கூடாரத்து ஒட்டகங்கள் எழுந்து
பாலையுள் நடந்து செல்கின்றன
மொட்டைமாடி கொடியில் துணிகள்
இரவின் பனியில் காய்கின்றன
அடுத்துள்ள அறையின் மின்விசிறி
இடைவெளி விட்ட இலயத்துடன் கரடு முரடான ஒலியெழுப்புகிறது
தரையில் கிடக்கும் பிய்த்துப்போட்ட ஜரிகைத்துண்டு
ஏனென்று தெரியாமல் துணுக்குறவைக்கிறது
வெந்து தணிய காடில்லை பாலையில்
இடையே மெதுவாய் பூனை போல் வந்தமர்கிறது மனதில் இதை எழுதும் எண்ணம்
பாலையிலும் உண்டு பூனைகளுக்கு வேலை.