Thoughts and Actions as they flash உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தி னுள்ளக் கெடும். உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.
Showing posts with label Photo. Show all posts
Showing posts with label Photo. Show all posts
Monday, 14 March 2016
Tuesday, 8 March 2016
(கத்தரிக்) கோல் கொண்டு முடியாளும் தஞ்சை சோழன்
இன்று வரும் வழியில் - அம்பத்தூர் வரதராஜபுரத்தில் - பார்த்தேன்.
ஒரு முடியாளுனர் கடை பெயர்ப் பலகை.
தஞ்சை சோழன் சலூன்! அருமை. என்ன ஒரு பெயர் பொருத்தம்!!.
(கத்தரிக்) கோல் கொண்டு (நம் தலை) முடியாளும் தஞ்சை சோழன்.
என்ன... எதற்கும் கொஞ்சம், பார்த்து பதவிசாக நடந்து கொள்ளவும்.
என்ன இருந்தாலும் சோழனுக்கு எப்போது வேண்டுமானாலும் "செங்கோலாட்சி " நடத்த விருப்பம் வரலாம்.
காதை வெட்டி விடக்கூடும்!!
தொடர்புடைய இடுகை :
ஒரு முடியாளுனர் கடை பெயர்ப் பலகை.
![]() |
| தஞ்சை சோழன் - சென்னை - அம்பத்தூர் - வரதராஜபுரம் |
தஞ்சை சோழன் சலூன்! அருமை. என்ன ஒரு பெயர் பொருத்தம்!!.
(கத்தரிக்) கோல் கொண்டு (நம் தலை) முடியாளும் தஞ்சை சோழன்.
என்ன... எதற்கும் கொஞ்சம், பார்த்து பதவிசாக நடந்து கொள்ளவும்.
என்ன இருந்தாலும் சோழனுக்கு எப்போது வேண்டுமானாலும் "செங்கோலாட்சி " நடத்த விருப்பம் வரலாம்.
காதை வெட்டி விடக்கூடும்!!
தொடர்புடைய இடுகை :
என்ன ஒரு பெயர் பொருத்தம்??!!!
Wednesday, 2 March 2016
நிலவுடன் ஐஸ்பாய்
Tuesday, 23 February 2016
(எனது) தமிழின் நிரந்தர சூடான இடுகை ???!!!
எல்லாரும் அப்பப்போ??!! பல, நிறைய சூடான பதிவு குடுக்கும் போது, தமிழுக்குனு, தமிழ்ல, தமிழனால், ஒரு நிரந்தர சூடான இடுகை இல்லாமப் போனா என்னாகிறது. அதான், அந்த மனக்குறை போக்குறத்துக்காக வேற யார் முயற்சி எடுப்பாங்க? காத்திருக்காமல் நாம தான முன்முயற்சி எடுக்கனும். ஏற்கனவே தமிழில் அ..னை...த்...து பதிவுகள் படிக்க புதிய நவீன உத்தி கண்ட முன் அனுபவம் வேற இருக்கா... அது கைகொடுக்கும்ன்ற நம்பிக்கை. தன் வினைத்திட்பமே தனக்குதவி.
அதான் இந்த நிரந்தர சூடு முயற்சி.
சூடாக்கியவர்களுக்கு நன்றி.
இனி இந்த சூடு ஃபோட்டோ நாமளா இங்கிருந்து எடுக்குற வரைக்கும் நிரம் தரமா இங்கியேதான் இருக்கும். வேணும்ங்கறவங்க வந்து அப்பப்ப பாத்துக்கலாம்.
தொடர்புடைய இடுகை(கள்) :
அதான் இந்த நிரந்தர சூடு முயற்சி.
![]() |
| ஃபிப்ரவரி 12ம் தேதி சூடு படம் 1 |
![]() |
| ஃபிப்ரவரி 12ம் தேதி சூடு படம் 2 |
![]() |
| ஃபிப்ரவரி 16ம் தேதி சூடு படம் 1 |
![]() |
| ஃபிப்ரவரி 16ம் தேதி சூடு படம் 2 |
![]() |
| ஃபிப்ரவரி 16ம் தேதி சூடு படம் 3 |
சூடாக்கியவர்களுக்கு நன்றி.
இனி இந்த சூடு ஃபோட்டோ நாமளா இங்கிருந்து எடுக்குற வரைக்கும் நிரம் தரமா இங்கியேதான் இருக்கும். வேணும்ங்கறவங்க வந்து அப்பப்ப பாத்துக்கலாம்.
தொடர்புடைய இடுகை(கள்) :
தமிழில் வந்த, வராத, உள்ள, இனி வர இருக்கும் அனை..த்..து... பதிவுகளையும் படிப்பதற்கான நவீன உத்தி
எல்லாம் சரி, அப்படி என்னதாம்ப்பா சூடாச்சு அப்படிங்கறவங்களுக்கு,
இருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமும்???!!!
Thursday, 11 February 2016
ராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....
Labels:
Photo,
ஆச்சி மனோரமா,
குசன்,
கோவை ராயல் தியேட்டர்,
சீதை,
ராமர்,
ராமாயணம்,
லவன்
Sunday, 25 May 2014
விடுபட்டுப்போன வார்த்தைகள்
இருக்கக்கூடும் எங்கேனுமோர் மூலையில்
எதிர்த்தட்டுப்படும் தஞ்சையின் தூசிவாழ் சந்துகளின் இடுக்கிலமைந்த படிவைத்த ராயர் வீட்டு சமையல் கூடத்தில் அம்மியாய்ராஜராஜ சோழேச்வரம் கண்ட குஞ்சர மல்லப்பெருந்தச்சன்
உச்சபட்ச உயிர்ப்புடன் உருவம் பொளித்தபின்
வைக்க முடியாமல் விட்டுப்போன கருங்கல்.
இருக்கக்கூடும் இன்னும் வாழ்வுடன்
வாயினில் ஒழுகும் எச்சிலுடன் எனைப்பார்த்து சிரிக்கும்
மழலையின் அம்மா அள்ளிப்போட்டு சேகரம் செய்து வைத்த காதறுந்த மஞ்சள் பையினுள் ஒரு மரப்பாச்சியாய்
பத்மநாபபுர அரண்மனை இழைத்த ஆசாரி
தன் ஆசைக்கு செய்துபார்த்த உருவம்
இருக்கக்கூடும் இதுவரை சாலை காணாத ஏதோவொரு கோவைப்பகுதி மலை கிராமத்து அரசு பள்ளிக்கூட மணியாக
அன்றைய மைய சென்னையில்
ஓட விட்ட ட்ராம் வண்டி பாதை ரயில் அமைக்க திட்டமிட்டு எடுத்து வந்து இடாமல் போன தண்டவாளத்துண்டு
இருக்கக்கூடும் ஒரு பழைய மரக்கள்ளிப் பெட்டியுள் சேர்த்து வைத்த
ஒன்னாவது நோட்டுப்புத்தகத்தில் ஓர் ஓரக்கிருக்கலாய்
பிறழ்வெண்களுக்கும் புதிர்களுக்கும் மேல் ராமனுஜன்
கண்டடைந்த கணித எல்லை
ஆதலினால் தேடுவீராக
யார் கண்டது ஏதோவொரு மகாகவிஞன் உன்மத்த நிலையோடு சொன்னதில் விடுபட்டுப்போன வார்த்தைகள்
எப்போதேனும் தட்டுப்படலாம் நான் இங்கு எழுதும் இந்த வரிகளில்.
வந்து விழுந்துவிட்டவைகளுக்கும் விடுபட்டவைகளுக்கும் இடைப்பட்ட வார்தைக்கணங்களில்தான்
கவிதை உயிர் பெறுகிறது
Sunday, 3 February 2013
தேடலும் பயணமும் கவிதையும்
![]() |
| தேடலும் பயணமும் கவிதையும் |
எல்லா தேடல்களையும் பயணமாகவும்
எல்லா பயணங்ளையும் தேடலாகவும் கொள்வது
கவித்துவமாக எளிதாக உள்ளது.
Tuesday, 25 December 2012
Friday, 21 December 2012
Monday, 19 November 2012
Sunday, 11 November 2012
Monday, 24 September 2012
காலநிறம்
![]() |
| காலநிறம் |
ஏதும் எழுதாமல் வெறுமே!? ஓர் ஒளிப்படமோ (அ) புகைப்படமோ போட்டுவிட்டுப் போகலாமென்றால் விடுகிறதா மனம்?
எனவே:
இக்காட்சி காட்டுவதென்ன?
நிறம் கொண்ட காலமா?
காலம் கொண்ட நிறமா?
காலத்தின் நிறமா?
நிறத்தின் காலமா?
நிறம் மாறும் காலமா?
காலம் மாறும் நிறமா?
நிறம் மாற்றும் காலமா?
காலம் மாற்றும் நிறமா?
நிறம் கொண்ட காலம்,
நிறக்காலம்.
காலம் கொண்ட நிறம்
காலநிறம்.
Saturday, 1 September 2012
ஒளிவலை
![]() |
| ஒளிவலை |
![]() |
| ஒளிவலை |
வண்ணங்களும் பிம்பங்களும் அதன் பிரதிபலிப்புகளும்.
இவற்றின் வெளியே தெரியும் நிறம் நிச்சயப்படுத்தப்படுவது எதனால்?
தொடர்புடைய இடுகைகள் :
kgjawarlal.wordpress.com/2009/08/12/ஜெயகாந்தனும் பரமாச்சாரியாரும்
Tuesday, 28 August 2012
பயணத்தின் நோக்கம்
![]() |
பயணத்தின் நோக்கம்
|
எதைத்தேடி போகுதிப்போது
ஒருவேளை சென்று தேடி கண்டடைந்தபின் நம்மிடம் சொல்லுமோ
பயணத்தின் நோக்கம்
பயணம் மட்டுமேவாக இருக்கவும் முடியும் போல தோணுது
Tuesday, 21 August 2012
நேர் கோணல்
![]() | ||||
| நேர்-கோணல் |
கண்ணிலா?
காட்சியிலா?
காணும் பொருளிலா?...
இவை எல்லாவற்றையும் நேர் ஆக்கிரமித்து விட்டிருக்கிறது போலவே?
எனில் கோணல் மட்டும் எங்கு வாழ்கிறதாம்?
கண்டு உணரமுடியாப்பொருளிலா?
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நேர்கள் தங்களின் சுவாரஸ்யத்தை கூட்ட பெருங்கருணையோடு விட்டுவைத்த அபூர்வங்களில் வாழ்கிறது கோணல்...
ஆதலினால்
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கோணல்கள் தங்களின் சுவாரஸ்யத்தை கூட்ட பெருங்கருணையோடு விட்டுவைத்த அபூர்வங்களில் வாழ்கிறது நேர்...
Monday, 20 August 2012
பகிர்தலைப்பகிர்தல் - Sharing the sharing
![]() |
| பகிர்தல்! |
இந்திய கண்டுபிடிப்பு
ஷேரிங்ங்ங்.....
உங்க அம்மா சொல்லித்தர்ல?:-)
தொடர்புடைய இடுகைகள் :
அடுப்பூதும் ஃபேன்!
இலையிடை காய்த்த கதிர்
![]() |
| இலையிடை காய்த்த கதிர் |
மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே
வாங்கும் கதிரோனை
இடைமறிக்கும் கிளைகளே
இடைமறிக்கும் கிளைகளாய்
இதைக்கண்ட கண்களே
இதைக்கண்ட கண்களுள்
கண் கண்ட காட்சியே
தொடர்புடைய இடுகைகள் :
கண்டசுத்தி -#4 - அம்பிகாபதி
இலக்கியம்
காட்சிபிழை திரை: காதலும் துரோகமும் விதியும் கண்ணதாசனும்
கூடு விட்டு கூடு : - சுஜாதா தேசிகன் : ஒரு சொட்டு வைரம்
டோண்டு : படப்பிடிப்பில் டோண்டு ராகவன் அனுபவங்கள் - Tourism shoot
Sunday, 19 August 2012
பாலம்
![]() |
| நகரும் நகரம் |
முயன்று பார்த்து 'மூணு பத்து ரூபாய்' க்கு விற்று உணவு தேடும் நடைபாதை கடை முதலாளிகளும் கொண்டு
நகரும் நகரின்
சாலை கடக்கும் பாலம்
இது ஒரு தத்துவார்த்த சொல்லாகவே மனதரிகிறது....
அத்தனை பெரிய கடவுளையே சம்சார சாகரம் கடக்கும் பாலமென்றழைக்கும் நமக்கு
பாலத்தை பள்ளம் கடக்கும் கடவுளென்றழைப்பதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்
Wednesday, 15 August 2012
Subscribe to:
Posts (Atom)
































