Saturday 27 October 2012

வெந்துதணிய காடில்லை பாலையில்


கூடாரத்து ஒட்டகங்கள் எழுந்து
பாலையுள் நடந்து செல்கின்றன
மொட்டைமாடி கொடியில் துணிகள்
இரவின் பனியில் காய்கின்றன
அடுத்துள்ள அறையின் மின்விசிறி
இடைவெளி விட்ட இலயத்துடன் கரடு முரடான ஒலியெழுப்புகிறது
தரையில் கிடக்கும் பிய்த்துப்போட்ட ஜரிகைத்துண்டு
ஏனென்று தெரியாமல் துணுக்குறவைக்கிறது


வெந்து தணிய காடில்லை பாலையில்
இடையே மெதுவாய் பூனை போல் வந்தமர்கிறது மனதில் இதை எழுதும் எண்ணம்
பாலையிலும் உண்டு பூனைகளுக்கு வேலை.

1 comment:

  1. பத்ரி பதிவில் விமர்சனம் எழுதியது நீங்க தானே? இத்தனை திறமை இருந்து உங்கள் பதிவில் வந்து பார்த்த போது எனக்கு பெரிய ஏமாற்றம். நிறைய எழுத முடியும் உங்களால்.

    ஜோதிஜி

    ReplyDelete