Showing posts with label நாலு கார். Show all posts
Showing posts with label நாலு கார். Show all posts

Sunday, 14 February 2016

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 8 பகுதி நிறைவு!!

மாறினார் டிரைவர்.....

திங்கள் காலையில் தயாராக இருந்தவனுக்கு ஃபோன் வந்தது.

ஹலோ, கேப் டிரைவர் பேசறேன், இன்னைக்கு பிக்கப்க்கு வீட்டு அட்ரஸ் சொல்லுங்க...???!!!

ஓக்கே.
அண்ணா நகர் 18th  மெயின் வந்தீங்கன்னா........{இப்போ வரைக்கும் அட்ரஸ் கேட்டு வச்சுக்கலையே}

சார் சீக்கிரம் சொல்லுங்க நான் ட்ரைவிங்ல இருக்கேன். முகப்பேர்ல ஒரு பிக் அப் பண்ணிட்டு சிக்னல் கிட்ட வந்திற்றுக்கேன். ஃபோன் பேச முடியாது ட்ராபிக்ல பாத்தாங்கன்னா  ஃபைன் பண்ணுவாங்க. {அத விட உள்ள இருக்கும் சக ஊழியர் அலுவலகம் போய் - On Phone while driving  - ரிப்போர்ட் பண்ணிட்டா பிரச்சினை.}

ஒஹ்  ஓகே.....அண்ணா நகர் 18th  மெயின் வந்தீங்கன்னா........அப்படியே லெப்ட்ல பாருங்க, ஸ்டேஷன் ரோடு சைடுல
"3 மாடி அபார்ட்மெண்ட், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.......".

ஒஹ்  ஓக்கே சார்.

மணி 8.30 ஆகிடிச்சு.....இன்னும் கேப் வந்த பாடில்லை. கால் பண்ணாலும் எடுக்க மாட்டேன்குறார். கீழே இறங்கி வந்து கா....த்திருந்தேன்.

9 மணி வாக்குல ஒரு கேப் குறுக்கயும் நெடுக்கயுமா 2-3 தட போச்சு.

ஃபோன் வந்தது.
அடையாளம் கொஞ்சம் கரக்டா சொல்லுங்க. இங்க ரொம்ப நேரமா தேடிற்றுக்கோம் நாலு கார் எங்கயுமே தென்படலையே சார்.

(:-) (:-) (:-)



தொடர்புடைய இடுகைகள் :

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 5

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 6

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 7

Friday, 12 February 2016

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 7


ஹாங்.....சொல்ல மறந்து போச்சு, இந்த களேபரத்திற்கு{யாருக்கு??} நடுவில்  ஃபாக்டரி கட்டடம் ரெடி ஆகியிருந்தது....

முன்னர் இருந்த நிறுவத்தில் அலுவலகம் செல்ல வண்டி - பஸ் - ஒரு சில குறிப்பிட்ட நிறுத்தங்கள் வழியே செல்லும், நாம் அங்கு சென்று காத்திருந்து ஏறிக்கொள்ளலாம்.

இங்கு இந்த நிறுவத்தில், துவக்கத்தில் இருந்த   50 முதல் 80 பேர்களுக்கு கால்   ( அட, அதாங்க, இந்த அகில உலக கூட்டுத் தொலைக் குலவு என்றழைக்கப்படும்,  குளோபல் கான்ஃப்ரன்ஸ் கால்) , அதுவும் அவர்களெல்லாம் சென்னையின் நீள அகலத்தின் பல பகுதிகளில் இருக்கும் போது பஸ் ஒத்துவராது.

பஸ் விட்டால் அது சென்னையை சுற்றி ஊர்வலம் வந்து அலுவலகம் அடையும் போது ஒன்று, காலை 11 மணி ஆகிருக்கும் இல்லை முதலாவதாக ஒருவரை காலை 4.30 மணிக்கு பிக் அப் செய்ய வேண்டியதிருக்கும்!!! அவர் 9மணிக்கு சரியான நேரத்திற்கு அலுவலகம் சேரலாம்???!!!

மாற்று வழி....இன்டிகாப் அதாங்க இண்டிகா கேப். அத விட கம்பனி பாரம்பரியத்த மதிச்ச்சும், என்ன இருந்தாலும் ஒரு ஐ டி கம்பனி பஸ் விடுறது அவ்வளவு சிறப்பு இல்லங்கறதாலையும், அப்போ இருந்த (அப்போ தான் பெங்களூர் தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருந்த) ஃபெசிலிட்டி மக்களுக்கு பஸ் பயணம் அவ்வளவாக பரிச்சியமில்லாததாலும், இருந்த 50-80 பேரும் கூட வெவ்வேறு நேரத்தில் வர வேண்டியிருந்ததாலும் - i e., that aligning to APAC time zone moment, திடீரென அன்றன்றைக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது என்ற முடிவினை எடுக்க யாரும் ஃபெசிலிட்டி டீமிடம் ஆலோசிக்க வேண்டியதில்லை என்ற நடை முறை யதார்த்த நிர்பந்தத்தின் காரணமாகவும், இதை பார்த்தால் இதற்கு O R (ஆபரேஷன் ரிசர்ச்) ல் ட்ரான்ஸ்போர்டேஷன் ப்ராப்ளம் என்று பெயர் என்பதற்கும் MILK RUN*** கான்செப்ட் பயன்படுத்தலாம் என்ற அளவிற்கும் மேல் எனக்கு தெரிந்திருக்க வில்லை என்பதாலும்,  இந்த அளவினை போல் 100 மடங்கு அதிக அனலிடிக்ஸ்+++ திறமை கொண்ட மக்கள் டீமில் உண்டு என்பதாலும் அவர்களுக்கு இதைவிட வேறுபல முக்கியமான ப்ராஜெக்ட் வேலைகள் இருந்ததாலும் மேலும் இந்த வேளையில் இதைப்போன்ற  SSS வைத்துக்கொள்ளும் ஆலோசனைகளை  கொண்டு சென்று சொல்ல யாரும் தயாராக இல்லை என்பதாலும் எங்களின் கேப் பயணம் இனிதே சென்று கொண்டிருந்தது. {மூச்சு விட்டுக்கோங்க}

சராசரியா 20-25 கேப் கள் 30 முதல் 35 ட்ரிப் அடித்து 50 முதல் 80 பேரை காடு மலை மேகம் அருவி மேடு பள்ளம் பல கடந்து சீர்மிகு சென்னை, கவின் காஞ்சி, திரு வள்ளூர் மாவட்டப் பகுதிகளிலிருந்தும், கொண்டும், சென்றும், சேர்த்து வந்துகொண்டிருந்தன.

ரணகளத்தின் குதூகலமாக அவ்வப்போது காஸ்ட் சேவிங் மெஷர் ஆக 5 க்கு மேற்பட்டோர் அருகாமை {20 முதல் 30 கி.மீ சுற்றில் என புரிந்து கொள்க?!!} பகுதிவாழுனராக மாறும்தோறும் குவாலிஸ் மற்றும் டவேரா பயன்பாடு கொண்டு வர......ஷெடுல்  என்னவோ போடவேண்டிய ஊழியர் அவர் அவரின் பூகோள-புவியியல் மற்றும் அறிவியல் சமன்பாட்டின் படி, சமயத்தில் குவாலிஸில் 2 பேர் இன்டிகாவில் 4 முதல் 6 பேர் வரை என ஸ்கெட்யூல் செய்துகொண்டிருந்தார் - 'பூமத்திய ரேகை' எங்குள்ளது என அவரிடம் கேட்டு பெற்ற பதிலை இங்கு விளக்க முடியாது எனவே அமைதி பெறுக -  எங்களுக்கு, யாரை முதலில் ஏற்றுவது /இறக்கி விடுவது என்பதிலான அரசியல் நோகடித்துக்கொண்டிருந்ததது.
நொவ் இட் இஸ் ஹிஸ் டர்ன் யூ  ஸீ.

இதிலும் வண்டிகள் மற்றும் ஓட்டுனர் சுற்றில் வருவர் - தொடர்ந்த பரிச்சியம் வேறு சிக்கல்களை கூட்டக் கூடும் என்பதால். 

அது கூட்டிக் கொண்டு வந்தது.....அடுத்த.....ஆமாம் அதேதான்....அது.,

---------------***----------------------------***----------------------------***---------------


இதில் வரும் Milk Run மற்றும் Analytics போன்றவை யாது என்போர், இங்கு, கீழ்க்கண்ட உரல்களிற்கு  விஜயம் செய்ய பரிந்துரை செய்கிறேன்!!!°°°°

*** தமிழில் : Milk Run = பால் கொள்வனவு ஓட்டம் / பயணப் பாதை.

Press here for English : Milk Run Concept.  மற்றும்  Milk Run Logistics

நன்றி : விக்கிபீடியா.


+++ Analytics : 5-months nano-MBA in Business Analytics | Sunstone Business School

                          manipal executive education | Advance Certificate in Business Analytics



தொடர்புடைய இடுகைகள் :

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 5

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 6

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 6


முதல் ஒரு வாரம் ஒன்னும் பிரச்சினை இல்ல. இன்னும் ஃபாக்டரி கட்டடம் முடியாததால அலுவலகம் ஒரு பெரிய டவர்ல மயிலாப்பூர்ல இருந்து இயங்கி கொண்டிருந்தது. காலைல ஓ சி 2 வீலர் ( நம்ம மாமணியோடதுதான் - ஹி  ஹி - அவங்கிட்டதான் காரு இருக்கில்ல? அப்புறம் என்ன!??!!) ல கிளம்பி சுத்தி முத்தி ஒரு வழியா டெய்லி??!! வழி கண்டு பிடிச்சு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன்.

எச் ஆர் காரர் பேச்சு வாக்கில் கேட்டார் "எங்க ஸ்டே பன்னிருக்கீங்க" சொன்னேன்.
ஓ அப்படியா? நம்ம ரா... அவங்க எல்லாம் இங்க பக்கத்துலதான் சென்னை-இன்ன் ல தங்கியிருக்காங்க.
ஈவினிங் போகும் போது போய் பார்த்தேன். பெரிய ஹோட்டல். ஹ்ம்ம் நமக்கு கட்டு படி ஆகாதுப்போவ்.

வெள்ளிக் கிழமை கூப்பிட்டு நம்ம மானேஜர் சொன்னார், பாஸ் போர்ட் இருக்கில்ல, திங்கள் கிழமை மலேசியா பிராந்திய அலுவலகத்துக்கு போகணும். ஒரு மாசம் ட்ரைனிங். நன்று. ரா...ம் வராரு.

தயாராகணும். இப்போ பாதி லக்கேஜ் அங்க இருக்கே.....ஒக்கே. எவ்வளவோ...{வேண்டாம்......வேல பாக்கலாம்}

MTR உணவு பொருட்களும் {நன்றி CFTRI & கார்கில்} சில உடைமைகளுடனும், முதல் வெளிநாட்டு பயணம்.

அருமை. இறங்கிய பின் பொத்திக் கூட்டிக்கொண்டு போய் தங்கும் அறையில் விட்டார்கள்.

ரா...ம் நானும் ஒரு பெரிய அறையில் தங்கினோம் (Furnished Apartment). வேற என்ன, என்ன சாயங்கால வேளைகளில் பேச்சு பேச்சு பேச்சு..அது போன்ற ஒரு நேரத்தில் கேட்டார்....நீ ஏன்யா அவ்ளோ தூரத்துலேர்ந்து டெய்லி ட்ராவல் பண்ணி வர்ற. இப்போ தான் ஃபாமிலி  இன்னும் வரல இல்ல? அப்புறம் என்ன பேசாம வந்து அங்கேயே சென்னை-இன்ன் ல தங்க வேண்டியதுதான?
??!!! இல்லங்க எதுக்கு அவ்ளோ செலவு?
யோவ், மொத 15 நாள் இது ஜாயினிங் நேரத்துக்கான கம்பனி அக்காமடேஷன்.

???!!!!என்னது........ஞே என்றோ ஙெ என்றோ விழித்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அவ்ளோ நல்லா கேட்டு, ரா... தங்கி இருக்காருன்னு எல்லாம் சொன்ன ம .வ. அதிகாரி இத சொல்லலையே.....{மறுபடி மறுபடி ஆவாஸ் அன்ஞிங்கா)
ஓக்கே.....எவ்வளவோ....{நோ....கீப் குயட்}

சரி, ஒரு வழியாக ஒரு மாசம் கழித்து கற்றதும் பெற்றதும் உடன் கூட சேர்த்து, ஒரு கண்டு பிடிப்பும் நிகழ்ந்தது.
அது, அப்போது ஏர்டெல் ரோமிங்கிலோ அல்லது சாதரனமாகவோ கர்நாடகா வில் இருந்து தமிழ்நாட்டிற்கு மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பேசுவதை விட, அதே நம்பரிலிருந்து மலேசியாவிலிருந்து பேசும்போது ரோமிங் சார்ஜ் இல்லை /குறைவு!!!!!!????

ஒரு மாசம் கழித்து வந்தேன்.....எங்க? அங்கேயேதான்.
அவரு மேரேஜுக்கு தான் இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கே.
மேலும் ஆடி மாசத்துல வீடு மாறக்கூடாது யூ ஸீ ........

ஹாங்.....சொல்ல மறந்து போச்சு, இந்த களேபரத்திற்கு{யாருக்கு??} நடுவில்  ஃபாக்டரி கட்டடம் ரெடி ஆகியிருந்தது....

தொடர்புடைய இடுகைகள் :

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 5

Thursday, 11 February 2016

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 5


ரெண்டு மணிக்கு..........................
வந்தார்,,,,,,,,,,,,,,,,
பாண்டி சென்ற என் மாமணி.

ஹ ஹாய்.  ஹாய் சார்.

உற்சாகமாக கேட்டேன், ஏண்டா வீட்ட தேடி கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டம்பா.

நாந்தான் சொன்னேனே சார், அது ரொம்ப சிம்பிள்  "3 மாடி அபார்ட்மெண்ட், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்......."

டேய், படுத்தாத இங்க நெறையா 3 மாடி இருக்கு ஆனா அங்க நாலு காரும் இல்ல 3 மாடியும் இல்ல.

சார்....நான் சொன்னப்ப மணி 7.30 (ஏழற). நீங்க ஒரு அரை மணி நேரத்துல இங்க ரீச் ஆகிருப்பிங்க இல்ல. அதுக்கப்புறம் 8-830க்கு எல்லாம் வண்டி எடுத்துட்டு ஆஃபிஸ் போயிருப்பாங்க. 

ஒஹ் அப்படியா??!!! {நான் அப்போவே வீட்டுல செக் பண்ணி அந்த ஆட்டோ காரருக்கு சொத்து கொடுத்திருக்க வேண்டும்}

வேனும்னா நாளைக்கு காலைல பாருங்க என்னோடதையும் சேர்த்து அஞ்சு கார் நிக்கும்.{ பய புள்ள சீரியாச்சாத்தான் சொல்லுது...}

இன்னும் அட்ரஸ்னு ஒன்ன சொல்லல நானும் கேட்டுக்கல......

அடுத்த நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!!குக்கு தயாராவது அப்போது தெரியாது.


தொடர்புடைய இடுகைகள் :

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4

தேடலும் பயணமும் கவிதையும்

Wednesday, 10 February 2016

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.....

முனகி கொண்டிருந்த ஃபோன எடுத்து என் மாமணிக்கு ஃபோனினேன்.

ஒரு கால், ரெண்டு கால், மூணு கால்,...............எட்டாவது காலில் லும் எடுக்கவில்லை....

இப்போது நிலைமை "ஓடும் ரயில் வண்டியிலிருந்து", "இடை நில்லாப் பேருந்து ஆகிவிடும் போன்றிருந்தது".

ஃபோனும் ஒரு கோடு பேட்டரியோடு உயிர் பிழைத்திருந்தது.....

ஒரே கால் ஒருக்கால் போகா விட்டால் என்ன செய்ய....
மட்ட உரிச்ச தேங்காய உருட்டி விட்டா அது நிலை வந்து சேர்றதுங்கறது இருக்குற குடுமி எடையைப் பொருத்தது. இங்க அதையும் இல்ல பிச்சிப் போட்டு உருட்டி விட்டு இருக்கு. வாழ்க ஐசக் நியூட்டன்!!

இப்போ பாத்து தெரியாத ஒரு நம்பரிலிருந்து 2-3 மிஸ்ட் கால்.
எடுக்கல.
இருக்குற சொச்ச பேட்டரியும் செத்து போயிடுச்சுன்னா........

சரி எதுக்கும் விசாரனைய தொடங்கலாம். இதுவரைக்கும் மொத்தம் மூணு 3 அபார்ட்மெண்ட் காம்பௌண்ட் இருக்கு அந்த ரோட்டுல. ஆனா எதுலயும் வெளில  நாலு கார் நிக்கல. 

இறங்கி கேக்கலாம்.
கேட்ட ரெண்டுலயும் இருந்தவங்க உள்ள விடாம அட்ரஸ் கேக்கவும் உரைத்தது இப்படி ஒரு விஷயம் இருக்கு இல்ல.... இப்ப யோசிச்சு என்ன பிரயோஜனம்.

ரணகளத்துலயும் ஒரு குதூகலம் இல்லன்னா எப்படி? விசாரித்தவரையில் ஒரு வீட்டில் பிட்டு வைத்த குட்டித் துண்டு ஒன்று லட்டு போலவே இருந்தது. பூந்திகள் சேர்ந்து லட்டென்றவன் எவன்?. சிந்தித்திருந்த வேளையில் தட்டியது  பல்லிடுக்கில் கிராம்பு துண்டு. வேறொன்றுமில்லை அவங்க அப்பா வந்து கதவு சார்த்தி போனார். லட்டில் கிராம்பும் ஏலமும் போட்டவன் எவன்??!!

மணி 9.30.

8 மணிக்கு பயணம் ஆரம்பித்து பத்து நிமிட தூரம் கடந்தால் அப்போது மணி 9.30 உம் ஆகக்கூடுமென்ற பேருண்மையை உரைத்தது. வாழ்க ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!!! ( கிலுகிலுப்பை கவிதை ).

இப்போது மறுபடியும் அதே தெரியாத??!! ஒரு நம்பரிலிருந்து 2-3 மிஸ்ட் கால். எடுக்கல. {இப்போ அது தெரிஞ்ச நம்பரா இல்ல தெரியாத நம்பரானு டவுட்}

மறுபடியும். ஏற்கனவே மிஸ்ட் கால் வந்து அது தெரிஞ்ச நம்பரா போய்ட்டதால??!! இப்போ எடுத்து பேசினேன்.

சார் நான் (மாமணி யோட ரூம் மேட்) பேசறேன். (:-).....இப்போதான் அவரு மெசேஜ் பன்னாப்டி. அவரு மீட்டிங்ல இருக்கறதால எடுக்க முடியலாம். எங்க இருக்கீங்க.....

ஆஹா...., சொல்லுங்க பாஸ். வீட்ட தேடிட்ருக்கேன்.

ஓஹ் அப்படியா....அது ரொம்ப சிம்பிள் சார், 
3 மாடி அபார்ட்மெண்ட், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.......

(என்னாது)....!@#$%^&*()​+​)((*&^%$#@! மறுபடியும் முதல்லேர்ந்தா??!!

இல்லங்க நான் இப்போ அந்த ரோட்டுலதான் இருக்கேன், கொஞ்சம் நம்பர் அட்ரஸ் சொல்லுங்க.

அப்படியா,,,சரி சரி, இந்த லெஃ ப்ட் ல பாத்திங்கன்னா ஒரு ரிலையன்ஸ் ஃபிரஷ் இருக்கும் {இது எவ்ளோ நல்லா இருக்கு அட்ரஸ்} அதுலேர்ந்து மூணாவது பில்டிங் வந்திங்கன்னா வீடு. நீங்க வாங்க நான் வெளில வந்து நிக்கிறேன்.  {அப்புறம் ஏன்டா ஆவாஸ் அன்ஞிங் ஆவாஸ் அன்ஞிங்னு கிலிய கூட்டுறீங்க}

நன்றிங்க.......

போனோம். நீங்கதானா அது ரெண்டு மூணு தட அந்த வண்டில கிராஸ் பண்ணிற்றுந்தீங்க....நான் கூட ஏதோ அட்ரஸ் தேடிட்ருப்பாங்க போலன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
{இதற்கு என்ன பதில் சொல்வது.....ஏன்னா நம்ம கிட்டதான் அட்ரஸ் இல்லையே - அப்புறம் எப்படி அட்ரஸ் தேடுறது??}

நீங்க ஆட்டோ ல இல்ல வருவீங்கன்னு சொன்னாப்டி. {ஒஹ் இப்படி ஒன்னு இருக்கா? ஆட்டோ காரரோட நமக்கு வாய்க்கா வரப்பு பிரச்சினைனு  இவருக்கு சொல்லலாமா???} {பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாம்}.

இங்கதான் சார் நல்ல தண்ணி போர் வாட்டர் கிடைக்குது அதான். நல்ல இடம் சார். ரூம் மேல 3வது ஃப்ளோர். வாங்க போலாம். நான் என் சீனியர பார்த்தேன். கார பார்க் பண்ணிட்டு வந்தார்.......அப்ப்பாடா ஒரு வழியா வந்தாச்சு. பக்கத்துல இன்னொரு கார் சத்தம். ஒருத்தர் பார்க் பண்ணிட்டு ரிலையன்ஸ் ஃபிரஷ் பாக்கம் நடந்து போனார். இப்போ வெளில பார்த்தேன். நாங்க வந்த காரோட சேர்த்து  நாலு கார் இருந்தது.......(;-)


அவரோடு சேர்ந்து மேல போகும்போது சொன்னார், மூனே  ஃப்ளோர்ங்கறதால லிஃப்ட் லாம் இல்ல படிதான். 
ஓக்கே. இப்போ 21 லக்கேஜ நினைத்து பார்த்தேன். டிக்கி முதல் அக்கி வரை அள்ளி எடுத்து வந்தவைகளை இறக்கி வைக்க முடியாது போல. எவ்வளவோ.......ம்ஹ்ம்ம் ஹூம் வேண்டாம்.

நெக்ஸ்ட் டு நெக்ஸ்ட் மன்ந்த் எனக்கு கல்யாணம். அதுக்கப்புரம் ஃபாமிலி இங்க வருவாங்க. பசங்க வேற இடம் போறாங்க. நீங்க அவசியம் மாரேஜுக்கு வரணும். [நல்ல விதமாகவே சொன்னார்]. {ஒரு புதிய நன்பேண்டா.}

ஓ சந்தோஷம். வாழ்த்துக்கள். 

போனால் அங்கு நல்ல பெரிய 2BHK வாதான் இருந்தது. என்ன கொஞ்சம் அவரோட கல்யாண ஏற்பாட்டுல வீட்டு சாமான் சேர்த்திருந்தார்.

நன்று. ஸிறப்பு ஸிறப்பு. மகிழ்ச்சி.

இப்போ சீனியர பாத்தேன். அவர் புரிந்தவராக, நீ எப்படியும் தாற்காலிகமாக தான இங்க இருப்ப...ஆஃபிஸ் போக வசதி எப்படியும் வேற ஏரியா தான். நானும் வேற வேலையா கிளம்ப வேண்டிருக்கு. நான் ஒன்னு பண்றேன் லக்கேஜ்லாம் வண்டில அப்படியே இருக்கட்டும். இப்போ என்ன வேணுமோ அத எடுத்துக்கோ மீதி நான் வீட்டுல கொண்டு போடறேன். நீ ரூம் முடிவு பண்ணிட்டு சொல்லு அங்க எடுத்து வரேன். 

ஆஹா வேறென்ன வேறென்ன வேண்டும்....அப்படியே ஆகட்டும்.

வழியனுப்பல்.

செட்டில். அவரோடு (அவரது) கல்யாண அளவளாவல் முடித்து குளித்து கிளம்பி சாப்பிட்டு வந்தோம். ரெண்டு மணிக்கு.......................... வந்தார்,,,,,,,,,,,,,,,, பாண்டி சென்ற என் மாமணி.
ஹ ஹாய்  ஹாய் சார்.

உற்சாகமாக கேட்டேன், ஏண்டா வீட்ட தேடி கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டம்பா.

அதுக்கு.,.,.,.,.,சொன்னானே ஒரு பதிலத்தான்.,.,.,,.,.திகில் அடைஞ்சேனே அத நினைச்சுத்தான்.........அது...... 

Tuesday, 9 February 2016

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3


எப்படியும் ரஸ்க் சாப்புடறதுன்னு ஆகிப்போச்சு, சுனா பானா சுத்தி அடி.

என்ன பண்ணலாம்..???

பராக்கு பாத்துகிட்டே வந்த ஒரு KSRTC கண்டக்டர் கிட்ட "அண்ணவரே ஈ பேகுகளன சொல்ப நோட் கொள்தீரா நானு ஓகி ட்ராலி தகொண்டு பருத்தினி" என்றதும், சென்னையில் கன்னடம் கேட்ட செவியோடு சேர்த்து தலையசைத்தார். ஆகா இதுவன்றோ இருமொழி அறிதலின் மகிச்சி.

ட்ராலி கிடைத்தது. அவருக்கு "தும்ப தாங்க்ஸ்" ஒன்றை சொல்லி லா...க்கேஜ்களை  எடுத்து அதன் மேல் வைத்து தள்ளிக் கொண்டு வாசல் வந்தேன்.

ஹ்ம்ம் ப்ரீ பெய்ட் கவுன்டர் இல்லையா.....வாட் எ பிட்டி வாட் எ பிட்டி?

ஆட்டோக்காரர் குறைந்தது இரண்டு ஆட்டோ வேண்டும் என்று ஆரம்பித்தார். ஓக்கே....எவ்வளவு என்றதும் இருக்கும் சொத்தில் பாதியை கேட்டார்......
போய் சேர்ந்து விட்ட ரெண்டு பக்க தாத்தா பாட்டிகளும் இதைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே. எதுக்கும் ரூம் போன பின் முதல் வேலையாக வீட்டுக்கு ஃபோன் போட்டு கேக்கணும்.

ஃபோன் அடித்தது,,,,,,பார்த்தேன்.....ஆஹா ஆபத்பாந்தவன், என்னோட சீனியர், முன்னாள் சக ஊழியர், சென்னையில் இருப்பவர். கால் செய்திருந்தார்.

சார்...
எப்படி இருக்க?
நான் இப்போ சென்னை வந்துருக்கேன்.........(கொசுவர்த்தி சுத்தப்பட்டது).
கொயம்பெட்டுல இருக்கியா....நான் அந்த பக்கமாதான் ஒரு வேலையா வந்தேன்.....ஒரு 15 நிமிஷம் வெயிட் பண்ணு வந்துர்றேன். (:-) (:-).......நான் டிராப் பண்றேன்.(:-) (:-)(:-) (:-)(:-) (:-)

நாந்தான் சொன்னேன்ல நமக்கு நட்பு வட்டம் பெருசுன்னு.

ஆட்டோ டிரைவரிடம் தற்போதய நிலையில் பாகப்பிரிவினை சாத்தியப்படாது என்பதை தெரிவித்து விட்டு, மாமணிக்கு போனப்போட்டேன். வழி கேக்கணுமே.

சொன்னான், 18th அவென்யு ல வந்திங்கன்னா ஸ்டேஷன் ரோடு சைடுல அபார்ட்மெண்ட் கம்பவுண்டு  இருக்கும் அதான்.
இன்னும் கிளியரா சொல்லுடா....
3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.

ஒஹ் ஓக்கே அப்ப சரி.

காத்திருந்தேன். வந்தார். நல விசாரிப்புகளின் பின், மூட்டைகளை எடுத்து வண்டியில் வைத்து விட்டு ஏறி கிளம்பினோம். மணி 8ஐ நெருங்கியிருந்தது.

ஃபிளை ஓவர் இல்லா காலத்து டிராபிக்கில் பயணம். திருமங்கலம் சிக்னல் கிட்ட வரும்போது ஃபோன் சிக்னலும் பாட்டரியும் பத்தாது என்றது. ஓக்கே பத்து நிமிஷம்தான....போய் பாத்துக்கலாம்.

பதினெட்டாம் அவென்யு திரும்பி ஸ்டேஷன் சைடு ரோட பார்த்துகிட்டே வந்தோம்..........3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்

3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்



தொடர்புடைய இடுகைகள் :

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2

தேடலும் பயணமும் கவிதையும்

Saturday, 6 February 2016

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2


வருது ஆவாஸ் அன்ஜிங்......

கர்நாடகா பேருந்துகள் நிறுத்தக் கட்டையில் ஒரு ஓரமா நின்னு மூட்டை முடிச்சுகளை தனியொருவனாக சற்று தள்ளி எடுத்து வைத்து விட்டு இரண்டு நிமிடம் சுற்றி முற்றி பாவமாக பார்த்து விட்டு நிமிர்தேன்.

சிறிய கலக்கம் வந்தது.....இது சற்றே "ஓடும் ரயில் வண்டியில் ஒரு பிடிமானமும் இல்லாமல் வேட்டி கட்டியவன் ஒன்னுக்கு இருக்கும் பிராண  சங்கட நிலை" அல்லவா.

ஒத்தை ஆள் 21 லக்கேஜ்.....கோயம்பேடு கர்நாடகா பஸ் கட்டை.....இப்போ ஒரு டீ குடிக்கனும்னா இல்ல ஒரு அவசரம்னா என்ன செய்ய. ஒரே தீர்வு சீக்கிரமே அறை போய் சேர்வது.

எவ்வளவோ பண்ணிருக்கோம் இத பண்ண மாட்டோமா.....வருவான்டா கார்ல வாராது வந்த மாமணி.

ரோமிங்ல இருந்த (கர்நாடகா நம்பர்) ஃபோன எடுத்து,

ஒரு கால், ரெண்டு கால், மூணு கால்,...............எடுத்தார் மாமணி எட்டாவது காலில். இருந்தார் தூக்கக் கலக்கத்தில். {அடேய் பாவி நாந்தானாடா இன்றைக்கு அலாரம் சர்வீஸ் ஒனக்கு}

ஹ்ம்ம் O K. பாவம் ட்ராவலிங் டயர்டா இருக்கும் இல்ல.

ஹலோ.....
ஹய் ஹாய்....சொல்லுங்க சார்...???!!!! என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க.....???!!!!
ஹாய் நான் இங்க வந்திருக்கேன்.....
ஹைய் ய் ய் யோ....சோ நைஸ். எங்க தங்கிருக்கீங்க? இன்னைக்கு ஈவினிங் மீட் பண்லாமா........????

டேய்....நான் இங்க கோயம்பேடுல உனக்காக வெயிட் பண்ணிட்ருக்கேன் செல்லம்.
ஒஹ் ஹோ.....நான் இப்போ பாண்டிச்சேரி ல இருக்கேன்.....???!!!!! நேத்து ஒரு அர்ஜன்ட் மீட் இங்க அதான் வண்டி எடுத்துட்டு வந்தேன். இன்னைக்கி காலைல 11  மணிக்குதான் மீட் முடியும் இங்க.

ஓ கே......
கொஞ்சம் சொல்லிருக்கலாமே.......

நாந்தாம் சொன்னேனே சார்....???!! மீட்டுக்கு போக வேண்டிருக்கும்னு.....TN,KL, பாண்டி மூனும் (என்னது...நிலாவா...) என்னோட ரீஜன் ல வர்றதால ஆல்டர்னட் மன்த் இடம் சேஞ் பண்ணுவோம். {நாதான் சொன்னனே ஆவாஸ் அன்ஜிங்,,,ஆவாஸ் அன்ஜிங்,,,,ஆவாஸ் அன்ஜிங்,,,,,அப்படின்னு}

ஓ கே...... {ஏன்டா உனக்குத்தான் தமிழ் நல்லா தெரியுமே.......நான் இருக்குறது சந்தேகம்னு சொல்லலாமே அப்பவே அத}

அப்போ நீங்க ஒன்னு பண்ணுங்க அப்படியே என்ட்ரன்ஸ் வந்திங்கன்னா ஆட்டோ இருக்கும் பிடிச்சு ரூமுக்கு வந்துடுங்க.......{பரவாயில்ல இதயாவது ஞாபகம் வச்சிருக்கானே}.

ஓக் கே......

( லைட்டா முனகி)  லக்கேஜ் இருக்குடா.

அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல...???!!! அங்க ட்ராலி இருக்கும் அதுல போட்டு வெளில கொண்டு வந்துடுங்க???!!!

ஓக்கே......சரி வச்சிட்டு கூப்புடுறேன்.

ஹ்ம்ம்.......

அடடா வழி கேக்க விட்டுட்டனே. சரி வண்டில வச்சிட்டு கேட்டுக்கலாம்.

அதுக்குள்ள மீட்டிங் உள்ள போயிட்டான்னா....????

அஞ்சு நிமிஷம்தான பாத்துக்கலாம்...... மணி இப்போ 7.15 தான.

தொடர்புடைய இடுகைகள் :
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

தேடலும் பயணமும் கவிதையும்

Friday, 25 December 2015

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1


சில பல காலம் முன்பு நான் சில காலம் ஓர் கணிப்பொறி தயாரிப்பு நிறுவத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். சேர்ந்தது முதல் பல இனிய வித்தியாசமான அனுபவங்கள்.

அதில் ஒன்று : அந்த வேலையில் சேர்ந்து தொடங்கும் நேரத்தயது , கம்பெனி மாறி வேறோர் ஊரிலிருந்து வந்து சென்னை அண்ணா நகரில் நண்பர்களின் அறையில் தாற்காலிக வாசம் செய்வதாக  திட்டம். புது ஏரியா. 6 ந் தேதி கம்பெனில ஜாயினிங் போர் மாலிட்டி முடிக்க 4ந் தேதி காலைல கோயம்பேடு பேபேபே....ருந்து நிலையத்துக்கு வந்து இறங்க வேண்டும். பேருந்து வந்து சேரும் நேரம் காலை 6.30 - 7.00 மணி.

நமக்குதான் நட்பு வட்டம் இறுக்கமா..அதாவது ஸ்ட்ராங். அறையில் இருந்த நண்பரில் ஒருவன் மிக ஆர்வமாக தானே காரில் வந்து என்னை கோயம்பேட்டிலிருந்து அறைக்கு அழைத்து செல்வதாக வாலண்டரி சத்தியம் செய்தான் - சார் மார்கெடிங் சர்வீஸ் டெக் ட்ரைனிங் சைடில் இருந்ததால் அலுவலக கார் இருந்தது - காலை என்பதால் என்னை அறையில் கொண்டு விட்டபின் அவர் அலுவலகம் செல்லலாம்.

பேச்சிலரா இருந்தாலும் 9 வருஷம் ஆணி அடிச்சு ஒரே எடத்துல இருந்ததுல நிறைய மூட்டை முடிச்சு. அத்தனைக்கும் ஆசைப்பட்டு தூக்கி வந்தாச்சு.  அத்தனையையும் எடுத்தாலும் பேக்கேர்ஸ் கு காசு குடுக்க முடியாதுங்கறதால கிடைச்ச கே எஸ் ஆர் டி சி ஐராவதா லக்கேஜ் பூட் உள்ளே கண்டக்டர் சுதாரிக்கும் முன் 21 உருப்படி மூட்டை முடிச்சு பெட்டி பைகளை ஏற்றி விட்டு அமர்ந்தேன்.....டீசென்டான கண்டக்டர் லைட்டா புலம்பிட்டு (=என்னை திட்டிவிட்டு) மற்றவர்களை கவனிக்க சென்றார். பயணம் சாதரணமாகவே சென்றது.

இறங்கி எப்படியும் நண்பர் காரில் வருவதால் ஒன்றும் பிரச்சினை இல்லை. வேறு எந்த வழியிலும் அவ்வளவு மூட்டைகளை கோயம்பேட்டிலிருந்து ஒத்தை ஆள் எடுத்துசெல்ல முடியாது.

வருது அவாஸ் அன்ஜிங் என்பது அப்போழுது தெரியாது.......



தொடர்புடைய இடுகைகள் :

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3

நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4