Wednesday 17 February 2016

காஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்???!!!!

காஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்???!!!!

இத இப்போ கொஞ்சம் முன்னாடி படித்தேன். எத.......


"திங்க"க்கிழமை 160215 :: காலையில் காஃபி... மாலையிலும் காஃபி!
http://engalblog.blogspot.com/2016/02/160215.html

நல்ல இடுகை. பகிர்வு.

அப்படியே அங்க போய் அவசரமா ஒரு கருத்து சொல்ல தேவை இருக்கறதா தோன்றி..........அதுக்கு ஒரு பதில் / கருத்து / செய்தி / தகவல் / பின்னூட்டம் போடலாம்னு போய் ஊட்டினால், அளித்த பின்  பார்த்தால், நம்ம கருத்து ஒரு பதிவே போடற அளவுக்கு வந்தது!!!. சரின்னு அப்புறம் அதுல இருந்த காப்புள்ளி, அரைப்புள்ளி, சந்திப்பிழை, எழுத்துப்பிழை எல்லாத்தையும் "முடிந்தவரை" பட்டி தட்டி இங்கே. மத்தபடி காஃபியோட படம் கிடம் வேணும்கிறவங்க அங்க போய் பாத்துக்கோங்க!!!


மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்???!!!!

விடுபட்டதாக எனக்குத்  தோன்றியவை :

மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி - ரெண்டுமே ஃபில்டர் காஃபிதான்னாலும் மொறைன்னு ஒன்னு இருக்குல்ல....

  1. >  டிகிரி காஃபி = இது பெரும்பாலானோருக்கு தெரிந்த லாக்டோ மீட்டரில் பாலின் கொழுப்பு / தர அளவு பார்த்து வாங்கி காபி போடும் முறை ஆகும்
  2. >  மீட்டர் காஃபி = இது கொஞ்சம் சிக்கலான செய்முறை கொண்டது???!!! பெரும்பாலானோர் எண்ணக்கூடியது போல இது லாக்டோ மீட்டரில் வரும் மீட்டர் அல்ல......!!!! சில பல சர்க்கஸ் வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும். எதையுமே ப்ளான் பண்ணிதான் செய்யனும்னு சும்மாவா சொல்லிருக்காங்க?

                  2.1 > டிகாஷனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனை கை வாகிற்கு தகுந்தாற்போல் இடதோ வலதோ கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.
                  2.2> இன்னொரு கையில் தேவையான அளவு பாலினை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, அப்படியே அலாக்காக கை வீச்சில் முழுதுமாக (பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டு) மேலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூக்கி பிடிக்க வேண்டும்.
                  2.3> இப்போது இரண்டாவது கையையும், அலாக்காக கை வீச்சில் முழுதுமாக (பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டு) கீழே எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாழ்த்திப் பிடிக்க வேண்டும்.
                  2.4> மேலே உள்ள பாத்திரத்திலிருந்து பாலினை கை உயரம் மாறாமல் அப்படியே (சொய்ய்ஈங்குன்னு) டிகாஷன் பாத்திரத்திற்கு உள்ளே செலுத்த?? வேண்டும்.
                  2.5> மேற்கண்டவற்றை செய்வது கண நேரத்தில் நிகழவேண்டும் மற்றும் இந்த நிகழ்வின் பொது இரண்டு கை / பாத்திரத்திற்கு இடைப்பட்ட "தூரம்" குறைந்தது "ஒரு மீட்டர்" க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
                  2.6> "மீட்டர் காபி" தயார்.

இது தஞ்சை ஸ்பெஷல்!!!

இது தற்போது கிடைக்கக் கூடிய இடம் : மேத்தா கடை என்று அழைக்கப்படும் காபி பேலஸ் - தெற்கு வீதி அருகில் - எல்லை அம்மன் கோயில் தெரு மற்றும் அய்யன்கடை தெரு, தஞ்சை.

இப்போ சொல்லுங்க, இதுக்கு "மீட்டர் காபி" னு பேர் வச்சவன் ரசிகனா இல்லையா???!!!

இந்த கடைக்கு வேறு பல விசேஷங்களும் உள. கூகிளார் உதவக்கூடும்.


தொடர்புடைய இடுகைகள் :

இருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமும்???!!!

காப்புரிமை சந்தேகங்கள்......திருகாணி வெளிப்பான் | Patent....... Screw Feeder


http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/patent-screw-feeder.html 

3 comments:

  1. // "நாமும் ஏன் நாளை காபியில் வெல்லம் போட்டுக் குடிக்கக் கூடாது?"//

    முடிந்தால் இதனை முயற்சித்துப் பாருங்கள். நல்ல ஒரு உட்கொள்ளக் கூடிய பண்டம்.

    http://coconutboard.gov.in/coconut.htm#sugar

    இது என்ன ஏன் எப்படி என்பது பற்றிய மேலதிக தகவல்களிற்கு, கீழ்க்கண்ட உரல்களினை உரசிப் பார்க்க.

    http://demo.dodotechnologies.in/digest/index.php/health/item/410-palakkad-coconut-producer-company-and-cftri-join-hands-to-take-neera-to-newer-heights

    http://www.coconutboard.nic.in/Producer-companies.htm

    http://www.coconutboard.gov.in/

    http://www.coconutboard.in/innov.htm

    http://coconutboard.gov.in/coconut.htm#sugar

    http://indpad.blogspot.in/2015/10/dovetailing-coconut-farmers-in-palakkad.html

    தொடர்பு கொள்ள வேண்டின் : http://www.keralacoconut.com/contact-us

    Padmanbhan B, Vice President - B2B sales,PCPCL +91 - 9495098243

    ReplyDelete
  2. மீட்டருக்கு மட்டும் இவ்வளவு நீட்டி முழக்கி அறிவியல் விளக்கம் கொடுத்திட்டு, டிகிரிக்கு குடுக்காம விட்டால் எப்படி? அதான் ஒரு நுட்பவாதிகிட்ட கலந்து ஆலோசித்த போழ்து அவர் கொடுத்த விளக்கம் என்னன்னா...: காஃபிய எடுத்து ஆற்றும் போது தம்ப்ளர கொஞ்சம் சாய்த்து பிடிக்கறோம்ல, அப்ப வர்ர அந்த சாய்வு கோணம்???!!! [Angle] இருக்கே அதான் அந்த டிகிரி[Degree] ங்கற துணிபுக்கு வந்தாச்சி...!!! {இதுக்கு இப்படி ஒரு ஆங்கிள் இருக்கறத கண்டு பிடிச்சாச்சி.}

    ReplyDelete
  3. மிகவும் புதிய தகவலாக இருக்கிறது நண்பா.

    ReplyDelete