டிருப்பேன் அப்போதெல்லாம் சிரித்துக் கொண்டே "உட்காருங்க சார்" என்று விட்டு,  "தயார் ஆனதும் சொல்றேன் சார்" என்றவர் இப்ப எல்லோர் முன்னாடியும்

 " '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' வாங்க" என்கிறார் நீட்டி முழக்கி. இப்போ போய் கைல அந்த பார்சல வாங்குறாதா இல்லயா. 

இல்ல "மாப்ஸ் நீ வாங்கிட்டு இங்க வெயிட் பண்ணு நான் போய் வண்டிக்கு பெட்ரோல் போட்டு வர்ரேன்"னு போனவன் வரட்டும்னு அவன்தான கேட்டான் அந்த தக்காளியனு வெயிட் பன்னலாமா?

அது சரி, பஸ்ஸுல என்ன ஆச்சுன்னு இப்ப தெரிஞ்சாகனும் அதான? 

"சார் புதுசா வர்ரேன் ஸ்டாப் வந்தா சொல்லுங்க"ன்னு சொன்னதுக்கு அந்த கண்டக்டர் சொன்னது....

"புளிய மரம்லாம் எறங்குங்க"

வேற வழி?,  இறங்கிட்டேன்.

Thursday, 25 February 2016

Vegetarian Cannibal

Once upon a time, long long ago, so long ago, when there was no time, there was a news in those times,....... that once after coming across such a situation by chance, one leader of a group of Cannibal started liking vegetarian food and decided to continue with this practice.

During the aftermath of the decision, they were finding it difficult to continue this practice, find their food and because of this they were getting starved. In the meanwhile their group was also becoming comparatively weaker day by day.
There was a chance they may revert to their old custom.

This information came spreading far and wide.

Hearing this deliberate situation, one of the devote Brahmin, a Buddhist and a Jain who were healthy and of good in bodily built, decided to do something about it and preserve the vegetarianism and use this as a chance to bring and preserve Vegan among Cannibal. This could be a model for other groups and starting point for the rest of the groups of cannibal to follow.

They planned their travel to the place of Cannibal to meet and teach ways of finding, surviving with Vegetarian food. Also as an example to show the cannibal that Vegetarian food is good, easier and they can be getting convinced that it is also healthier by seeing these men as role models, as these men are well built, stronger and being vegetarian.

On the D-day, they went and took an appointment to meet the Cannibal leader.

When they were arriving, the Cannibal leader was conducting the court and met them there. They were happy and rejoicing to meet these men and to know that they are pure vegetarians. He offered them to take rest and bathe and conveyed them their happiness, he also informed them that in the evening of the day, their entire group will be assembling there and requested them to come at that time after taking rest.

The men were happy and went to take rest. They arrived neatly in the evening.

To their amusement they saw a typical fire and dance around from a distance while reaching. Wondering themselves what use will this huge fire have in this world of vegetarian Cannibal. These wise men were joking among themselves on the Cannibal practice of huge fire and amused by their ignorance of efficient cooking of vegetarian food plus the survival, adherence of old tribal practices attached to food preparation.

On reaching, they saw the leader was giving some orders to an aide standing by, to bring "Masalas". The wise men again with a face were murmuring their exclamation and surprise about the reach of Masalas so far. They couldn't help but wondering the tastefulness of Cannibal.

Upon arrival of "Masala" he stood up and with a grin on his face, he called his men and women who were all elated.  And he announced

"After a very long time, today we are going to have a lot of ' pure vegetarian' food. Come let's thank our God Dimbaagamamba and celebrate"

??????!!!!!!!!! (:-)

Interesting Animals

ஆர்வ விலங்குகள்


Tuesday, 23 February 2016

(எனது) தமிழின் நிரந்தர சூடான இடுகை ???!!!

எல்லாரும் அப்பப்போ??!! பல, நிறைய சூடான பதிவு குடுக்கும் போது, தமிழுக்குனு, தமிழ்ல, தமிழனால், ஒரு நிரந்தர சூடான இடுகை இல்லாமப் போனா என்னாகிறது. அதான், அந்த மனக்குறை போக்குறத்துக்காக வேற யார் முயற்சி எடுப்பாங்க? காத்திருக்காமல் நாம தான முன்முயற்சி எடுக்கனும். ஏற்கனவே தமிழில் அ..னை...த்...து பதிவுகள் படிக்க புதிய நவீன உத்தி கண்ட முன் அனுபவம் வேற இருக்கா... அது கைகொடுக்கும்ன்ற நம்பிக்கை. தன் வினைத்திட்பமே தனக்குதவி.

அதான் இந்த நிரந்தர சூடு முயற்சி.
ஃபிப்ரவரி 12ம் தேதி சூடு படம் 1

ஃபிப்ரவரி 12ம் தேதி சூடு படம் 2

ஃபிப்ரவரி 16ம் தேதி சூடு படம் 1

ஃபிப்ரவரி 16ம் தேதி சூடு படம் 2

ஃபிப்ரவரி 16ம் தேதி சூடு படம் 3

சூடாக்கியவர்களுக்கு நன்றி.


இனி இந்த சூடு ஃபோட்டோ நாமளா இங்கிருந்து எடுக்குற வரைக்கும் நிரம் தரமா இங்கியேதான் இருக்கும். வேணும்ங்கறவங்க வந்து அப்பப்ப பாத்துக்கலாம்.



தொடர்புடைய இடுகை(கள்) :

தமிழில் வந்த, வராத, உள்ள, இனி வர இருக்கும் அனை..த்..து... பதிவுகளையும் படிப்பதற்கான நவீன உத்தி




Sunday, 21 February 2016

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் க(ரஃபி)லைச் செல்வங்களனைத்தும் கொணர்ந்திங்கு சேர்த்திடுவீர் | காஃபி காஃபியோ காஃபி


சென்றிடுவீர் திசை எட்டும் கொணர்ந்திங்கு சேர்த்திடுவீர் க(ரஃபி)லைச் செல்வங்களனைத்தும் - அதுக்கு தகுந்தார் போல ஒரு முயற்சி.


மீட்டர் டிகிரி காப்பி பத்தி இங்க காஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்???!!!!
எழுதி விட்டு காஃபி யப் பத்தி தமிழ் கூறும் நல்லுலகம் சொல்வது என்ன என்ற ஆர்வம் கூகிளிட்ட போது பலர் நமக்கு முன்னர் சொன்ன கருத்துக்கள் கிடைத்தன. படித்து புளகாங்கிதம் அடைந்து அவ்வின்பம் இவ்வையகம் பெற இங்கு.

பல வைரங்கள் கிடைத்தன!!!

காஃபில இவ்வளவு விஷயம் இருக்கோ இல்லையோ ஆனா காஃபினு எழுதுறதுல இவ்ளோ மேட்டர் இருக்கு. படித்துப் பார்க்க, தமிழ் காஃபி.......:
ஆய்தமும் காஃபியும்


காஸ்ட்லி காஃபி, வினவார் வழங்குவது!! : ஒரு கப் காஃபியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் !

இது கொஞ்சம் வேற லெவல் காஃபி - காபியும் கமலஹாசனும்??!!
: சுட்டி உரல் எங்கயோ மறந்து விட்டது. கிடைத்தவுடன் சேர்க்கிறேன்.

இது ஜாக்கி அவர்களின் சூடான காஃபி : கமலஹாசன் பதிவின் பின்னுட்டங்களுக்கான எதிர்வினையும், என் விளக்கமும்...
சொல்ற விஷயம் ரொம்பவே வெயிட். இதுல ஒரு திடீர் அறிவாளி - எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் பத்தியும் சொல்லி இருக்கார்.

இது எஜுகேஷனல் காஃபி - கீதா சாம்பசிவம் மேடம் வழங்குவது : அத்தியாயம் 10

இது ஶ்ரீரங்கத்து காஃபிகள் : சரியாப் பார்க்கலையே......:( இனி எப்போ?

இது ஆன்மீக காஃபி???!! : ஸ்ரீவைஷ்ணவர்களும் காஃபியும்

டெக்னிக்கல் காஃபி : காஃபி டெக்னாலஜி

மொக்கை காஃபி :  பில்டர் காஃபி

ஜவகரின் லால் காஃபி - ஜப்பான்லாம் போய் எழுதிருக்கார்  : காஃபி-ரைட்ஸ்/

இன்னொன்னும் : மிகுதிக் கண் மேற்சென்றிடித்தற் பொருட்டு 

வேற வழி இல்லாம டாக்டரே இப்படி சொல்ல வேண்டியதாப் போச்சு :

காஃபி எப்போது எப்ப‍டி குடிக்க‍ வேண்டும்? – மருத்துவர் கமலி ஸ்ரீபால்



சூஃபி காஃபி. நிரம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். பல புதிய தகவல்களுடன் ஆர்வத்தை தூண்டும் வகையில்  எழுத்து. இவ்வளவு பெரிய கட்டுரை எங்குமே சலிப்பு தட்டவில்லை - எழுதியவர் ரமீஸ் பிலாலி :
சூஃபியும் காஃபியும்

என்னெல்லாம் சந்தேகம் வருது பாருங்க : காபியும், டம்பளரும், பிறகு ஒரு சந்தேகமும்

இது காஃபி ஓவியம் :சுவையான காஃபியில் வரையப்படும் அழகான ஓவியங்கள் - பிரமிப்பூட்டும் படங்கள்

காலச்சுவடு வின் காஃபி : பாஸ்க் மொழி நாவல் : தாவரங்கள் காஃபி அருந்துவதில்லை

சர்ச்சைக்குரிய அரசியல் காஃபி : ​ஒபாமா காஃபி சர்ச்சையில் மன்னிப்பு கோரிய இஸ்ரேல் அமைச்சரின் மனைவி

இது மட்டும் டீ - பாட்டாளிகளின் பானம்???!!!: அறுசுவை - ஒரு கப் டீ...இரண்டு லட்சம் !!

இங்கிலீஷ் விளக்கம் :http://www.therichest.com/luxury/most-expensive/tea-time-the-worlds-most-expensive-teas/

இது கிரி கருத்து : சிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாபிடுபவரா??

தொழில் முறை : காஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு

துளசிதளத்தின் படிச்ச காஃபி : என்ன இருந்தாலும் படிச்ச காஃபி இது! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 77)
ரொம்பவே முக்கியமான ஒரு தகவல் இருக்கு இதுல
"நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது எங்கே பார்த்தாலும் கும்பகோணம் டிகிரி காப்பிக் கடைகள்தான். இது வரை போகலை. இப்ப அச்சு அசலுக்கு வந்துருக்கோம்.

நம்ம சீனிவாசந்தான் இப்போ நம்ம கைடு!  வாசலில் இருந்த போர்டின் லோகோவைக் காமிச்சு, 'இந்தப்படம் இருந்தாத்தான் ஒரிஜினல்.  மற்றதெல்லாம் போலி!'"

இவ்வளவும் சொல்லிட்டு ஒரு  விளம்பரம் இல்லன்னா எப்படி? இது நம்ம போட்ட காஃபி. :  காஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்???!!!!

Wednesday, 17 February 2016

காஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்???!!!!

காஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்???!!!!

இத இப்போ கொஞ்சம் முன்னாடி படித்தேன். எத.......


"திங்க"க்கிழமை 160215 :: காலையில் காஃபி... மாலையிலும் காஃபி!
http://engalblog.blogspot.com/2016/02/160215.html

நல்ல இடுகை. பகிர்வு.

அப்படியே அங்க போய் அவசரமா ஒரு கருத்து சொல்ல தேவை இருக்கறதா தோன்றி..........அதுக்கு ஒரு பதில் / கருத்து / செய்தி / தகவல் / பின்னூட்டம் போடலாம்னு போய் ஊட்டினால், அளித்த பின்  பார்த்தால், நம்ம கருத்து ஒரு பதிவே போடற அளவுக்கு வந்தது!!!. சரின்னு அப்புறம் அதுல இருந்த காப்புள்ளி, அரைப்புள்ளி, சந்திப்பிழை, எழுத்துப்பிழை எல்லாத்தையும் "முடிந்தவரை" பட்டி தட்டி இங்கே. மத்தபடி காஃபியோட படம் கிடம் வேணும்கிறவங்க அங்க போய் பாத்துக்கோங்க!!!


மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்???!!!!

விடுபட்டதாக எனக்குத்  தோன்றியவை :

மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி - ரெண்டுமே ஃபில்டர் காஃபிதான்னாலும் மொறைன்னு ஒன்னு இருக்குல்ல....

  1. >  டிகிரி காஃபி = இது பெரும்பாலானோருக்கு தெரிந்த லாக்டோ மீட்டரில் பாலின் கொழுப்பு / தர அளவு பார்த்து வாங்கி காபி போடும் முறை ஆகும்
  2. >  மீட்டர் காஃபி = இது கொஞ்சம் சிக்கலான செய்முறை கொண்டது???!!! பெரும்பாலானோர் எண்ணக்கூடியது போல இது லாக்டோ மீட்டரில் வரும் மீட்டர் அல்ல......!!!! சில பல சர்க்கஸ் வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும். எதையுமே ப்ளான் பண்ணிதான் செய்யனும்னு சும்மாவா சொல்லிருக்காங்க?

                  2.1 > டிகாஷனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனை கை வாகிற்கு தகுந்தாற்போல் இடதோ வலதோ கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.
                  2.2> இன்னொரு கையில் தேவையான அளவு பாலினை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, அப்படியே அலாக்காக கை வீச்சில் முழுதுமாக (பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டு) மேலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூக்கி பிடிக்க வேண்டும்.
                  2.3> இப்போது இரண்டாவது கையையும், அலாக்காக கை வீச்சில் முழுதுமாக (பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டு) கீழே எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாழ்த்திப் பிடிக்க வேண்டும்.
                  2.4> மேலே உள்ள பாத்திரத்திலிருந்து பாலினை கை உயரம் மாறாமல் அப்படியே (சொய்ய்ஈங்குன்னு) டிகாஷன் பாத்திரத்திற்கு உள்ளே செலுத்த?? வேண்டும்.
                  2.5> மேற்கண்டவற்றை செய்வது கண நேரத்தில் நிகழவேண்டும் மற்றும் இந்த நிகழ்வின் பொது இரண்டு கை / பாத்திரத்திற்கு இடைப்பட்ட "தூரம்" குறைந்தது "ஒரு மீட்டர்" க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
                  2.6> "மீட்டர் காபி" தயார்.

இது தஞ்சை ஸ்பெஷல்!!!

இது தற்போது கிடைக்கக் கூடிய இடம் : மேத்தா கடை என்று அழைக்கப்படும் காபி பேலஸ் - தெற்கு வீதி அருகில் - எல்லை அம்மன் கோயில் தெரு மற்றும் அய்யன்கடை தெரு, தஞ்சை.

இப்போ சொல்லுங்க, இதுக்கு "மீட்டர் காபி" னு பேர் வச்சவன் ரசிகனா இல்லையா???!!!

இந்த கடைக்கு வேறு பல விசேஷங்களும் உள. கூகிளார் உதவக்கூடும்.


தொடர்புடைய இடுகைகள் :

இருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமும்???!!!

காப்புரிமை சந்தேகங்கள்......திருகாணி வெளிப்பான் | Patent....... Screw Feeder


http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/patent-screw-feeder.html 

Tuesday, 16 February 2016

தமிழில் வந்த, வராத, உள்ள, இனி வர இருக்கும் அனை..த்..து... பதிவுகளையும் படிப்பதற்கான நவீன உத்தி

பதிவுலகில் ஒரு புதிய மைல் கல். இதுவரை தமிழில் வந்த, வராத, உள்ள, இனி வர இருக்கும் அனைத்து - அனை..த்..து... பதிவுகளையும் படிப்பதற்கான நவீன உத்தி.....

இப்போ எல்லாரும் நல்லா கவனமா கேட்டுக்கோங்க, பின் கண்ட எல்லாத்தையும் நல்லா பாத்து நினைவில் வைக்கணும். இதுக்கு பேருதான் கையேடு (ஆப்போரேஷன்  மானுவல்***).

க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ 
க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
ஷ ஸ ஜ ஹ க்ஷ் க்ஷ ஸ்ரீ  
0 1 2 3 4 5 6 7 8 9 
~!@#$%^&*()​​​ +=/-<>?":{}|[]\;',./ 

***வெளியீடு 0.0.0.

பாத்துகிட்டீங்களா???? இப்போ மேல இருக்குற இந்த எழுத்த எல்லாம் மாத்தி மாத்தி சரியா அந்த அந்த எடத்துல போட்டீங்கன்னா பதிவு ரெடி. வேறு எங்கும் செல்லத் தேவை இல்லை. எதாவது சந்தேகம் இருந்தால் கையேட்டினை இன்னொரு முறை கவனமாக படிக்கவும். அதுக்கப்புறமும் சந்தேகம் இருந்தா கீழ உள்ள சுட்டில இருக்குற வீடியோவ பாக்கவும்.


https://youtu.be/dESjsp80WUY

இங்க பாருங்க, நல்லா பாத்துகிடுங்க, இதுதான் மூட்டை பூச்சிய ஒழிக்கரதுக்கான நவீன கருவி - இயந்திரம். இந்தாலக்க இப்பூடி எடுத்து இந்த மூட்டபூச்சிய தூக்கி இதுக்குள்ள போட்டு, நச்சக்.

வடிவேலு - மூட்டைப்பூச்சி - நவீன இயந்திரம்



இது கொசுறு : https://youtu.be/hUfOoIDzVj8 

அதுக்கப்புறமும் சந்தேகம் இருந்தா.....,,,,,,வேற வழி இல்ல, பின்னூட்டப் பெட்டி உங்களுக்காகவே...!!!???


## அடுத்த பதிவு, வேறொரு நாளைக்கு, எல்லா ஆங்கில - இங்கிலீஷ் - English  - பதிவுகளையும் எப்படி படிக்கறதுன்னு சொல்லி தரதுக்கு.

Monday, 15 February 2016

இருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமும்???!!!


இருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமும்

Iruttukkadai Halwa - Location and Original ID

Iruttukkadai Halwa - Location ID

No Name Board - Iruttukkadai Halwa

Que for Iruttukkadai Halwa!!!
பட உதவி : கூகுள் மற்றும் வலை உரிமையாளர்கள்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறதா நினைக்கக்  கூடும். டொயோட்டா உற்பத்தி முறைமை பற்றி நான் புதுசா சொல்ல ஒன்னும் இல்ல. இருட்டுக்கடை மற்றும் அல்வா பத்தியும் புதுசா "நான்" சொல்ல ஒன்னும் இல்ல. வேணும்னா, யாராவது ஒரு ரெண்டு கிலோ வாங்கி அனுப்பினீங்கன்னா உங்களுக்கு இந்த புண்ணியம் கிடைக்க பெறுவதாக (:-) :

இதுவரைக்கும் இருட்டுக்கடை அல்வா பத்தி சொன்னவங்க எல்லாரும் அதோட சுவை, கடை, பல்பு, ஆறு தட்டு, கடையோட பெயர்காரணம், ஸ்தல புராணம்னு சொல்லி முடிச்சிருக்காங்க.  பட

நாம அப்படி விடலாமா?? அதான்.  இதுல முக்கியமா கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா, அந்த ஆறு தட்டு மேட்டர் தான்.

இப்போ TPS என்ன சொல்லுது, லெவல்டு புரடக்சன் அப்படிங்கற JITஐ  பின்பற்ற சொல்கிறது. அதுக்கு என்ன அடிப்படை தேவைன்னா, வாடிக்கையாளரை நன்றாக புரிந்திருத்தலும், தேவை வழங்கல் சங்கிலியினை சரியாக பராமரித்தலும் வேண்டும். இதை செய்வதுடன் கூட முறை வழியாக்கச் செயல்பாடுகள் முடிவடைந்த பொருள் கையிருப்பினை குறைத்தலும், விரைவாக பயனர் கை சேர்த்தலும் முதன்மை பெறுகிறது.

இது ஆப்பிள் போல எதிர்பார்ப்பினை தக்க வைக்கவும் செய்கிறது!!!


மற்றபடி, இது மட்டும்தான் "டொயோட்டா உற்பத்தி முறைமை" னு யாரும் நினைக்காம, கீழ்க்கண்ட உரல்களை சென்று பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன்.!!! வேறு சில பல பயனுள்ள தகவல்களும் உள்ளது.


-------****-------****-------****-------****-------****-------****-------****-------

TPS (R) = Toyota Production System

சுட்டிகள் உரல்கள் :
டொயோட்டாவின் நிறுவன செய்தி TPS குறித்து
http://www.toyota-global.com/company/vision_philosophy/toyota_production_system/

விக்கி :
 டொயோட்டா உற்பத்தி முறைமை
Toyota Production System
https://en.wikipedia.org/wiki/Toyota_Production_System


லீன் கலை : TOYOTA PRODUCTION SYSTEM BASIC HANDBOOK
http://www.artoflean.com/files/Basic_TPS_Handbook_v1.pdf

Best Practices: Lean Manufacturing Toyota Production System (TPS)
By · 
http://www.1000ventures.com/business_guide/cs_efficiency_toyota_ps.html


நமது உலக நாயகர் உரையாற்றிய சர்வதேச புகழ் ஹார்வர்டு பல்கலை TPS குறித்து :{இவங்க இ.க.அ. பத்தி எழுதாதனால நம்ம எழுத வேண்டியதாப் போச்சு!!!}

Decoding the DNA of the Toyota Production System
By ·  Steven Spear ·  H. Kent Bowen 
https://hbr.org/1999/09/decoding-the-dna-of-the-toyota-production-system

Learning to Lead at Toyota
By · Steven Spear 
https://hbr.org/2004/05/learning-to-lead-at-toyota?cm_sp=Article-_-Links-_-Top%20of%20Page%20Recirculation

The Process Audit
By · Michael Hammer 
https://hbr.org/2007/04/the-process-audit?cm_sp=Article-_-Links-_-Top%20of%20Page%20Recirculation

Hammer Evaluating Work Sheet :
இதனுள் ஒரு உற்பத்தி தொழிற்சாலை / நிறுவன மதிப்பு அளவீடு முறைக்கான செயல் முறைத் தாள் உள்ளது. பயனுள்ள ஒன்று.

 The Contradictions That Drive Toyota's Success
By ·  Hirotaka Takeuchi ·  Emi Osono ·  Norihiko Shimizu 
https://hbr.org/2008/06/the-contradictions-that-drive-toyotas-success?cm_sp=Article-_-Links-_-Top%20of%20Page%20Recirculation

Read A Plant Fast
By · R. Eugene Goodson 
https://hbr.org/2002/05/read-a-plant-fast?cm_sp=Article-_-Links-_-Top%20of%20Page%20Recirculation


இப்போ இருட்டுக்கடை அல்வா பற்றி பலரும் தெரிவித்துள்ள கருத்துகள், செய்திகள்  மற்றும் பயனுள்ள தகவல்கள். மேலே சொன்னவை தவிர.

ஏனெனில், செவிக்குணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

ஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா By கடல் பயனங்கள் 


இருட்டு கடை அல்வா By அறிந்ததும் அறியாததும் 

இருட்டு கடை அல்வா 1 By அறிந்ததும் அறியாததும்


இருட்டு கடை அல்வா By வீடு திரும்பல் 




விக்கி :  அல்வா 

Sunday, 14 February 2016

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 8 பகுதி நிறைவு!!

மாறினார் டிரைவர்.....

திங்கள் காலையில் தயாராக இருந்தவனுக்கு ஃபோன் வந்தது.

ஹலோ, கேப் டிரைவர் பேசறேன், இன்னைக்கு பிக்கப்க்கு வீட்டு அட்ரஸ் சொல்லுங்க...???!!!

ஓக்கே.
அண்ணா நகர் 18th  மெயின் வந்தீங்கன்னா........{இப்போ வரைக்கும் அட்ரஸ் கேட்டு வச்சுக்கலையே}

சார் சீக்கிரம் சொல்லுங்க நான் ட்ரைவிங்ல இருக்கேன். முகப்பேர்ல ஒரு பிக் அப் பண்ணிட்டு சிக்னல் கிட்ட வந்திற்றுக்கேன். ஃபோன் பேச முடியாது ட்ராபிக்ல பாத்தாங்கன்னா  ஃபைன் பண்ணுவாங்க. {அத விட உள்ள இருக்கும் சக ஊழியர் அலுவலகம் போய் - On Phone while driving  - ரிப்போர்ட் பண்ணிட்டா பிரச்சினை.}

ஒஹ்  ஓகே.....அண்ணா நகர் 18th  மெயின் வந்தீங்கன்னா........அப்படியே லெப்ட்ல பாருங்க, ஸ்டேஷன் ரோடு சைடுல
"3 மாடி அபார்ட்மெண்ட், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.......".

ஒஹ்  ஓக்கே சார்.

மணி 8.30 ஆகிடிச்சு.....இன்னும் கேப் வந்த பாடில்லை. கால் பண்ணாலும் எடுக்க மாட்டேன்குறார். கீழே இறங்கி வந்து கா....த்திருந்தேன்.

9 மணி வாக்குல ஒரு கேப் குறுக்கயும் நெடுக்கயுமா 2-3 தட போச்சு.

ஃபோன் வந்தது.
அடையாளம் கொஞ்சம் கரக்டா சொல்லுங்க. இங்க ரொம்ப நேரமா தேடிற்றுக்கோம் நாலு கார் எங்கயுமே தென்படலையே சார்.

(:-) (:-) (:-)



தொடர்புடைய இடுகைகள் :

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 5

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 6

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 7

Friday, 12 February 2016

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 7


ஹாங்.....சொல்ல மறந்து போச்சு, இந்த களேபரத்திற்கு{யாருக்கு??} நடுவில்  ஃபாக்டரி கட்டடம் ரெடி ஆகியிருந்தது....

முன்னர் இருந்த நிறுவத்தில் அலுவலகம் செல்ல வண்டி - பஸ் - ஒரு சில குறிப்பிட்ட நிறுத்தங்கள் வழியே செல்லும், நாம் அங்கு சென்று காத்திருந்து ஏறிக்கொள்ளலாம்.

இங்கு இந்த நிறுவத்தில், துவக்கத்தில் இருந்த   50 முதல் 80 பேர்களுக்கு கால்   ( அட, அதாங்க, இந்த அகில உலக கூட்டுத் தொலைக் குலவு என்றழைக்கப்படும்,  குளோபல் கான்ஃப்ரன்ஸ் கால்) , அதுவும் அவர்களெல்லாம் சென்னையின் நீள அகலத்தின் பல பகுதிகளில் இருக்கும் போது பஸ் ஒத்துவராது.

பஸ் விட்டால் அது சென்னையை சுற்றி ஊர்வலம் வந்து அலுவலகம் அடையும் போது ஒன்று, காலை 11 மணி ஆகிருக்கும் இல்லை முதலாவதாக ஒருவரை காலை 4.30 மணிக்கு பிக் அப் செய்ய வேண்டியதிருக்கும்!!! அவர் 9மணிக்கு சரியான நேரத்திற்கு அலுவலகம் சேரலாம்???!!!

மாற்று வழி....இன்டிகாப் அதாங்க இண்டிகா கேப். அத விட கம்பனி பாரம்பரியத்த மதிச்ச்சும், என்ன இருந்தாலும் ஒரு ஐ டி கம்பனி பஸ் விடுறது அவ்வளவு சிறப்பு இல்லங்கறதாலையும், அப்போ இருந்த (அப்போ தான் பெங்களூர் தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருந்த) ஃபெசிலிட்டி மக்களுக்கு பஸ் பயணம் அவ்வளவாக பரிச்சியமில்லாததாலும், இருந்த 50-80 பேரும் கூட வெவ்வேறு நேரத்தில் வர வேண்டியிருந்ததாலும் - i e., that aligning to APAC time zone moment, திடீரென அன்றன்றைக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது என்ற முடிவினை எடுக்க யாரும் ஃபெசிலிட்டி டீமிடம் ஆலோசிக்க வேண்டியதில்லை என்ற நடை முறை யதார்த்த நிர்பந்தத்தின் காரணமாகவும், இதை பார்த்தால் இதற்கு O R (ஆபரேஷன் ரிசர்ச்) ல் ட்ரான்ஸ்போர்டேஷன் ப்ராப்ளம் என்று பெயர் என்பதற்கும் MILK RUN*** கான்செப்ட் பயன்படுத்தலாம் என்ற அளவிற்கும் மேல் எனக்கு தெரிந்திருக்க வில்லை என்பதாலும்,  இந்த அளவினை போல் 100 மடங்கு அதிக அனலிடிக்ஸ்+++ திறமை கொண்ட மக்கள் டீமில் உண்டு என்பதாலும் அவர்களுக்கு இதைவிட வேறுபல முக்கியமான ப்ராஜெக்ட் வேலைகள் இருந்ததாலும் மேலும் இந்த வேளையில் இதைப்போன்ற  SSS வைத்துக்கொள்ளும் ஆலோசனைகளை  கொண்டு சென்று சொல்ல யாரும் தயாராக இல்லை என்பதாலும் எங்களின் கேப் பயணம் இனிதே சென்று கொண்டிருந்தது. {மூச்சு விட்டுக்கோங்க}

சராசரியா 20-25 கேப் கள் 30 முதல் 35 ட்ரிப் அடித்து 50 முதல் 80 பேரை காடு மலை மேகம் அருவி மேடு பள்ளம் பல கடந்து சீர்மிகு சென்னை, கவின் காஞ்சி, திரு வள்ளூர் மாவட்டப் பகுதிகளிலிருந்தும், கொண்டும், சென்றும், சேர்த்து வந்துகொண்டிருந்தன.

ரணகளத்தின் குதூகலமாக அவ்வப்போது காஸ்ட் சேவிங் மெஷர் ஆக 5 க்கு மேற்பட்டோர் அருகாமை {20 முதல் 30 கி.மீ சுற்றில் என புரிந்து கொள்க?!!} பகுதிவாழுனராக மாறும்தோறும் குவாலிஸ் மற்றும் டவேரா பயன்பாடு கொண்டு வர......ஷெடுல்  என்னவோ போடவேண்டிய ஊழியர் அவர் அவரின் பூகோள-புவியியல் மற்றும் அறிவியல் சமன்பாட்டின் படி, சமயத்தில் குவாலிஸில் 2 பேர் இன்டிகாவில் 4 முதல் 6 பேர் வரை என ஸ்கெட்யூல் செய்துகொண்டிருந்தார் - 'பூமத்திய ரேகை' எங்குள்ளது என அவரிடம் கேட்டு பெற்ற பதிலை இங்கு விளக்க முடியாது எனவே அமைதி பெறுக -  எங்களுக்கு, யாரை முதலில் ஏற்றுவது /இறக்கி விடுவது என்பதிலான அரசியல் நோகடித்துக்கொண்டிருந்ததது.
நொவ் இட் இஸ் ஹிஸ் டர்ன் யூ  ஸீ.

இதிலும் வண்டிகள் மற்றும் ஓட்டுனர் சுற்றில் வருவர் - தொடர்ந்த பரிச்சியம் வேறு சிக்கல்களை கூட்டக் கூடும் என்பதால். 

அது கூட்டிக் கொண்டு வந்தது.....அடுத்த.....ஆமாம் அதேதான்....அது.,

---------------***----------------------------***----------------------------***---------------


இதில் வரும் Milk Run மற்றும் Analytics போன்றவை யாது என்போர், இங்கு, கீழ்க்கண்ட உரல்களிற்கு  விஜயம் செய்ய பரிந்துரை செய்கிறேன்!!!°°°°

*** தமிழில் : Milk Run = பால் கொள்வனவு ஓட்டம் / பயணப் பாதை.

Press here for English : Milk Run Concept.  மற்றும்  Milk Run Logistics

நன்றி : விக்கிபீடியா.


+++ Analytics : 5-months nano-MBA in Business Analytics | Sunstone Business School

                          manipal executive education | Advance Certificate in Business Analytics



தொடர்புடைய இடுகைகள் :

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 5

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 6

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 6


முதல் ஒரு வாரம் ஒன்னும் பிரச்சினை இல்ல. இன்னும் ஃபாக்டரி கட்டடம் முடியாததால அலுவலகம் ஒரு பெரிய டவர்ல மயிலாப்பூர்ல இருந்து இயங்கி கொண்டிருந்தது. காலைல ஓ சி 2 வீலர் ( நம்ம மாமணியோடதுதான் - ஹி  ஹி - அவங்கிட்டதான் காரு இருக்கில்ல? அப்புறம் என்ன!??!!) ல கிளம்பி சுத்தி முத்தி ஒரு வழியா டெய்லி??!! வழி கண்டு பிடிச்சு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன்.

எச் ஆர் காரர் பேச்சு வாக்கில் கேட்டார் "எங்க ஸ்டே பன்னிருக்கீங்க" சொன்னேன்.
ஓ அப்படியா? நம்ம ரா... அவங்க எல்லாம் இங்க பக்கத்துலதான் சென்னை-இன்ன் ல தங்கியிருக்காங்க.
ஈவினிங் போகும் போது போய் பார்த்தேன். பெரிய ஹோட்டல். ஹ்ம்ம் நமக்கு கட்டு படி ஆகாதுப்போவ்.

வெள்ளிக் கிழமை கூப்பிட்டு நம்ம மானேஜர் சொன்னார், பாஸ் போர்ட் இருக்கில்ல, திங்கள் கிழமை மலேசியா பிராந்திய அலுவலகத்துக்கு போகணும். ஒரு மாசம் ட்ரைனிங். நன்று. ரா...ம் வராரு.

தயாராகணும். இப்போ பாதி லக்கேஜ் அங்க இருக்கே.....ஒக்கே. எவ்வளவோ...{வேண்டாம்......வேல பாக்கலாம்}

MTR உணவு பொருட்களும் {நன்றி CFTRI & கார்கில்} சில உடைமைகளுடனும், முதல் வெளிநாட்டு பயணம்.

அருமை. இறங்கிய பின் பொத்திக் கூட்டிக்கொண்டு போய் தங்கும் அறையில் விட்டார்கள்.

ரா...ம் நானும் ஒரு பெரிய அறையில் தங்கினோம் (Furnished Apartment). வேற என்ன, என்ன சாயங்கால வேளைகளில் பேச்சு பேச்சு பேச்சு..அது போன்ற ஒரு நேரத்தில் கேட்டார்....நீ ஏன்யா அவ்ளோ தூரத்துலேர்ந்து டெய்லி ட்ராவல் பண்ணி வர்ற. இப்போ தான் ஃபாமிலி  இன்னும் வரல இல்ல? அப்புறம் என்ன பேசாம வந்து அங்கேயே சென்னை-இன்ன் ல தங்க வேண்டியதுதான?
??!!! இல்லங்க எதுக்கு அவ்ளோ செலவு?
யோவ், மொத 15 நாள் இது ஜாயினிங் நேரத்துக்கான கம்பனி அக்காமடேஷன்.

???!!!!என்னது........ஞே என்றோ ஙெ என்றோ விழித்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அவ்ளோ நல்லா கேட்டு, ரா... தங்கி இருக்காருன்னு எல்லாம் சொன்ன ம .வ. அதிகாரி இத சொல்லலையே.....{மறுபடி மறுபடி ஆவாஸ் அன்ஞிங்கா)
ஓக்கே.....எவ்வளவோ....{நோ....கீப் குயட்}

சரி, ஒரு வழியாக ஒரு மாசம் கழித்து கற்றதும் பெற்றதும் உடன் கூட சேர்த்து, ஒரு கண்டு பிடிப்பும் நிகழ்ந்தது.
அது, அப்போது ஏர்டெல் ரோமிங்கிலோ அல்லது சாதரனமாகவோ கர்நாடகா வில் இருந்து தமிழ்நாட்டிற்கு மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பேசுவதை விட, அதே நம்பரிலிருந்து மலேசியாவிலிருந்து பேசும்போது ரோமிங் சார்ஜ் இல்லை /குறைவு!!!!!!????

ஒரு மாசம் கழித்து வந்தேன்.....எங்க? அங்கேயேதான்.
அவரு மேரேஜுக்கு தான் இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கே.
மேலும் ஆடி மாசத்துல வீடு மாறக்கூடாது யூ ஸீ ........

ஹாங்.....சொல்ல மறந்து போச்சு, இந்த களேபரத்திற்கு{யாருக்கு??} நடுவில்  ஃபாக்டரி கட்டடம் ரெடி ஆகியிருந்தது....

தொடர்புடைய இடுகைகள் :

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 5

Thursday, 11 February 2016

ராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....

நம்பினார் கெடுவதில்லை.
சொன்னா யாரும் நம்புறதில்லை.
இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க.




அடவி ராமுடு,
கலியுக இராமன்,
கோகுல வாசன்,
சுதர்சன கிருஷ்ணன் காலத்துல அவரு கூட

ஆச்சி மனோரமா......


இன்னமும் நம்பாதவங்க / நம்ப முடியாதவங்க கோவை ராயல் திரையரங்கம் சென்று பார்க்க பரிந்துரை செய்கிறேன்.

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 5


ரெண்டு மணிக்கு..........................
வந்தார்,,,,,,,,,,,,,,,,
பாண்டி சென்ற என் மாமணி.

ஹ ஹாய்.  ஹாய் சார்.

உற்சாகமாக கேட்டேன், ஏண்டா வீட்ட தேடி கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டம்பா.

நாந்தான் சொன்னேனே சார், அது ரொம்ப சிம்பிள்  "3 மாடி அபார்ட்மெண்ட், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்......."

டேய், படுத்தாத இங்க நெறையா 3 மாடி இருக்கு ஆனா அங்க நாலு காரும் இல்ல 3 மாடியும் இல்ல.

சார்....நான் சொன்னப்ப மணி 7.30 (ஏழற). நீங்க ஒரு அரை மணி நேரத்துல இங்க ரீச் ஆகிருப்பிங்க இல்ல. அதுக்கப்புறம் 8-830க்கு எல்லாம் வண்டி எடுத்துட்டு ஆஃபிஸ் போயிருப்பாங்க. 

ஒஹ் அப்படியா??!!! {நான் அப்போவே வீட்டுல செக் பண்ணி அந்த ஆட்டோ காரருக்கு சொத்து கொடுத்திருக்க வேண்டும்}

வேனும்னா நாளைக்கு காலைல பாருங்க என்னோடதையும் சேர்த்து அஞ்சு கார் நிக்கும்.{ பய புள்ள சீரியாச்சாத்தான் சொல்லுது...}

இன்னும் அட்ரஸ்னு ஒன்ன சொல்லல நானும் கேட்டுக்கல......

அடுத்த நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!!குக்கு தயாராவது அப்போது தெரியாது.


தொடர்புடைய இடுகைகள் :

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4

தேடலும் பயணமும் கவிதையும்

Wednesday, 10 February 2016

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.....

முனகி கொண்டிருந்த ஃபோன எடுத்து என் மாமணிக்கு ஃபோனினேன்.

ஒரு கால், ரெண்டு கால், மூணு கால்,...............எட்டாவது காலில் லும் எடுக்கவில்லை....

இப்போது நிலைமை "ஓடும் ரயில் வண்டியிலிருந்து", "இடை நில்லாப் பேருந்து ஆகிவிடும் போன்றிருந்தது".

ஃபோனும் ஒரு கோடு பேட்டரியோடு உயிர் பிழைத்திருந்தது.....

ஒரே கால் ஒருக்கால் போகா விட்டால் என்ன செய்ய....
மட்ட உரிச்ச தேங்காய உருட்டி விட்டா அது நிலை வந்து சேர்றதுங்கறது இருக்குற குடுமி எடையைப் பொருத்தது. இங்க அதையும் இல்ல பிச்சிப் போட்டு உருட்டி விட்டு இருக்கு. வாழ்க ஐசக் நியூட்டன்!!

இப்போ பாத்து தெரியாத ஒரு நம்பரிலிருந்து 2-3 மிஸ்ட் கால்.
எடுக்கல.
இருக்குற சொச்ச பேட்டரியும் செத்து போயிடுச்சுன்னா........

சரி எதுக்கும் விசாரனைய தொடங்கலாம். இதுவரைக்கும் மொத்தம் மூணு 3 அபார்ட்மெண்ட் காம்பௌண்ட் இருக்கு அந்த ரோட்டுல. ஆனா எதுலயும் வெளில  நாலு கார் நிக்கல. 

இறங்கி கேக்கலாம்.
கேட்ட ரெண்டுலயும் இருந்தவங்க உள்ள விடாம அட்ரஸ் கேக்கவும் உரைத்தது இப்படி ஒரு விஷயம் இருக்கு இல்ல.... இப்ப யோசிச்சு என்ன பிரயோஜனம்.

ரணகளத்துலயும் ஒரு குதூகலம் இல்லன்னா எப்படி? விசாரித்தவரையில் ஒரு வீட்டில் பிட்டு வைத்த குட்டித் துண்டு ஒன்று லட்டு போலவே இருந்தது. பூந்திகள் சேர்ந்து லட்டென்றவன் எவன்?. சிந்தித்திருந்த வேளையில் தட்டியது  பல்லிடுக்கில் கிராம்பு துண்டு. வேறொன்றுமில்லை அவங்க அப்பா வந்து கதவு சார்த்தி போனார். லட்டில் கிராம்பும் ஏலமும் போட்டவன் எவன்??!!

மணி 9.30.

8 மணிக்கு பயணம் ஆரம்பித்து பத்து நிமிட தூரம் கடந்தால் அப்போது மணி 9.30 உம் ஆகக்கூடுமென்ற பேருண்மையை உரைத்தது. வாழ்க ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!!! ( கிலுகிலுப்பை கவிதை ).

இப்போது மறுபடியும் அதே தெரியாத??!! ஒரு நம்பரிலிருந்து 2-3 மிஸ்ட் கால். எடுக்கல. {இப்போ அது தெரிஞ்ச நம்பரா இல்ல தெரியாத நம்பரானு டவுட்}

மறுபடியும். ஏற்கனவே மிஸ்ட் கால் வந்து அது தெரிஞ்ச நம்பரா போய்ட்டதால??!! இப்போ எடுத்து பேசினேன்.

சார் நான் (மாமணி யோட ரூம் மேட்) பேசறேன். (:-).....இப்போதான் அவரு மெசேஜ் பன்னாப்டி. அவரு மீட்டிங்ல இருக்கறதால எடுக்க முடியலாம். எங்க இருக்கீங்க.....

ஆஹா...., சொல்லுங்க பாஸ். வீட்ட தேடிட்ருக்கேன்.

ஓஹ் அப்படியா....அது ரொம்ப சிம்பிள் சார், 
3 மாடி அபார்ட்மெண்ட், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.......

(என்னாது)....!@#$%^&*()​+​)((*&^%$#@! மறுபடியும் முதல்லேர்ந்தா??!!

இல்லங்க நான் இப்போ அந்த ரோட்டுலதான் இருக்கேன், கொஞ்சம் நம்பர் அட்ரஸ் சொல்லுங்க.

அப்படியா,,,சரி சரி, இந்த லெஃ ப்ட் ல பாத்திங்கன்னா ஒரு ரிலையன்ஸ் ஃபிரஷ் இருக்கும் {இது எவ்ளோ நல்லா இருக்கு அட்ரஸ்} அதுலேர்ந்து மூணாவது பில்டிங் வந்திங்கன்னா வீடு. நீங்க வாங்க நான் வெளில வந்து நிக்கிறேன்.  {அப்புறம் ஏன்டா ஆவாஸ் அன்ஞிங் ஆவாஸ் அன்ஞிங்னு கிலிய கூட்டுறீங்க}

நன்றிங்க.......

போனோம். நீங்கதானா அது ரெண்டு மூணு தட அந்த வண்டில கிராஸ் பண்ணிற்றுந்தீங்க....நான் கூட ஏதோ அட்ரஸ் தேடிட்ருப்பாங்க போலன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
{இதற்கு என்ன பதில் சொல்வது.....ஏன்னா நம்ம கிட்டதான் அட்ரஸ் இல்லையே - அப்புறம் எப்படி அட்ரஸ் தேடுறது??}

நீங்க ஆட்டோ ல இல்ல வருவீங்கன்னு சொன்னாப்டி. {ஒஹ் இப்படி ஒன்னு இருக்கா? ஆட்டோ காரரோட நமக்கு வாய்க்கா வரப்பு பிரச்சினைனு  இவருக்கு சொல்லலாமா???} {பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாம்}.

இங்கதான் சார் நல்ல தண்ணி போர் வாட்டர் கிடைக்குது அதான். நல்ல இடம் சார். ரூம் மேல 3வது ஃப்ளோர். வாங்க போலாம். நான் என் சீனியர பார்த்தேன். கார பார்க் பண்ணிட்டு வந்தார்.......அப்ப்பாடா ஒரு வழியா வந்தாச்சு. பக்கத்துல இன்னொரு கார் சத்தம். ஒருத்தர் பார்க் பண்ணிட்டு ரிலையன்ஸ் ஃபிரஷ் பாக்கம் நடந்து போனார். இப்போ வெளில பார்த்தேன். நாங்க வந்த காரோட சேர்த்து  நாலு கார் இருந்தது.......(;-)


அவரோடு சேர்ந்து மேல போகும்போது சொன்னார், மூனே  ஃப்ளோர்ங்கறதால லிஃப்ட் லாம் இல்ல படிதான். 
ஓக்கே. இப்போ 21 லக்கேஜ நினைத்து பார்த்தேன். டிக்கி முதல் அக்கி வரை அள்ளி எடுத்து வந்தவைகளை இறக்கி வைக்க முடியாது போல. எவ்வளவோ.......ம்ஹ்ம்ம் ஹூம் வேண்டாம்.

நெக்ஸ்ட் டு நெக்ஸ்ட் மன்ந்த் எனக்கு கல்யாணம். அதுக்கப்புரம் ஃபாமிலி இங்க வருவாங்க. பசங்க வேற இடம் போறாங்க. நீங்க அவசியம் மாரேஜுக்கு வரணும். [நல்ல விதமாகவே சொன்னார்]. {ஒரு புதிய நன்பேண்டா.}

ஓ சந்தோஷம். வாழ்த்துக்கள். 

போனால் அங்கு நல்ல பெரிய 2BHK வாதான் இருந்தது. என்ன கொஞ்சம் அவரோட கல்யாண ஏற்பாட்டுல வீட்டு சாமான் சேர்த்திருந்தார்.

நன்று. ஸிறப்பு ஸிறப்பு. மகிழ்ச்சி.

இப்போ சீனியர பாத்தேன். அவர் புரிந்தவராக, நீ எப்படியும் தாற்காலிகமாக தான இங்க இருப்ப...ஆஃபிஸ் போக வசதி எப்படியும் வேற ஏரியா தான். நானும் வேற வேலையா கிளம்ப வேண்டிருக்கு. நான் ஒன்னு பண்றேன் லக்கேஜ்லாம் வண்டில அப்படியே இருக்கட்டும். இப்போ என்ன வேணுமோ அத எடுத்துக்கோ மீதி நான் வீட்டுல கொண்டு போடறேன். நீ ரூம் முடிவு பண்ணிட்டு சொல்லு அங்க எடுத்து வரேன். 

ஆஹா வேறென்ன வேறென்ன வேண்டும்....அப்படியே ஆகட்டும்.

வழியனுப்பல்.

செட்டில். அவரோடு (அவரது) கல்யாண அளவளாவல் முடித்து குளித்து கிளம்பி சாப்பிட்டு வந்தோம். ரெண்டு மணிக்கு.......................... வந்தார்,,,,,,,,,,,,,,,, பாண்டி சென்ற என் மாமணி.
ஹ ஹாய்  ஹாய் சார்.

உற்சாகமாக கேட்டேன், ஏண்டா வீட்ட தேடி கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டம்பா.

அதுக்கு.,.,.,.,.,சொன்னானே ஒரு பதிலத்தான்.,.,.,,.,.திகில் அடைஞ்சேனே அத நினைச்சுத்தான்.........அது...... 

Tuesday, 9 February 2016

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3


எப்படியும் ரஸ்க் சாப்புடறதுன்னு ஆகிப்போச்சு, சுனா பானா சுத்தி அடி.

என்ன பண்ணலாம்..???

பராக்கு பாத்துகிட்டே வந்த ஒரு KSRTC கண்டக்டர் கிட்ட "அண்ணவரே ஈ பேகுகளன சொல்ப நோட் கொள்தீரா நானு ஓகி ட்ராலி தகொண்டு பருத்தினி" என்றதும், சென்னையில் கன்னடம் கேட்ட செவியோடு சேர்த்து தலையசைத்தார். ஆகா இதுவன்றோ இருமொழி அறிதலின் மகிச்சி.

ட்ராலி கிடைத்தது. அவருக்கு "தும்ப தாங்க்ஸ்" ஒன்றை சொல்லி லா...க்கேஜ்களை  எடுத்து அதன் மேல் வைத்து தள்ளிக் கொண்டு வாசல் வந்தேன்.

ஹ்ம்ம் ப்ரீ பெய்ட் கவுன்டர் இல்லையா.....வாட் எ பிட்டி வாட் எ பிட்டி?

ஆட்டோக்காரர் குறைந்தது இரண்டு ஆட்டோ வேண்டும் என்று ஆரம்பித்தார். ஓக்கே....எவ்வளவு என்றதும் இருக்கும் சொத்தில் பாதியை கேட்டார்......
போய் சேர்ந்து விட்ட ரெண்டு பக்க தாத்தா பாட்டிகளும் இதைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே. எதுக்கும் ரூம் போன பின் முதல் வேலையாக வீட்டுக்கு ஃபோன் போட்டு கேக்கணும்.

ஃபோன் அடித்தது,,,,,,பார்த்தேன்.....ஆஹா ஆபத்பாந்தவன், என்னோட சீனியர், முன்னாள் சக ஊழியர், சென்னையில் இருப்பவர். கால் செய்திருந்தார்.

சார்...
எப்படி இருக்க?
நான் இப்போ சென்னை வந்துருக்கேன்.........(கொசுவர்த்தி சுத்தப்பட்டது).
கொயம்பெட்டுல இருக்கியா....நான் அந்த பக்கமாதான் ஒரு வேலையா வந்தேன்.....ஒரு 15 நிமிஷம் வெயிட் பண்ணு வந்துர்றேன். (:-) (:-).......நான் டிராப் பண்றேன்.(:-) (:-)(:-) (:-)(:-) (:-)

நாந்தான் சொன்னேன்ல நமக்கு நட்பு வட்டம் பெருசுன்னு.

ஆட்டோ டிரைவரிடம் தற்போதய நிலையில் பாகப்பிரிவினை சாத்தியப்படாது என்பதை தெரிவித்து விட்டு, மாமணிக்கு போனப்போட்டேன். வழி கேக்கணுமே.

சொன்னான், 18th அவென்யு ல வந்திங்கன்னா ஸ்டேஷன் ரோடு சைடுல அபார்ட்மெண்ட் கம்பவுண்டு  இருக்கும் அதான்.
இன்னும் கிளியரா சொல்லுடா....
3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.

ஒஹ் ஓக்கே அப்ப சரி.

காத்திருந்தேன். வந்தார். நல விசாரிப்புகளின் பின், மூட்டைகளை எடுத்து வண்டியில் வைத்து விட்டு ஏறி கிளம்பினோம். மணி 8ஐ நெருங்கியிருந்தது.

ஃபிளை ஓவர் இல்லா காலத்து டிராபிக்கில் பயணம். திருமங்கலம் சிக்னல் கிட்ட வரும்போது ஃபோன் சிக்னலும் பாட்டரியும் பத்தாது என்றது. ஓக்கே பத்து நிமிஷம்தான....போய் பாத்துக்கலாம்.

பதினெட்டாம் அவென்யு திரும்பி ஸ்டேஷன் சைடு ரோட பார்த்துகிட்டே வந்தோம்..........3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்



தொடர்புடைய இடுகைகள் :

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2

தேடலும் பயணமும் கவிதையும்

Saturday, 6 February 2016

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2


வருது ஆவாஸ் அன்ஜிங்......

கர்நாடகா பேருந்துகள் நிறுத்தக் கட்டையில் ஒரு ஓரமா நின்னு மூட்டை முடிச்சுகளை தனியொருவனாக சற்று தள்ளி எடுத்து வைத்து விட்டு இரண்டு நிமிடம் சுற்றி முற்றி பாவமாக பார்த்து விட்டு நிமிர்தேன்.

சிறிய கலக்கம் வந்தது.....இது சற்றே "ஓடும் ரயில் வண்டியில் ஒரு பிடிமானமும் இல்லாமல் வேட்டி கட்டியவன் ஒன்னுக்கு இருக்கும் பிராண  சங்கட நிலை" அல்லவா.

ஒத்தை ஆள் 21 லக்கேஜ்.....கோயம்பேடு கர்நாடகா பஸ் கட்டை.....இப்போ ஒரு டீ குடிக்கனும்னா இல்ல ஒரு அவசரம்னா என்ன செய்ய. ஒரே தீர்வு சீக்கிரமே அறை போய் சேர்வது.

எவ்வளவோ பண்ணிருக்கோம் இத பண்ண மாட்டோமா.....வருவான்டா கார்ல வாராது வந்த மாமணி.

ரோமிங்ல இருந்த (கர்நாடகா நம்பர்) ஃபோன எடுத்து,

ஒரு கால், ரெண்டு கால், மூணு கால்,...............எடுத்தார் மாமணி எட்டாவது காலில். இருந்தார் தூக்கக் கலக்கத்தில். {அடேய் பாவி நாந்தானாடா இன்றைக்கு அலாரம் சர்வீஸ் ஒனக்கு}

ஹ்ம்ம் O K. பாவம் ட்ராவலிங் டயர்டா இருக்கும் இல்ல.

ஹலோ.....
ஹய் ஹாய்....சொல்லுங்க சார்...???!!!! என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க.....???!!!!
ஹாய் நான் இங்க வந்திருக்கேன்.....
ஹைய் ய் ய் யோ....சோ நைஸ். எங்க தங்கிருக்கீங்க? இன்னைக்கு ஈவினிங் மீட் பண்லாமா........????

டேய்....நான் இங்க கோயம்பேடுல உனக்காக வெயிட் பண்ணிட்ருக்கேன் செல்லம்.
ஒஹ் ஹோ.....நான் இப்போ பாண்டிச்சேரி ல இருக்கேன்.....???!!!!! நேத்து ஒரு அர்ஜன்ட் மீட் இங்க அதான் வண்டி எடுத்துட்டு வந்தேன். இன்னைக்கி காலைல 11  மணிக்குதான் மீட் முடியும் இங்க.

ஓ கே......
கொஞ்சம் சொல்லிருக்கலாமே.......

நாந்தாம் சொன்னேனே சார்....???!! மீட்டுக்கு போக வேண்டிருக்கும்னு.....TN,KL, பாண்டி மூனும் (என்னது...நிலாவா...) என்னோட ரீஜன் ல வர்றதால ஆல்டர்னட் மன்த் இடம் சேஞ் பண்ணுவோம். {நாதான் சொன்னனே ஆவாஸ் அன்ஜிங்,,,ஆவாஸ் அன்ஜிங்,,,,ஆவாஸ் அன்ஜிங்,,,,,அப்படின்னு}

ஓ கே...... {ஏன்டா உனக்குத்தான் தமிழ் நல்லா தெரியுமே.......நான் இருக்குறது சந்தேகம்னு சொல்லலாமே அப்பவே அத}

அப்போ நீங்க ஒன்னு பண்ணுங்க அப்படியே என்ட்ரன்ஸ் வந்திங்கன்னா ஆட்டோ இருக்கும் பிடிச்சு ரூமுக்கு வந்துடுங்க.......{பரவாயில்ல இதயாவது ஞாபகம் வச்சிருக்கானே}.

ஓக் கே......

( லைட்டா முனகி)  லக்கேஜ் இருக்குடா.

அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல...???!!! அங்க ட்ராலி இருக்கும் அதுல போட்டு வெளில கொண்டு வந்துடுங்க???!!!

ஓக்கே......சரி வச்சிட்டு கூப்புடுறேன்.

ஹ்ம்ம்.......

அடடா வழி கேக்க விட்டுட்டனே. சரி வண்டில வச்சிட்டு கேட்டுக்கலாம்.

அதுக்குள்ள மீட்டிங் உள்ள போயிட்டான்னா....????

அஞ்சு நிமிஷம்தான பாத்துக்கலாம்...... மணி இப்போ 7.15 தான.

தொடர்புடைய இடுகைகள் :
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

தேடலும் பயணமும் கவிதையும்

Friday, 5 February 2016

Thursday, 4 February 2016

காப்புரிமை சந்தேகங்கள்......திருகாணி வெளிப்பான் | Patent....... Screw Feeder

முதலில் இது நல்லா இருக்கா... திருகாணி வெளிப்பான் - Screw feeder.

இதுக்கு காப்புரிமை (பேடன்ட்) வாங்க என்ன செய்யனும்?

திருகாணி வெளிப்பான் உத்தேச மாதிரிகள்.

Screw Feeder Concept 1
திருகாணி வெளிப்பான் உத்தேச மாதிரி 1
Screw Feeder Concept 1

Screw Feeder Concept 2
திருகாணி வெளிப்பான் உத்தேச மாதிரி 2
Screw Feeder Concept 2

Screw Feeder Concept 3
திருகாணி வெளிப்பான் உத்தேச மாதிரி 3
Screw Feeder Concept 3


பயன் பாடு
Application 

iK way
என்ன என்ன பிரச்சினைகள் உள்ளன'? என்ன முன்னெச்சரிக்கைகள் சிறந்தது? இந்தியாவில் பெற்ற காப்புரிமை உலக அளவில் வலுவானதா? அல்லது வேறு நாடுகளில் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா? எந்த நாடு எளிய மற்றும் சிறந்த முறை காப்புரிமை விண்ணப்ப / வழங்கல் / பாதுகாப்பு வகைகளில் சிறந்தது?

எவ்வளவு செலவு ஆகும்?



தங்களின் ஆலோசனைகள் அறிவுரைகளுக்கு முன்-நன்றிகள்.

தொடர்புடைய இடுகைகைகள் :
Automation? or Jugaad? or Innovation? or Ingenuity?!! - அடுப்பூதும் ஃபேன்!

பகிர்தலைப்பகிர்தல் - Sharing the sharing

Wednesday, 3 February 2016

இது எங்க இருக்குன்னு கண்டுபிடியுங்க.....(VP1998)

VP 98






இது எந்த இடம் எங்க இருக்கு.........

மூங்கிலோ மூங்கில்.

ஜல்லிக்கட்டு : தடை ஏன்?

ஜல்லிக்கட்டு என்ற பெயர் வடமொழி எழுத்து கொண்டு தொடங்குவதால் இது தமிழர் விளையாட்டு அல்ல என்று அறிய வருகிறது. இதனை அப்படியே தமிழ்ப்படுத்தினால் சல்லிக்கட்டு என்று வருகிறது. தமிழன் அத்துனை சல்லித்தனமானவனா என்ன????

அதன் மொழியாக்கப் பெயர்களான ஏறு தழுவுதல் காளை பிடித்தல் போன்றன வடவர் சூழ்ச்சி என்றே அறிக. அந்த விளையாட்டினை நன்றாக பார்த்தால் அவ்வளவு பெரிய மாட்டினை எப்படி தழுவ முடியும் என்ற அடிப்படை கூட இல்லையே....இந்த அழகில் அதன் மேலேறி நிற்க வேறு வேண்டுமாம்.....கேழ்வரகில் நெய் வடிகிறதே என்றால் கேட்பார் மதி இன்றியா போய் விடும்???!!!

இதன் பதிலீடாக அம்மானை அல்லது பல்லாங்குழி முதலான தமிழர் விளையாட்டுகளை பழக வேண்டும்.

அம்மானை விளையாட்டானது தமிழின் முதலான அகரம் கொண்டு தொடங்குதல் சிறப்பு. அம்மா அணை என அன்பும் அம் மானை என காளையர்க்கு காதலும் உணர்த்துவதை காணலாம். - அம்மா ஆனை என பிழை புரிதல் கெடுதலாம் அறிக. மேலும் ஏறு தழுவி மாட்டுடன் போட்டியிடல் தகுதிக்குறைவாம் காண்க. ஆனையுடன் பொருதல் அன்றோ சிறப்பு?


பல்லாங்குழி ஏன் சிறப்பு..... அம்மானை விளையாட யானை எங்கு கிட்டும்.....😂😂
பல குழி வெட்டி அல்லவா யானை பிடிக்க வேண்டும்.....????!!!!! அதற்குத்தான்.
மேலும் இதனை ஒருசில பத்தாண்டுகள் பழகிய பின் தமிழரின் (அடுத்தவருக்கு) குழி வெட்டு திறன் மிகும். இதன்றோ இன்றய நாகரீக சமுதாய தேவை....

இந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....

இந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்