பம்பாயில் (மும்பை) ஒரு மேல்தட்டு பார்சி குடும்பத்தில் சர் ஹோமி மோடி மற்றும் லேடி ஜெர்பய் அவர்களின் மகனாக வெள்ளித்தட்டுடன்(!) 1918 ம் ஆண்டு ஜனவரி 17 ம் நாள் பிறந்தார். எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியாவிட்டாலும், இங்கு ஒரு செய்தி, அவர் பிறந்தவுடன் ஒரு ஜோசியரால் ராஜவாழ்க்கை வாழுவான் என்று கணிக்கப்பட்டார். ரஸ்சி என்று அவரது பெற்றோர்களால் அழைக்கப்பட, அது அவரது செல்ல பெயராக ஆனது. இங்கு அவரது தாய் ஜெர்பய் அவர்களின் பாரம்பரியமான மதிப்பீடுகளும் அதை அவரது மூன்று மகன்களுக்கும் அளித்ததும் இளம் ரஸ்சி யின் எண்ண உருவாக்கங்களில் ஒரு பகுதியானது. உள்ள உறுதி கொண்ட அந்த பெண்மணியின் வார்த்தைகள் வடிவமைத்த எண்ணங்களின் ஆழம் எப்படிபட்டது என்றால் ரஸ்சியால் தன்னுடைய 90வது வயதிலும் அவற்றின் ஒவ்வொரு வார்த்தையையும் நினைவு கூற முடிகிறது என்பதே!
அவரது தந்தை சர் ஹோமி ஒரு பண்பட்ட அதிர்ந்து பேசாத மனிதராகவும், உறுதியான பட்டவர்த்தனமான நேர்மையின்பால் உண்மையான நம்பிக்கை கொண்டவராகவும், அந்த கொள்கை உறுதி கொண்டவராகவும் அறியப்படுகிறார்.
பள்ளிபருவ படிப்பு பற்றிய விவரணைகள் ஏதுமின்றி அவரது இங்கிலாந்து சென்று படித்த கல்விச்சாலைகள் மற்றும் பல்கலைகழகங்களான ஹார்ரோவ் மற்றும் ஆக்ஸ்போர்ட் (வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஜவஹர்லால் நேரு போன்றோர் படித்த பள்ளி மற்றும் கல்லூரிகள்) ஆகிய இரண்டின் தாக்கம் அவரிடம் ஒரு ஆங்கிலேய கனவானுக்குண்டான நல்ல குணாதிசயங்களையும் பெற வைத்தது.
இங்கு கல்வி கற்கும் போது வரலாற்றுப்பாடத்தின் மூலம் அறிமுகமாகிய நெப்போலியன் போனபார்ட் அவரது ஆதர்ச நாயகனானார்.
கல்லூரிப்படிப்பு முடித்து இந்தியா திரும்பிய ரஸ்சியை, டாட்டா ஸ்டீல் (டிஸ்கோ) ல் அப்போதைய டைரக்டர் - இன் - சார்ஜ் ஆகா இருந்த சர் தலால் அவர்களிடம் அனுப்ப முடிவு செய்தார் அவரது தந்தை.
சர் தலால் அவர்களிடம் அனுப்பப்பட்ட ரஸ்சிக்கு, அலுவலக உதவியாளர் பணி அளிக்கப்பட்டது!!!!!
(தொடரும்)

No comments:
Post a Comment