Sunday, 6 March 2016

அவசரப்பட்டு சிரித்து விட வேண்டாம்


இது மீள் பதிவு. முன்னது : கிண்டலடித்துச் சிரிப்பதாக புகார் வாசிக்கும் குழந்தை

தனக்குக் கொடுத்த நொறுவலை உண்ணச் சொல்லி தலையசைத்து, பின்பு மிகச்சரியாக, உண்டவுடன், காட்டு எனும் குழந்தையின் முன் எதுவுமே சொல்லத் தோன்றுவதில்லை எப்போதும்.

-----***-----***-----***-----***-----***-----

மாற்ற வேண்டிய உடையை எடுத்து வந்து கையில் கொடுத்த பின்பு எட்டி ஓடி விடும் குழந்தையை பிடிக்க முடிந்ததே இல்லை இதுவரையில்.

அங்கிருந்தே உடை மாற்றிவிட சொல்லி, வரும் உத்தரவுகள் திகைப்பையும் சிரிப்பையும் ஒரு சேர வரவழைக்கிறது.

-----***-----***-----***-----***-----***-----

அவசரப்பட்டு சிரித்து விட வேண்டாம். அதற்கும்
கிண்டலடித்துச் சிரிப்பதாக புகார் வாசிக்கும் குழந்தை....

No comments:

Post a Comment