Tuesday, 25 December 2012

தனித்து விடப்பட்டது இந்த விசி அல்ல

 
Traces
தடங்கள்

வந்தமர்ந்தவர்களும், எழுந்து சென்றவர்களும் மட்டுமே இல்லை என்று காட்டும் எதிரிலிருக்கும் தடங்களின் அகல நீளங்கள்.

எல்லோரும் சென்ற பின்னும் தனித்து விடப்பட்டதென்னவோ இந்த விசி  அல்ல.

Friday, 21 December 2012

இக்கரைப் பச்சை


எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சையாக இருப்பதில்லை
இக்கரைப் பச்சை

எல்லா நேரத்திலும் இக்கரைக்கு அக்கரை பச்சையாக இருப்பதில்லை

Monday, 19 November 2012

அது சரி / தலை சாய்க்காமல் பார்க்கவும்



அது சரி, பல கோணல்களுக்கும், வளைவுகளுக்கும் காரணங்கள் புரிபடுவதில்லை, எவ்வளவுதான் தலை சாய்த்துப்பார்த்தாலும்.

Sunday, 11 November 2012

சட்டகத்தின் இடுக்குகள் கடக்கும் எல்லையற்ற பெருவெளி

உள்ளேயா?, வெளியேயா?


உள்ளேயா?, வெளியேயா?

எல்லையில்லா பெருவெளி கேட்கும் குரல்கள் எல்லாம் ஏனோ
சட்டகத்தின் அளவை சற்று பெரிது படுத்தித்தா என்றே கேட்பதாய் தோன்றுகிறது
எல்லா தடுப்புகளுக்கு  இடையிலேயும் தெரிவதென்னவோ எல்லையற்ற பெருவெளிதான்.

Saturday, 27 October 2012

வெந்துதணிய காடில்லை பாலையில்


கூடாரத்து ஒட்டகங்கள் எழுந்து
பாலையுள் நடந்து செல்கின்றன
மொட்டைமாடி கொடியில் துணிகள்
இரவின் பனியில் காய்கின்றன
அடுத்துள்ள அறையின் மின்விசிறி
இடைவெளி விட்ட இலயத்துடன் கரடு முரடான ஒலியெழுப்புகிறது
தரையில் கிடக்கும் பிய்த்துப்போட்ட ஜரிகைத்துண்டு
ஏனென்று தெரியாமல் துணுக்குறவைக்கிறது


வெந்து தணிய காடில்லை பாலையில்
இடையே மெதுவாய் பூனை போல் வந்தமர்கிறது மனதில் இதை எழுதும் எண்ணம்
பாலையிலும் உண்டு பூனைகளுக்கு வேலை.

Monday, 22 October 2012

கிலுகிலுப்பை கவிதை



குழந்தை கையில் அகப்பட்ட கிலுகிலுப்பை  
எப்படி ஆட்டினாலும் எழுப்பும் சத்தம் போல,
என்ன எழுதினாலும் கவிதையாக பரிணமித்துவிடுகிறத

பிடிபட்டுவிடுவதில்லைதான் எல்லா பிரபஞ்ச ரகசியங்களும்
ஒரே வாழ் நாட்களிற்குள்

Tuesday, 2 October 2012

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 6

தாங்கள் யாரென்று காட்ட முடிவெடுத்தனர் அந்த நால்வரும். அதற்கும் மேல் அடுத்த அஸ்த்திரமும் தயாராகிகொண்டிருந்தது!.

மனத்தாங்கல், அமைதியான எதிரலைகளை காண்பித்துக்கொண்டிருந்தது. மேலிருந்தும் எந்த விதமான ஆதரவும் இல்லை - நிறுத்தப்பட்டது - நிறுத்திக் காண்பிக்கப்பட்டது!  இரண்டு மாதங்கள் பார்த்த ரஸ்சி, இந்த நிலைமையினை மாற்ற வேண்டி ஜனவரி 1992ல் தன்னுடைய அதிகாரிகளின் பணி உயர்வு உத்தரவினை திரும்ப பெற்று, நடந்த தவறுக்கு தானே முழு பொறுப்பும் ஏற்று அறிவித்தார். பழைய சகஜ நிலை திரும்பிவிடும் என்று கருதினார். காலத்தின் அட்டவணை வேறு மாதிரியல்லவா இருந்தது.

டாட்டா க்களுக்கும் ரஸ்சிக்குமான உறவில் விரிசல் விழுந்தது விழுந்தது தான். இன்னும் பெரிதாகிக்கொண்டிருந்தது. டாட்டாக்கள் இதற்குள் ரஸ்சிக்கு வாயில் கதவினை காட்ட முடிவெடுத்திருந்தனர்.

நிறுவனத்தின் விதிமுறைப் புத்தகம் படிக்கப்பட்டது - படித்துக்காண்பிக்கப்பட்டது.
ஆம் 75ஆம் அகவை முடியும் போது கட்டாயப்பணி மூப்பு என்பதாக விதிமுறைப் புத்தகம் படித்தது.

அதன் நினைவுறுத்தல் சுற்றறிக்கை, பின்பற்றும் படி 'அறிவுறுத்தல் வேண்டுகோளுடன்' அனைத்து டாட்டா குழும நிருவங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது, திரு.ரத்தன் டாட்டா அவர்களால்!

கணக்கு மிகவும் எளிதானதுதான், ஆனால் மிகவும் கச்சிதமானது. ஜனவரி 17, 1918 ல் பிறந்த ரஸ்சி + 75 ஆண்டுகள் = ஜனவரி 17, 1993.

ரஸ்சியின் எதிர்வினை......

(தொடரும்....)


தொடர்புடைய இடுகைகள் :


Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 1

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 2

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 3 

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 4

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 5

Monday, 24 September 2012

காலநிறம்

Colours of time
காலநிறம்


ஏதும் எழுதாமல் வெறுமே!? ஓர் ஒளிப்படமோ (அ) புகைப்படமோ போட்டுவிட்டுப் போகலாமென்றால் விடுகிறதா மனம்?
எனவே:

இக்காட்சி காட்டுவதென்ன?
நிறம் கொண்ட காலமா?
காலம் கொண்ட நிறமா?

காலத்தின் நிறமா?
நிறத்தின் காலமா?
நிறம் மாறும் காலமா?
காலம் மாறும் நிறமா?
நிறம் மாற்றும் காலமா?
காலம் மாற்றும் நிறமா?

நிறம் கொண்ட காலம்,
நிறக்காலம்.
காலம் கொண்ட நிறம்
காலநிறம்.

Saturday, 1 September 2012

ஒளிவலை

ஒளிவலை

ஒளிவலை
தலைகீழாய் பிடித்த குடை ஒளி பிடிக்கும் வலை ஆனது.



வண்ணங்களும் பிம்பங்களும் அதன் பிரதிபலிப்புகளும்.
இவற்றின் வெளியே தெரியும் நிறம் நிச்சயப்படுத்தப்படுவது எதனால்?


தொடர்புடைய இடுகைகள் : 
kgjawarlal.wordpress.com/2009/08/12/ஜெயகாந்தனும் பரமாச்சாரியாரும் 

Tuesday, 28 August 2012

பயணத்தின் நோக்கம்


Objective Travel
பயணத்தின் நோக்கம்
அழகான காக்கை
எதைத்தேடி போகுதிப்போது
ஒருவேளை சென்று தேடி கண்டடைந்தபின் நம்மிடம் சொல்லுமோ
பயணத்தின் நோக்கம்
பயணம் மட்டுமேவாக இருக்கவும் முடியும் போல தோணுது

Monday, 27 August 2012

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 5

ரஸ்ஸி அவர்கள் சேர்ந்த 1939 ம் வருடத்திலிருந்த இளம் டிஸ்கோ அப்போது 90 களின் முற்பகுதியில் நன்று வளர்ந்து கிளை பரப்பிய ஒரு நிறுவனமாக ஆகியிருந்தது.

நிறுவனத்துடன் இணைந்து 50 ஆன்டுகள் ஆகியிருந்தது ரஸ்ஸிக்கு.

அப்போது டாட்டா குழுமத்தில் இணைந்து சற்றேறக்குறைய 15 ஆண்டுகள் ஆகியிருந்த ரத்தன் டாட்டா அவர்களின் விஸ்வரூபம் வெளிப்பட தருணம் அமைத்து கொடுத்த நிகழ்வுகள், முந்தைய பகுதியில் பார்த்த காலம், தான்  எழுதிய அட்டவணைக்கு ஏற்ப நடக்கிறதா என சரி பார்க்க ஆவலுடன் நோக்கிக்கொன்டிருந்தது.

பல பின் கதைகள், உபகதைகள், உள்வர்த்தமானங்கள், காரணிகள் சேர்ந்து உருவாக்கிய விளைவுகள் வெளிப்பட்ட தருணம்.

ரஸ்ஸி அவர்கள் டாட்டா குழுமத்தில் இணைந்த பொழுதுகளில் பிறந்தே இருக்காத, R.N. டாட்டா -  ரத்தன் நவல் டாட்டா என்ற முழுப்பெயர் கொன்ட ரத்தன் டாட்டா திரு. ஜே.ஆர்.டி அவர்களால் அடுத்த செயல் தலைவராக அறிவிக்க பெற்றார்.

ரத்தனின் வரவு ஒன்றும் ரஸ்ஸியால் அவ்வளவாக ரஸ்ஸிக்கப்படவில்லை!

எனெனில் அதுவரை காலமும் டாட்டா குழுமத்தில் இருந்த சேர்மன் மற்றும் செயல் மேலான் இயக்குனர் தலைவர் நிலை அதிகாரிகள் ஒரு பணியாளராக இல்லாமல் உடமையாளர்களாகவே திரு. ஜே.ஆர்.டி அவர்களால் நடத்தப்பட்டனர், தம்மை உணர்ந்தனர் அதேபோல் நடந்தும் கொன்டனர் - ‍எல்லாவகையிலும். இந்த எல்லா வகையிலும் என்பதில்தான் எத்தனை பரிமாணங்கள்?

அந்த நவம்பர் 1991 ல், ரஸ்ஸி ஒரு சுற்றறிக்கை மூலம், தன் கீழ் செயல் இயக்குனர்களாக பணியாற்றிய ஆதித்ய காஷ்யப் மற்றும் இஷாத் ஹுசைன் இருவருக்கும் முறையே இணை மேலான் இயக்குனர் மற்றும் துணை மேலான் இயக்குனர் என்று பதவி உயர்வு அறிவித்தார். இருந்த 6 செயல் இயக்குனர்களில் இவர்கள் இருவரும் மற்றவர்களை விட வயது, அனுபவத்தில் இளையவர்கள்.

பின்னிருத்தப்பட்ட மற்ற நால்வரின் கன்டணக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது, சற்று பலமாகவே. அதன் எதிரொலிப்பும் பல நிலைகளில் ஒத்திசைவை உருவாக்கி ஆட்டம் காண்பித்தது.

(தொடரும்....)

தொடர்புடைய இடுகைகள் :

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 1

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 2

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 3 

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 4

Tuesday, 21 August 2012

நேர் கோணல்

Straight Wry
நேர்-கோணல்
நேர் எங்கிருக்கிறது?
கண்ணிலா?
காட்சியிலா?
காணும் பொருளிலா?...
இவை எல்லாவற்றையும் நேர் ஆக்கிரமித்து விட்டிருக்கிறது போலவே?

எனில் கோணல் மட்டும் எங்கு வாழ்கிறதாம்?
கண்டு உணரமுடியாப்பொருளிலா?

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நேர்கள் தங்களின் சுவாரஸ்யத்தை கூட்ட பெருங்கருணையோடு விட்டுவைத்த அபூர்வங்களில் வாழ்கிறது கோணல்...


ஆதலினால்
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கோணல்கள் தங்களின் சுவாரஸ்யத்தை கூட்ட பெருங்கருணையோடு விட்டுவைத்த அபூர்வங்களில் வாழ்கிறது நேர்...

Framed


Framed

Naturally Framed.

Monday, 20 August 2012

பகிர்தலைப்பகிர்தல் - Sharing the sharing


Sharing
பகிர்தல்!



இந்திய கண்டுபிடிப்பு
ஷேரிங்ங்ங்..... 

உங்க அம்மா சொல்லித்தர்ல?:-)

தொடர்புடைய இடுகைகள் :
அடுப்பூதும் ஃபேன்! 

இலையிடை காய்த்த கதிர்

இலையிடை காய்த்த கதிர்

மூங்கில் இலைமேலே 
தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே

வாங்கும் கதிரோனை 
இடைமறிக்கும் கிளைகளே
இடைமறிக்கும் கிளைகளாய்
இதைக்கண்ட கண்களே

இதைக்கண்ட கண்களுள்
கண் கண்ட காட்சியே




தொடர்புடைய இடுகைகள் :


கண்டசுத்தி -#4 - அம்பிகாபதி

இலக்கியம் 

காட்சிபிழை திரை: காதலும் துரோகமும் விதியும் கண்ணதாசனும் 

கூடு விட்டு கூடு : - சுஜாதா தேசிகன் : ஒரு சொட்டு வைரம்

டோண்டு : படப்பிடிப்பில் டோண்டு ராகவன் அனுபவங்கள் - Tourism shoot 

Sunday, 19 August 2012

பாலம்


நகரும் நகரம், Bridge
நகரும் நகரம்
முடிவின்றி செல்லும் கோட்டின் மறுமுனை தேடும் மனித கண்களும்
முயன்று பார்த்து 'மூணு பத்து ரூபாய்' க்கு விற்று உணவு தேடும் நடைபாதை கடை முதலாளிகளும் கொண்டு

நகரும் நகரின்
சாலை கடக்கும் பாலம்

இது ஒரு தத்துவார்த்த சொல்லாகவே மனதரிகிறது....
அத்தனை பெரிய கடவுளையே சம்சார சாகரம் கடக்கும் பாலமென்றழைக்கும் நமக்கு
பாலத்தை பள்ளம் கடக்கும் கடவுளென்றழைப்பதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்

Wednesday, 15 August 2012

ஆழம்



ஆழமா? உயரமா?


எதன் ஆழம் காட்டுதிந்த அளவை
தண்ணீரின் அடி ஆழமா?
மேலிருக்கும் வெளி ஆழமா?
காண்பவர் கண் ஆழமா?

கரையில் நின்றபடி வியந்திருந்த என்னிடம்

இவை ஏதுமில்லை,
உன் உள்மன பயத்தின் உயரம் காட்டுதென்றே
சொல்லிச்சென்றான் ஒரு பரிசல்காரன்

Sunday, 12 August 2012

நான் நான் நான்...



வலைக்குள்


நான்..
நானறிவதே கடவுள்
நான் கடவுள்
நானும்தான் கடவுள்
நானழிந்தால் கடவுள்
நானில்லையேல் கடவுள்
ஆமாம் என்னதான் வேண்டுமிவர்களுக்கு
மாட்டிகொண்டிவர்களிடம்
படாதபாடு படுகிறேன் நான்

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 4

அப்ரண்டிஸாக சேர்ந்த ரஸ்சி விரைவிலேயே சக ஊழியர்களின் நன்மதிப்பை பெற்றார். இதில் அனைவரையும் கவர்ந்த விஷயம் அவரது அணுகுமுறை. ரஸ்சி அவர்களது மனிதர்களுடன் நேரிடையாக அணுகும் முறையானது அனைத்து நிலையிலும் உள்ள ஊழியர்களாலும் வரவேற்கப்பட்டது. அதே நேரத்தில் எந்த ஒரு கலவரமான சூழலிலும் துணிச்சலுடனும், நம்பிக்கையுடனும் அந்த மக்களிடையே சென்று பேசுவதில், சமாதானத்திற்கு பேச்சுவார்த்தை நடத்துவதில் அவருக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை.

நாம் சிறிது யோசித்து பார்த்தால், அன்றைய நிலையில் ஜம்ஷெட்பூர் என்பது ஒரு நேரிடையான, பூச்சுகளில்லாத மக்களை, பாமரர்களை கொண்டது. எவ்வளவு நல்லவர்களோ அதே அளவு கோபமும் கொள்ளக் கூடியவர்கள். படிப்பறிவற்றவர்கள் அல்லது கொஞ்சம் படித்தவர்கள். அவர்களிடம் சென்று பேசுவதை ரஸ்சி தன் நிலைக்கு கௌரவக்குறைவானதாக என்றும் கருதியதில்லை.

இதே நேரத்தில், ரஸ்சி மிகவும் மேம்பட்ட ரசனைகளும், நல்ல உணவின் ரசிப்பும், வாழ்வின் மென்னுனர்வுகளின் பால் லயிப்பும் கொண்டவராக அறியப்பட்டிருந்தார். சமூகத்தில் மேல்மட்ட நிலை மனிதர்கள், அரச (ஆளும்) குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்களுடன் பழகும் அதே ரஸ்சியால் அதே வேளையில் சாதாரனர்களிடமும் எளிதாக சென்றடையக்கூடிய ஒருவராக இருக்க முடிந்தது. தொழிற்சாலைக்குள் பதினைந்து முட்டைகளினால் ஆனா ஆம்லேட் சாப்பிடக்கூடியவராகவும் அறியப்பட்டிருந்தார்!!!.

ஏனைய டாட்டா குழும நிறுவங்களுக்கு முன்னோடியான பல திட்டங்களை வடிவமைப்பதிலும், செயல்முறை படுத்துவதிலும் டிஸ்கோ சிறந்த பங்கு பணி ஆற்றியது. மேலும் டிஸ்கோ வின் நிறுவனத்தை சார்ந்துள்ள மற்றும் சுற்றியுள்ள சமுகத்தின் நலன் பேணும், முன்னேற்றும் பல செயல்கள், முன்னெடுப்புகள் நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பீடுகளை அறிவதற்கும், நல்லபிப்ராயங்களை வளர்ப்பதிலும் உதவியது. இந்த முயற்சிகள் பலவற்றின் திட்டமிடல், செயல்பாடுகளின் பின்னிருந்த ரஸ்சிக்கும் நல்ல பெயர்.

இவை அனைத்தும் சேர்ந்து, ரஸ்சியினை  டிஸ்கோ நிறுவன பணி நிலை முன்னேற்றபாதையில் விரைந்து பயணிக்க வைத்து சேர்மன் மற்றும் செயல் தலைவர் பொறுப்பிற்கு உயர்த்தியது. அடுத்த பத்தாண்டுகளுக்கான டிஸ்கோ வின் முன்னேற்றத்தில் மற்றுமொரு படி.

அதனோடு கூட காலம் தன்பாட்டுக்கு அது ஒரு கணக்கினை போட்டு சுற்றி சுழண்டடிக்கப்போகும் ஒரு சூறாவளியுடன் கூடிய நிகழ்வுக்கு அட்டவணை எழுதிவிட்டு வேடிக்கை பார்க்க காத்துக்கொண்டிருந்தது!

(தொடரும்....)


தொடர்புடைய இடுகைகள் :

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 1

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 2

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 3

Saturday, 4 August 2012

"Roundaana"? - ரவுண்டானா....!!!?? - 1



"Roundaanaa" - ரவுண்டானா....!!!??


ரவுண்டானா....!!!??
இது எந்த மொழிச்சொல்லாக இருக்கக்கூடும்?
சாலை நடுவில் நிற்கும் கணித வடிவம்,
இதில் தான் எத்தனை வகை….

காரை இட்டது
கார் இடித்து பேர்ந்தது
கட்சி கொடி தோரணம் கட்டியது
பச்சை போர்த்தது
கம்பி வேலி இட்டது
எருமை உராய்வது
நாய் உறைவது
ஆடு தாண்டுவது
நீரூற்று கொண்டது
நின்ற நெடுமரம் கொண்டது
அமர்ந்தருளும் கடவுள் கொண்டது
கூவி அழைக்கும் விளம்பர தட்டி கொண்டது
குற்றேவல் புரிவோர் குடியிருக்கும் குடிசை கொண்டது
காவலர் குடை மட்டும் கொண்டது
தமிழில் இதன் பெயரறிவது இப்போது மிகவும் அவசியமாகிறது
அறிந்தவர் யாரேனும் இதைக் கடந்து செல்லும்வேளை 
ஒருகணம் செலவிட்டு சொல்லிவிட்டு போங்களேன்

ஏனென்றால்
எந்த வடிவிலிருந்தாலும் இதன் பெயர் ரவுண்டானா என்பதாக மட்டுமே
இதுவரை வழங்கப்பட்டு வருகிறதென்பது
ஏதாவதொரு  சாமியார் அல்லது மேலாண்மை குருவின் கண்ணில் பட்டு
தத்துவக்கருப்பொருள் ஆகக்கூடிய சாத்தியங்கள் கொண்டது

அந்த நேரம் இதற்கோர் தமிழ்ப் பெயரின்றிப் போனால்
நான்தான் என்ன செய்வது கவிதை எழுத?

Automation? or Jugaad? or Innovation? or Ingenuity?!! - அடுப்பூதும் ஃபேன்!




Automation? or Jugaad? or Innovation? or Ingenuity?!! - அடுப்பூதும் ஃபேன்!
Automation? or Jugaad? or Innovation? or Ingenuity?!! - அடுப்பூதும் ஃபேன்!


அடுப்பூதும் பெண் அந்தக்காலம், அடுப்பூதும்  ஃபேன் இப்போது!

Wednesday, 1 August 2012

Boat Rest! (ஓய்வெடுக்கும் ஓடம்!)

Boat Rest!

ஓய்வெடுக்கும் ஓடம்!

தண்ணீரில் மிதக்கும் ஓடம் தரையில் ஓய்வெடுக்கிறது,
இந்த ஆற்றின் கரைவழிப்படியிறங்கி தண்ணீர் தொட்டு பயணம் போக காத்திருக்கிறது.
யார் கண்டது ஓடம் என்பதால் தரையில் ஓடிப்  பார்த்து தன் பெயர்க்காரணம் கண்டுபிடிக்கக்கூட முயற்சிக்கலாம்.

Sunday, 29 July 2012

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 3

அலுவலக உதவியாளர்? ஆம். வியப்படைய வேண்டாம், இப்போதும் சில பல பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள நடைமுறைதான், ஆனால் வேறு பெயரில் - எக்ஸ்சிகியுடிவ் அசிஸ்டன்ட் என்பதாக - முதன்மை செயல் அதிகாரிகளின் அலுவலகத்தில் பணியாற்றி நிறுவன நடைமுறைகளை அறிவதற்கு ஏற்ற வகையில் உள்ள பதவியாகும்.

அவரது தந்தையின் எண்ணமும் என்னவென்றால், இளம் ரஸ்சியை ஜே. ஆர். டி என்ற மாமனிதரின் மோதிரகைக்கு அருகினில் கொண்டு செல்வது.

அவரது காலத்திய இந்திய அளவில் வீச்சுடனும் சக்தியுடனும் முடிவுகளை எடுக்க வல்ல மனிதர்களில்  ஜே. ஆர். டியும் ஒருவர்.

தொழிற்சாலைகளும், கார்ப்போரேட் நிறுவங்களும் சார்ந்து ரஸ்சி யின் ஆதர்சங்கள் என்றால் முதலாவதாக ஜே. ஆர். டியும் அடுத்து ஹென்றி போர்டும் ஆவர். இவர்களின் நிறுவங்கள் இலாபம் ஈட்டுவனவாக இருந்த காரணத்தினால் அல்லாமல் அவர்களிருவரின் தொலை நோக்கு மற்றும் உயர் எண்ணங்கள் காரணமாக ஏற்பட்ட ஒரு உணர்வு என்று பின்னாளில் ரஸ்சி குறிப்பிட்டார்.

ஜே. ஆர். டி அவர்கள் மேல் வைத்திருந்த மதிப்பினை ரஸ்சி அவரது வார்த்தைகளில் சொல்வதென்றால் "அவர் நடந்து சென்ற நிலத்தையும் வணங்கினேன்".

என்ன ஒன்று உள்ளே நுழைவதுதான் சற்று எளிதானதாக இருப்பதாக நம்மை எண்ண வைக்கிறதே தவிர, பாதை ஒன்றும் பட்டு ரோஜா நிரப்பப்பட்டு காத்திருக்கவில்லை.

இன்றைய டாட்டா ஸ்டீலானது, அப்போதுதான் டிஸ்கோ என்பதாக ஒரு இளம் நிறுவனம். 1939 ல் ரஸ்சி சேர்ந்த போது ஆரம்பித்து 25-30 ஆண்டுகளாகியிருந்த போதும் ஒரு உருக்கு ஆலை என்பதற்கு அது ஆரம்ப காலகட்டமே.

ஜம்ஷேட்பூர் டிஸ்கோ ஆலைக்கு, அப்ரண்டீஸ் ஆக  பணியாற்ற ரஸ்சி அனுப்பிவைக்கப்பட்டார்! அடுத்த 53  ஆண்டுகளுக்கான டிஸ்கோ மற்றும் ஜம்ஷெட்பூர் இரண்டுக்குமான வரலாறுகளும் இவற்றில் ரஸ்சி யின் பங்கும் ஆரம்பம்.

(தொடரும்...)

Sunday, 22 July 2012

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) -2

பம்பாயில் (மும்பை) ஒரு மேல்தட்டு பார்சி குடும்பத்தில் சர் ஹோமி மோடி மற்றும் லேடி ஜெர்பய் அவர்களின் மகனாக வெள்ளித்தட்டுடன்(!) 1918 ம்  ஆண்டு ஜனவரி 17 ம் நாள் பிறந்தார். எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியாவிட்டாலும், இங்கு ஒரு செய்தி, அவர் பிறந்தவுடன் ஒரு ஜோசியரால் ராஜவாழ்க்கை வாழுவான் என்று கணிக்கப்பட்டார். ரஸ்சி  என்று அவரது பெற்றோர்களால் அழைக்கப்பட, அது அவரது செல்ல பெயராக ஆனது. இங்கு அவரது தாய் ஜெர்பய் அவர்களின் பாரம்பரியமான மதிப்பீடுகளும் அதை அவரது மூன்று மகன்களுக்கும் அளித்ததும் இளம் ரஸ்சி யின் எண்ண உருவாக்கங்களில் ஒரு பகுதியானது. உள்ள உறுதி கொண்ட அந்த பெண்மணியின் வார்த்தைகள் வடிவமைத்த எண்ணங்களின் ஆழம் எப்படிபட்டது என்றால் ரஸ்சியால் தன்னுடைய 90வது வயதிலும் அவற்றின் ஒவ்வொரு வார்த்தையையும் நினைவு கூற முடிகிறது என்பதே!

அவரது தந்தை சர் ஹோமி ஒரு பண்பட்ட அதிர்ந்து பேசாத மனிதராகவும், உறுதியான பட்டவர்த்தனமான நேர்மையின்பால் உண்மையான நம்பிக்கை கொண்டவராகவும், அந்த  கொள்கை உறுதி கொண்டவராகவும் அறியப்படுகிறார்.

பள்ளிபருவ படிப்பு பற்றிய விவரணைகள் ஏதுமின்றி அவரது இங்கிலாந்து சென்று படித்த கல்விச்சாலைகள் மற்றும் பல்கலைகழகங்களான ஹார்ரோவ் மற்றும் ஆக்ஸ்போர்ட் (வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஜவஹர்லால் நேரு போன்றோர் படித்த பள்ளி மற்றும் கல்லூரிகள்) ஆகிய இரண்டின் தாக்கம் அவரிடம் ஒரு ஆங்கிலேய கனவானுக்குண்டான நல்ல குணாதிசயங்களையும் பெற வைத்தது.

 இங்கு கல்வி கற்கும் போது வரலாற்றுப்பாடத்தின் மூலம் அறிமுகமாகிய நெப்போலியன் போனபார்ட்  அவரது ஆதர்ச நாயகனானார்.

கல்லூரிப்படிப்பு முடித்து இந்தியா  திரும்பிய ரஸ்சியை, டாட்டா ஸ்டீல் (டிஸ்கோ) ல் அப்போதைய டைரக்டர் - இன் - சார்ஜ் ஆகா இருந்த சர் தலால் அவர்களிடம் அனுப்ப முடிவு செய்தார் அவரது தந்தை.

சர் தலால் அவர்களிடம் அனுப்பப்பட்ட ரஸ்சிக்கு, அலுவலக உதவியாளர் பணி  அளிக்கப்பட்டது!!!!!

(தொடரும்)


Sunday, 8 July 2012

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) -1

Rustomji Homusji Mody Popularly known as Russy Mody.


*This is some sort of a combined translated version of many heard and read articles.*

தமிழில் ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி, இந்த பெயர் இந்தியாவில் ஒரு அலையை உண்டாக்கிய பெயர் என்றால் மிகை இல்லை. டாட்டா குழுமத்திலும் சரி குறிப்பாக ஜாம்ஷெட்பூர் பகுதியிலும் சரி இவரது தாக்கம் டாட்டா ஸ்டீல் (டிஸ்கோ) வழியாக உணரப்பட்டது.

இந்த மனிதரின் வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் ஒரு ஆச்சர்யமே .


ஒரு தனியார் கம்பெனி நிர்வாகி எந்த அளவுக்கு ஒரு ஊர் மற்றும் தொகுதிக்குள் ஆளுமை செலுத்தமுடியும் என்பதற்க்காகட்டும் அல்லது இரண்டு நல்ல மனிதர்களின் கருத்து வேற்றுமை எப்படி இருக்கும் என்பதாகட்டும் அல்லது எந்த நிலையில் ஒரு மனிதனுக்கு தன்னை பற்றிய எண்ணங்களை நிகழ்வுகள் மறு பரிசீலனை செய்ய வைக்கும்  என்ற எண்ணத்தை தோன்ற வைப்பதாகட்டும் அல்லது  வாழ்வின் வட்டங்கள் காட்டும் வித்தைகள் ஆகட்டும் கேட்பவருக்கும் படிப்பவருக்கும் ஓர் ஆர்வத்தை உண்டாக்கும்.

ரஸ்சி, 1918 ல் ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தார்.

(தொடரும்)

2nd Post!!!

Reading the title of this post may kindle some thoughts in you!

In a way this could have also happened to be of my first post as I had the question in some corners in the left side of my brain "will I write a second post"?

The answer has come from the question itself!!!

While empty blogs are of altogether a different story.

It so happens and many a time I wondered why they are not continuing to write, when reading some of the blogs with only one initial (good) post.

Also there is one interesting observation I have is that most of the HR Managers/Heads of companies are tend to create a blog compared with other stream folks!! This was observed while surfing through profiles of people in LinkedIn from "People You May Know" tab. Btw I am not from HR!!!

Thoughts?

If you come across any of the famous "Single Post Blogs" let me know in the comments box?