தாங்கள் யாரென்று காட்ட முடிவெடுத்தனர் அந்த நால்வரும். அதற்கும் மேல் அடுத்த அஸ்த்திரமும் தயாராகிகொண்டிருந்தது!.
மனத்தாங்கல், அமைதியான எதிரலைகளை காண்பித்துக்கொண்டிருந்தது. மேலிருந்தும் எந்த விதமான ஆதரவும் இல்லை - நிறுத்தப்பட்டது - நிறுத்திக் காண்பிக்கப்பட்டது! இரண்டு மாதங்கள் பார்த்த ரஸ்சி, இந்த நிலைமையினை மாற்ற வேண்டி ஜனவரி 1992ல் தன்னுடைய அதிகாரிகளின் பணி உயர்வு உத்தரவினை திரும்ப பெற்று, நடந்த தவறுக்கு தானே முழு பொறுப்பும் ஏற்று அறிவித்தார். பழைய சகஜ நிலை திரும்பிவிடும் என்று கருதினார். காலத்தின் அட்டவணை வேறு மாதிரியல்லவா இருந்தது.
டாட்டா க்களுக்கும் ரஸ்சிக்குமான உறவில் விரிசல் விழுந்தது விழுந்தது தான். இன்னும் பெரிதாகிக்கொண்டிருந்தது. டாட்டாக்கள் இதற்குள் ரஸ்சிக்கு வாயில் கதவினை காட்ட முடிவெடுத்திருந்தனர்.
நிறுவனத்தின் விதிமுறைப் புத்தகம் படிக்கப்பட்டது - படித்துக்காண்பிக்கப்பட்டது.
ஆம் 75ஆம் அகவை முடியும் போது கட்டாயப்பணி மூப்பு என்பதாக விதிமுறைப் புத்தகம் படித்தது.
அதன் நினைவுறுத்தல் சுற்றறிக்கை, பின்பற்றும் படி 'அறிவுறுத்தல் வேண்டுகோளுடன்' அனைத்து டாட்டா குழும நிருவங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது, திரு.ரத்தன் டாட்டா அவர்களால்!
கணக்கு மிகவும் எளிதானதுதான், ஆனால் மிகவும் கச்சிதமானது. ஜனவரி 17, 1918 ல் பிறந்த ரஸ்சி + 75 ஆண்டுகள் = ஜனவரி 17, 1993.
ரஸ்சியின் எதிர்வினை......
(தொடரும்....)
தொடர்புடைய இடுகைகள் :