இது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #2/3 இதன் முந்தைய பகுதி #1/3
அந்த பாட்டிகளும் அவர்களது கணவர் ஞாபகார்த்தமான பெட்டிகளுடன் அவ்வப்போது
புண்ணிய யாத்திரை போய் வந்து கொண்டிருந்தனர். மிகவும் அந்நியோன்னியமான இந்த
குடும்பம் அவ்வப்போது சிறு சிறு ஊடல்களுடனும் பெரியோருக்கான
மரியாதைகளுடனும் இனிதே சென்று கொண்டிருந்தது.
யார் கண் பட்டதோ, பிரச்சினை ஒரு கார் வடிவில் வந்தது [மறுபடியும் காரா??!!]. போன மாதம் அவர்கள் வீட்டில் இருந்த மூத்தவர் ஓர் அழகான அவ்டி கார் வாங்கினார்.
இந்த கார் வந்த பின்பும் கூட முதலில் இரண்டு மாதங்கள் ஒன்றும் பெரிய சச்சரவுகள் எதுவும் இல்லாமல்தான் சென்றது.
முதலில் சிறிய அளவில் முறுகல் ஆரம்பித்தது. அந்த தூங்கிய சொந்தக்கார பையனை வண்டியில் ஏற்றுவதே இல்லை என. எதேனும் ஆத்திர அவசரம் என்றாலும் அவனை வண்டியில் ஏற்றுவதில்லை அவர். மற்றபடி நல்ல விதமாகவே பேசி பழகி கொண்டிருந்தார். அதேபோல் அந்த பாட்டிகள் எங்காவது வெளியூர் செல்வதாக - புண்ணிய யாத்திரை - இருந்தாலும், ஸ்டேஷன் / பஸ் ஸ்டாண்ட்டிற்கு கொண்டு விட நிர்தாட்சண்யமாக / கொஞ்சமும் மனதில் ஈரம் இல்லாமல் மறுத்துக் கொண்டு இருந்தார். முறுகல் முற்றி பல ஏச்சும் பேச்சுமாக சென்று ஒரு கட்டத்தில் 'நம்' பஞ்சாயத்துக்கு வந்தது.
இது மாதிரிதான் இருக்கும் அவர் வாங்கியிருந்த அவ்டி காருங்க எல்லாம்...
அவ்டி கார் 1_Audi Car 1 7cc636bf3d796e2e51dc833b6411e4c6. Image Credit :https://pinterest.com/pin/378091331188319122/ |
அவ்டி கார்2_Audi Car 2 Audi Aluminum 1913 www.caraaj.com.jpg |
அவ்டி கார்3_Audi Car 3_Carscoop_AudiTypeM_1 Carscoops.com Image Credit : Carscoops.com |
அவ்டி கார்4_Audi-Car4 |
இது நம்ம ஊரு கார்_HM Indias 1st India made car_5_1428581508 www.indiatimes.com |
வீட்டிற்கு வந்தவர்களுக்கு "மீட்டர் காஃபி" ஒன்றை போட்டு கொடுத்து விட்டு, சரி என்று, நாமளும் கைய புடிச்சு இழுத்தியா கேள்விகளை ஆரம்பித்து கேட்டால்..... ....... அவர் அதற்கு...... .....
-----****------****------****------****-----****-----****------
{என்ன பதில் சொல்லியிருப்பார் என யூகித்து பின்னூட்டுங்கள். முதலில் வரும் சிறந்த, சரியான, பொருத்தமான மற்றும் எதிர்பார்ப்புக்குகந்த பதில்
அளிப்பவருக்கு - தனிப்பட்ட ஒற்றைப் பகுதிக்கு மற்றும் மூன்று பகுதியிலும் சேர்த்து -இந்த தொடரின் மாற்றுத்தலைப்பை தேர்வு செய்யும் உரிமை பரிசாக வழங்கப்படும்°°°. அன்னார் தெரிவு செய்யும் / பரிந்துரை செய்யும் தலைப்பு(ம்) ஒரு மாற்றுத்தலைப்பாக அப்டேட் செய்யப் படும். ***}
°°° வேறு மீச்சிறப்பான தெரிவுகள் பற்றிய ஆலோசனைகள் எனில் தெரியப்படுத்தவும். பரிசீலனை செய்யலாம்.
*** இதில் வரக்கூடிய / வரும் எந்த விதமான குழப்பத்திற்கும் தீர்வில் கம்பெனி முடிவே இறுதி யானது. இங்கு கம்பெனி = Concurrent Musings வலைத்தளம் மற்றும் அதன் நிர்வாக உறுப்பினர் - யாரு - இத எழுதற நாந்தான்.
-----****------****------****------****-----****-----****------
பி.கு : அவர் இதுவரை ஜி.எஸ். டி (G.S.T) சாலை வழியாகவும் வண்டியோட்டிக்கொண்டு எங்குமே சென்றதில்லை.
No comments:
Post a Comment