Tuesday, 22 March 2016

இது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3

இது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3          இதன் முந்தைய பகுதி #1/3 & #2/3

முறுகல் முற்றி பல ஏச்சும் பேச்சுமாக சென்று ஒரு கட்டத்தில் 'நம்' பஞ்சாயத்துக்கு வந்தது.

வீட்டிற்கு வந்தவர்களுக்கு "மீட்டர் காஃபி" ஒன்றை போட்டு கொடுத்து விட்டு, சரி என்று, நாமளும் கைய புடிச்சு இழுத்தியா கேள்விகளை ஆரம்பித்து கேட்டால்..... ....... அவர் அதற்கு...... .....

"தம்பி, எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல....அவங்க கிட்ட கேளுங்க. நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்?  கார்ல கூட்டிட்டுப் போறேன்னுதான் சொல்றேன் ஆனா அவங்கதான் அடம் பிடிக்கிறாங்க."

அந்த வயதான அம்மா, கொஞ்சம் முகத்தில் கடுமையுடன்,
"சொல்றான் தம்பி, ஆனா எங்க வீட்டுக்காரர் ஞாபகமா நாங்க வச்சிருக்கிற அந்த பெட்டிய எடுத்துட்டே வரக்கூடாதுங்கறாம்பா. அது ஆகி வந்த பெட்டி. அத கண்டா ஆகலப்பா இவனுக்கு." "அது மட்டும் இல்ல வர வர சொந்த காரவங்கள கண்டாலும் மதிக்கிறதில்ல....அந்த தாமோதர மாமா புள்ள ரங்கராஜ்இ இங்கதான நம்ம வீட்டுல தங்கி படிக்குது. அத ஒருநாள் வண்டில ஏத்திருப்பானா கேளுங்க.....அன்னிக்கு ஒரு அவசரமா பஸ் ஸ்டாண்டு போறதுக்கு கூட கொண்டு விடலப்பா.  இத்தனைக்கும் அந்த பையன் வீட்டுல இல்லாத காரா / தேரா என்ன? அவனுக்கும் நல்லாவே ட்ரைவிங்லாம் தெரியும்பா. பொல்லாத அவுடி காரு வாங்கிட்டானாம். பெருமை தாங்கலப்பா."

இது என்ன வம்பு.....ஒருவேளை அவ்டி கார் பவிசிற்கு இந்த மிலிட்டரி டிரங்குப் பெட்டி ஒத்து வராது என நினைக்கிறாரோ.....என்று அவரைப் பார்த்தேன். 

"அது ஒன்னுமில்லங்க,... டிராஃபிக்ல பிடிச்சாங்கன்னா வம்பா போயிடுங்களே அதான் "

என்னது......???!!!!@#$%^&*()​+{}|\":<>/

ஆமாங்க, 'டிரங்(குப் பெட்டி in) அன் ட்ரைவ்'னு புடிச்சிட்டாங்கன்னா அதான் சார்......._/\_+_/\_😉😣😥😪

ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்......

'அது சரி, அந்த ரங்கு பையன ஏன் வண்டில ஏத்த மாட்டேன்றீங்க?"

"தம்பி.... உங்களுக்கு தெரியாதது இல்ல. அவன், நம்ப ரங்கு...யாரு...நம்ம?! தாமோதர மாமா பையன். அதுனாலதான். "

என்னது....?😅🙅😵😭😟😩😴 ???!!!!@#$%^&*()​+{}|\":<>/
{இதுல என்னங்க உங்களுக்கு பிரச்சனை?? அதும் நம்ம தாமோதர மாமான்றீங்க வேற}

இல்லங்க, அவம் பேரும் D.ரங்கு ன்னு வருதுங்களா அதான்.....ஆமாங்க,
'டி ரங்க(ராஜ்)ஆ அன் ட்ரைவ்'னு புடிச்சிட்டாங்கன்னா அதான் சார்......._/\_+_/\_😉😣😥😪

😇😇😇😇😇😇😇😂😂😂😂😇😇😇😇😇😇😇

;-) ;-)-----****------****------****------****-----****-----****------

கதை?!ப் போக்கின் படம் போடுற லாஜிக் படி பார்த்தா இந்த பகுதிக்கு ஒரு பாட்டி படமும் அந்த ரங்கா பையனோட படமும் போடணும். இல்ல இருக்குற நிலைமைக்கு இதை படிச்சவங்களோட ரியாக்-ஷன் படம் போடணும்.

எல்லாஞ்சரி, அப்புறம், அந்த ஜி.எஸ்.டி ரோடு பத்தின பின் குறிப்பு என்ன ஆச்சு அப்படின்ற நினைவுத்திறனாளிகளே, உங்களுக்காகவே, கேட்டனே....."அதுவா தம்பி, '(கிராண்ட் சதர்ன்) டிரங்க் அன் டிரைவ்'னு புடிச்சிட்டாங்கன்னா அதான்".

சரி, இப்போதைக்கு பாட்டி படம். 

https://mannairvs.wordpress.com/2011/07/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/^^^^^^^^^^^  இது மட்டும் ஒரு சேட்டைக்கார பாட்டி : சேட்டைக்கார பாட்டி – பிரத்யேக அதிர்ச்சிப் படம் உள்ளே  ^^^^^^^^^^^  கவனம் தேவை. அலுவலகம் மற்றும் பொது இடங்களில் சுட்டும் முன்.

இமேஜ் கிரடிட்ஸ் : கூகிளார்.

அந்த ரங்கு பையன்கிட்ட, அவம் ஃபோட்டோ கேட்டுருக்கேன். வந்த உடனே போட்டுடலாம். அப்புறம் அந்த கார் ஓனெரொட படம் சுய விவர பகுதில இருக்கு. பி.கு : டி.ரங்கா ஃபோட்டோ கிடைக்கலேன்னா, எதுக்கும் இருக்கட்டுமேனு, ஒரு மாறுதலுக்காக வேற ஒரு ரங்கா ஃபோட்டோ கேட்ருக்கேன், அவன் குடுத்தான்னா அதையே போட்டுறலாம். என்னங்கிறீங்க??!!!(:-)

இதப் படிச்ச நீங்க யாரவது செல்ஃபி எடுத்து குடுத்து போட சொன்னீங்கன்னா, அனுப்பி வைங்க. அப்லோட்+++ பண்ணிடலாம் - +++பொதுக்குழு அனுமதிக்கு உட்பட்டது.


-----****------****------****------****-----****-----****------Image Credit : srirangam.org
எம்(ம) ரங்கராஜன்
இது....., எம்(ம) ரங்கராஜன் என்று அழைக்கப்படும் நம்ம அரங்கராஜன்.Ponnadi
பொன்னடி


"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை"


No comments:

Post a Comment